- Prep
- 10 min
- Cook
- 15 min
- Total
- 25 min
- Serves
- 5
- Cuisine
- Indian, TAMIL
- Course
- LUNCH
மதிய வேளையில் சிம்பிளாக சமையலை முடிக்க நினைக்கிறீர்களா? அதுவும் குழந்தைகள் விரும்பி சாப்பிடும் வகையிலான ஒரு சமையலை செய்ய நினைக்கிறீர்களா? அப்படியானால் சிக்கன் மற்றும் புளிச்சக்கீரை வைத்து ஒரு ரெசிபி செய்யுங்கள். அதுவும் வழக்கமாக செய்வது போன்று சிக்கன் வறுவல், சிக்கன் 65, சிக்கன் குழம்பு என்று செய்யாமல் வித்தியாசமாக புலாவ் செய்யுங்கள். குறிப்பாக சிக்கன் மற்றும் புளிச்சக்கீரை கொண்டு புலாவ் செய்யும் போது, அந்த ரெசிபி ருசியாக இருப்பதோடு, சத்தானதாகவும் குழந்தைகளுக்கு மிகவும் பிடித்ததாகவும் இருக்கும்.
ஒரே ஒருமுறை இந்த புலாவ் செய்து கொடுங்கள், நிச்சயம் அடிக்கடி செய்து கொடுக்க சொல்லி கேட்பார்கள் அந்த அளவுக்கு ருசியாக இருக்கும். ஆந்திரா ஸ்பெஷலான கோங்குரா உணவுப் பிரியர்கள் மத்தியில் படு ஃபேமஸ். கோங்குரா இலைகள் ஆந்திரா மக்களின் மதிய உணவின் மூச்சு காற்று என்றே சொல்லலாம்.
ஆந்திரா மக்களுக்கு மட்டுமல்லாமல் நம்முடைய தமிழக மக்களுக்கும் ஆந்திரா உணவு என்றால் மிகவும் பிடிக்கும். அதனால் தான் இன்றைய பதிவில் நாம் ஆந்திரா ஸ்டைலில் கோங்குரா சிக்கன் புலாவ் எப்படி செய்வது என்பதை பற்றி விரிவாக பார்க்க இருக்கின்றோம். ஆரோக்கியம் மற்றும் சுவை நிறைந்த இந்த ஆந்திரா ஸ்பெஷல் கோங்குரா சிக்கன் புலாவ் ரெசிபியை நீங்களும் வீட்டில் செய்து பாருங்கள். இந்த ரெசிபியை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடுவர்.
இதனையும் படியுங்கள் : சிக்கன் டிக்கா ரோல் இந்த மாதிரி ஒரு தடவை செஞ்சு பாருங்க!!
Ingredients
Method
முதலில் ஒரு கடாயை அடுப்பில் வைத்து சிறிதளவு எண்ணெய் விட்டு புளிச்சக்கீரையை சேர்த்து நன்கு வதக்கி, மிக்ஸியில் சேர்த்து நன்கு அரைத்து எடுத்துக் கொள்ளவும்.
பின் ஒரு அடிகனமான பாத்திரத்தை அடுப்பில் வைத்து நெய் சேர்த்து சூடானதும் முந்திரி, சீரகம், பட்டை, கிராம்பு, ஏலக்காய், அன்னாசி பூ, ஜாவித்திரி, பிரியாணி இலை, பெரிய வெங்காயம் சேர்த்து நன்கு வதக்கவும்.
வெங்காயம் வதங்கியதும் பச்சை மிளகாய், இஞ்சி பூண்டு விழுது, புதினா, கொத்தமல்லி சேர்த்து வதக்கி அதனுடன் சிக்கன் சேர்த்து நன்கு கலந்து மூடி வைத்து இரண்டு நிமிடங்கள் வேக விடவும்.
அதன்பிறகு மஞ்சள் தூள், மிளகாய் தூள், கரம் மசாலா தூள், உப்பு மற்றும் அரைத்து வைத்துள்ள புளிச்ச கீரை சேர்த்து மூடி வைத்து வேக விடவும்.
பின் பாசுமதி அரிசியை சேர்த்து தேவையான அளவு உப்பு மற்றும் தண்ணீர் விட்டு மூடி வைத்து வேக விடவும். சாதம் வெந்து வந்ததும் கொத்தமல்லி, நெய் சேர்த்து கலந்து விடவும். அவ்வளவுதான் சுவையான கோங்குரா சிக்கன் புலாவ் தயார்.






