Home அசைவம் செட்டிநாடு மத்தி மீன் குழம்பு இப்படி ஒரு தடவை செஞ்சு அசத்துங்க!

செட்டிநாடு மத்தி மீன் குழம்பு இப்படி ஒரு தடவை செஞ்சு அசத்துங்க!

மீன் குழம்பு அப்படின்னு சொன்னாலே நிறைய பேருக்கு வாயில எச்சில் வரும் அந்த அளவுக்கு சில பேரு மீன் குழம்புக்கு அடிமையா இருப்பாங்க. அதிலேயும் பழைய மீன் குழம்புக்கு நிறைய ஃபேன்ஸ் இருப்பாங்க அப்படின்னு சொல்லலாம். மீன்ல பல வகைகள் இருக்கு இருந்தாலும் கூட ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு விதமான மீன் ரொம்ப பிடிக்கும் அந்த வகையில இன்னைக்கு நம்ம நிறைய பேருக்கு ரொம்ப புடிச்ச மத்தி மீன் பிடிச்சு செட்டிநாடு ஸ்டைலில் ஒரு செட்டிநாடு மத்தி மீன் குழம்பு தான் எப்படி செய்வது என்று பார்க்க போறோம்.

-விளம்பரம்-

நீங்க உங்க வீட்ல ஒரு மாதிரியான முறையில் மீன் குழம்பு வைத்து சாப்பிட்டு இருப்பீங்க ஆனா இப்போ நம்ம வைக்கப் போற இந்த செட்டிநாடு ஸ்டைல் மத்தி மீன் குழம்பு ரொம்ப டேஸ்டா இருக்கும். உங்க வீட்ல ஒரே ஒரு தடவை இந்த மாதிரியான முறையில் செஞ்சு பாருங்க. மீன் குழம்பை வேணாம்னு சொல்றவங்க கூட விரும்பி சாப்பிடுவாங்க. நல்லா காரசாரமா புளிப்பா இந்த மீன் குழம்பு சாப்பிடுவதற்கு அவ்வளவு ருசியா இருக்கும். இந்த மீன் குழம்பு வச்சு கூடவே ரெண்டு மத்தி மீன பொரிச்சு வச்சு குடுங்க அதுதாங்க சொர்க்கம் அவ்வளவு விரும்பி சாப்பிடுவாங்க.

நம்ம இதுல ஒரு டேஸ்ட்டா இருக்கு அதை சேர்க்கிறதால குழம்புக்கு இன்னும் கொஞ்சம் மணமும் ருசியும் கிடைக்கும். இந்த ருசியான மீன் குழம்புக்கு கண்டிப்பா உங்க வீட்ல இருக்குற எல்லாருமே அடிமையாகிடுவாங்க. சின்ன குழந்தைகள் இருந்து பெரியவங்க வரைக்கும் எல்லாருமே இந்த செட்டிநாடு மத்தி மீன் குழம்பு விரும்பி சாப்பிடுவாங்க. ஒரு தட்டு சாப்பாடு சாப்பிடுறவங்க கூட ரெண்டு தட்டு வாங்கி சாப்பிடுவாங்க அந்த அளவுக்கு இந்த மீன் குழம்போட டேஸ்ட் சூப்பரா இருக்கும். இப்ப வாங்க இந்த செட்டிநாடு ஸ்டைல் மத்தி மீன் குழம்பு எப்படி வைக்கிறது என்று பார்க்கலாம்.

Print
3 from 3 votes

செட்டிநாடு மத்தி மீன் குழம்பு | Chettinad Matthi Fish Curry Recipe In Tamil

மீன் குழம்பு அப்படின்னு சொன்னாலே நிறைய பேருக்கு வாயில எச்சில் வரும் அந்த அளவுக்கு சில பேரு மீன் குழம்புக்கு அடிமையா இருப்பாங்க. அதிலேயும் பழைய மீன் குழம்புக்கு நிறைய ஃபேன்ஸ் இருப்பாங்க அப்படின்னு சொல்லலாம். மீன்ல பல வகைகள் இருக்கு இருந்தாலும் கூட ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு விதமான மீன் ரொம்ப பிடிக்கும் அந்த வகையில இன்னைக்கு நம்ம நிறைய பேருக்கு ரொம்ப புடிச்ச மத்தி மீன் பிடிச்சு செட்டிநாடு ஸ்டைலில் ஒரு செட்டிநாடு மத்தி மீன் குழம்பு தான் எப்படி செய்வது என்று பார்க்க போறோம். நீங்க உங்க வீட்ல ஒரு மாதிரியான முறையில் மீன் குழம்பு வைத்து சாப்பிட்டு இருப்பீங்க ஆனா இப்போ நம்ம வைக்கப் போற இந்த செட்டிநாடு ஸ்டைல் மத்தி மீன் குழம்பு ரொம்ப டேஸ்டா இருக்கும் உங்க வீட்ல ஒரே ஒரு தடவை இந்த மாதிரியான முறையில் செஞ்சு பாருங்க.‌
Prep Time10 minutes
Active Time20 minutes
Total Time30 minutes
Course: LUNCH
Cuisine: Indian, TAMIL
Keyword: Chettinad Matthi Fish Curry
Yield: 4 People
Calories: 109kcal

Equipment

  • 1 பவுள்
  • 1 கடாய்
  • 1 மிக்ஸி

தேவையான பொருட்கள்

  • 1 கி மத்தி மீன்
  • 15 சின்ன வெங்காயம்
  • 3 தக்காளி
  • புளி நெல்லிக்காய் அளவு
  • 3 டீஸ்பூன் சோம்பு
  • 1 டீஸ்பூன் மிளகு
  • 1 டீஸ்பூன் வெந்தயம்
  • உப்பு தேவையான அளவு
  • எண்ணெய் தேவையான அளவு
  • 1 டீஸ்பூன் மிளகாய்த்தூள்
  • 2 டீஸ்பூன் மல்லி தூள்
  • 5 பல் பூண்டு
  • 2 கொத்து கறிவேப்பிலை

செய்முறை

  • முதலில் ஒரு மிக்ஸி ஜாரில் ஐந்து சின்ன வெங்காயம் ஐந்து பல் பூண்டு ஒரு கொத்து கருவேப்பிலை இரண்டு டீஸ்பூன் சோம்பு, ஒரு டீஸ்பூன் மிளகு சேர்த்து நன்றாக அரைத்து கொள்ளவும்.
  • ஒரு கடாயில் நல்லெண்ணெய் சேர்த்து ஒரு டீஸ்பூன் சோம்பு ஒரு டீஸ்பூன் வெந்தயம் ஒரு கொத்து கருவேப்பிலை சேர்த்து தாளித்துக் கொள்ளவும்.
  • சின்ன வெங்காயத்தை மிக்ஸி ஜாரில் சேர்த்து லேசாக அரைத்து அதையும் சேர்த்து நன்றாக வதக்கவும்.
  • தக்காளி பழத்தை சிறிதாக நறுக்கி அதனையும் சேர்த்து நன்றாக வதக்கி அரைத்து வைத்துள்ள விழுதையும் சேர்த்து வதக்கவும்.
  • எடுத்து வைத்துள்ள தனி மிளகாய் தூள் மல்லித்தூள் மஞ்சள் தூள் உப்பு சேர்த்து நன்றாக கலந்து புளியையும் நன்றாக கரைத்து ஊற்றி குழம்பை கொதிக்க வைக்கவும்.
  • குழம்பு நன்றாக கொதித்த பிறகு கழுவி வைத்துள்ள மத்தி மீனை சேர்த்து ஐந்து நிமிடங்கள் கழித்து அடுப்பை அணைத்தால் ஒரு அட்டகாசமான செட்டிநாடு ஸ்டைல் மத்தி மீன் குழம்பு தயார்.

Nutrition

Serving: 1100 g | Calories: 109kcal | Carbohydrates: 3.29g | Protein: 24.72g | Sodium: 268mg | Potassium: 200mg | Vitamin A: 329IU | Vitamin C: 127mg | Calcium: 104mg | Iron: 38mg

இதனையும் படியுங்கள் : சுவையான செட்டிநாடு ஸ்டைல் வெஜிடபிள் குருமா இப்படி செய்து பாருங்கள் உடனே அனைத்தும் காலியாகிவிடும்!!!