- Prep
- 10 min
- Cook
- 15 min
- Total
- 25 min
- Serves
- 4
- Cuisine
- Indian, TAMIL
- Course
- LUNCH
எப்போமே நம்ம வீட்ல நல்லா ரெட் கலர்ல காரசாரமா மீன் ப்ரை செஞ்சு சாப்பிட்டு இருப்போம். நல்லா சுட சுட மீன் குழம்பு வச்சு அந்த மீன் ஃப்ரை பக்கத்துல வச்சு சேர்த்து சாப்பிடும்போது அவ்ளோ ருசியா இருக்கும். ஒரு சிலருக்கு சிக்கன் மட்டன் கூட பிடிக்காது ஆனா மீன் ரொம்ப ரொம்ப பிடிக்கும். மீன் குழம்பு வச்சு சாப்பிடும்போது அவ்ளோ ரசிச்சு ருசிச்சு சாப்பிட்டு வாங்க. வீட்ல இருக்குற குழந்தைகள் மீன் குழம்பு சாப்பிடலனாலும் மீன் ப்ரை கண்டிப்பா சாப்பிடுவாங்க. வீட்ல அம்மா பொறிச்சு கொடுக்க சாப்பிட்டுகிட்டே இருக்கணும் போல தோணும்.
அந்த அளவுக்கு நல்லா கிரிஸ்பியா மொறு மொறுன்னு பொரிச்சு கொடுத்தாங்கனா ரொம்ப ரொம்ப சூப்பராவே இருக்கும். ஆனா எப்பவுமே நம்ம வீட்ல ஒரே மாதிரியான மசாலா அரைச்ச மீன் பிரை செஞ்சு போர் அடிச்சு போச்சு அப்படின்னா இந்த கிரீன் மசாலா அரைச்சு அதுல மீன் ஃப்ரை செஞ்சு பாருங்க. அவ்ளோ ருசியா இருக்கும். இந்த க்ரீன் மசாலாவில் நம்ம மல்லி, புதினா கருவேப்பிலை எல்லாமே சேர்க்கிறதால இதோட வாசனையும் ரொம்ப சூப்பரா இருக்கும். இத சேலோ ஃப்ரை பண்ணி எடுக்கும்போது மேல் மொறுமொறுன்னு உள்ள சாப்டா சாப்பிடுவதற்கு நீங்க நினைச்சு பார்க்க முடியாத அளவுக்கு டேஸ்ட்டாவும் இருக்கும்.
வீட்டுக்கு யாராவது விருந்தாளிகள் வந்தா கூட அவங்களுக்கு ரெடிமேட் மசாலா வாங்கி மீன் ஃப்ரை செஞ்சு கொடுக்காம சூப்பரா இந்த மசாலா அரைச்சு நீ ஃப்ரை செஞ்சு குடுங்க. இந்த மசாலாவை நம்ம அம்மில அரைச்சு வச்சா கூட ருசி சூப்பரா இருக்கும் ஆனா அம்மி இல்லாதவங்க மிக்ஸியில் அரைத்து வைக்கலாம் சுட சுட மீன் குழம்பு வச்சு இந்த கிரீன் மசாலா மீன் ப்ரை வச்சு சாப்பிட்டு பாருங்க அதுக்கப்புறம் அடிக்கடி இந்த கிரீன் மசாலா மீன் ப்ரை உங்க வீட்ல செய்வீங்க. இப்ப வாங்க இந்த ருசியான கிரீன் மசாலா மீன் ஃப்ரை எப்படி செய்றதுன்னு பார்க்கலாம்.
இதனையும் படியுங்கள் : செட்டிநாடு மத்தி மீன் குழம்பு இப்படி ஒரு தடவை செஞ்சு அசத்துங்க!
Ingredients
Method
மீனை நன்கு கழுவி சுத்தம் செய்து எடுத்துக் கொள்ளவும்.
ஒரு மிக்ஸி ஜாரில் பச்சை மிளகாய் ஒரு துண்டு இஞ்சி பூண்டு கருவேப்பிலை ஒரு கைப்பிடி அளவு புதினா இலைகள் கொத்தமல்லி இலைகள் சிறிதளவு உப்பு சீரகத்தூள் கரம் மசாலா அனைத்தையும் சேர்த்து நன்றாக தண்ணீர் ஊற்றாமல் அரைத்துக் கொள்ளவும்.
பிறகும் அதனை மீனில் தடவி அரைமணி நேரம் பிரிட்ஜுக்குள் வைத்து ஊற விடவும்.
அரை மணி நேரம் கழித்து அரிசி மாவை நன்றாக தடவி தோசை கல்லில் எண்ணெய் ஊற்றி இரண்டு பக்கமும் பொரித்து எடுத்தால் சுவையான கிரீன் மசாலா மீன் ப்ரை தயார்.






