இந்த வெயிலுக்கு கொய்யாப்பழம் மில்க் ஷேக் ஒரு தடவை செஞ்சு குடிச்சு பாருங்க!!

- Advertisement -

ஸ்ட்ராபெரி மில்க் ஷேக் , வெண்ணிலா மில்க் ஷேக் ,சாக்லேட் மில்க் ஷேக், காபி மில்க் ஷேக் அப்படின்னு நிறைய ரெசிபிஸ் செஞ்சு குடிச்சி இருப்பீங்க. ஆனா இந்த வெயிலுக்கு கொய்யாப்பழம் மில்க் ஷேக் ஒரு தடவை ட்ரை பண்ணி பாருங்க அதுக்கப்புறம் அடிக்கடி செய்வீங்க. கொய்யா பழம் இப்போ அடிக்கடி கிடைக்கும் அதுல ரொம்ப பழமாவும் இல்லாம ரொம்ப காயாகவும் இல்லாமல் இருக்கக்கூடிய கொய்யாப்பழம் வாங்கி அதுல ஒரு சூப்பரான மில்க் ஷேக் செஞ்சு பாருங்க டேஸ்ட் அட்டகாசமா இருக்கும். சுவையான இந்த மில்க்ஷேக்ல கொஞ்சமா மிளகாய் தூள் உப்பு சேர்த்து குடித்தால் அவ்வளவு ருசியா இருக்கும்.

-விளம்பரம்-

டேஸ்டான அந்த ரெசிபிக்கு கண்டிப்பா வீட்ல இருக்குற எல்லாரும் அடிமையாகிடுவாங்க. இந்த வெயிலுக்கு வீட்ல இருக்கக்கூடிய குழந்தைகள் ஏதாவது ஒன்று கேட்டுக்கிட்டே இருப்பாங்க. அந்த மாதிரி கேட்டு அடம் பிடிக்கிற குழந்தைகளுக்கு இந்த சுவையான கொய்யாப்பழம் மில்க் ஷேக் ரெசிபி செஞ்சு கொடுங்க. கண்டிப்பா வேண்டாம்னு சொல்லாம மிச்சம் வைக்காம குடிச்சு முடிச்சிடுவாங்க. தேவைப்பட்டால் ஐஸ்கட்டிகள் சேர்த்துக் கொள்ளலாம். இந்த வெயிலுக்கு ஜில்லுனு குடிக்கும்போது அவ்ளோ சூப்பரா இதமா இருக்கும்.

- Advertisement -

கண்டிப்பாக கொய்யா பழம் இருந்தால் இன்னைக்கே உங்க வீட்ல இதை ட்ரை பண்ணி பாருங்க. கொய்யாப்பழம் ரொம்ப ரொம்ப விலை குறைவாக கிடைக்கக்கூடிய ஒரு பழம் ஆனால் அதுல நிறைய ஆரோக்கிய நன்மைகள் இருக்கு. அதனால கண்டிப்பா கொய்யாப்பழம் மில்க் ஷேக் ஒரு தடவ ட்ரை பண்ணி பாருங்க கொய்யாப்பழத்தை அப்படியே கொடுத்தா குழந்தைகள் சாப்பிடாம மறுக்குறாங்க அப்படின்னா அவங்களுக்கு இந்த மாதிரி ஒரு ருசியான கொய்யாப்பழம் மில்க் ஷேக் ரெசிபி செஞ்சு கொடுங்க. இப்ப வாங்க இந்த ருசியான கொய்யாப்பழம் மில்க் ஷேக் எப்படி செய்வது என்று பார்க்கலாம்.

Print
No ratings yet

கொய்யாப்பழ மில்க் ஷேக் | Guava Milkshake Recipe In Tamil

ஸ்ட்ராபெரி மில்க் ஷேக் , வெண்ணிலா மில்க் ஷேக் ,சாக்லேட் மில்க் ஷேக், காபி மில்க் ஷேக் அப்படின்னு நிறைய ரெசிபிஸ் செஞ்சு குடிச்சி இருப்பீங்க. ஆனா இந்த வெயிலுக்கு கொய்யாப்பழம் மில்க் ஷேக் ஒரு தடவை ட்ரை பண்ணி பாருங்க அதுக்கப்புறம் அடிக்கடி செய்வீங்க. கொய்யா பழம் இப்போ அடிக்கடி கிடைக்கும் அதுல ரொம்ப பழமாவும் இல்லாம ரொம்ப காயாகவும் இல்லாமல் இருக்கக்கூடிய கொய்யாப்பழம் வாங்கி அதுல ஒரு சூப்பரான மில்க் ஷேக் செஞ்சு பாருங்க டேஸ்ட் அட்டகாசமா இருக்கும். சுவையான இந்த மில்க்ஷேக்ல கொஞ்சமா மிளகாய் தூள் உப்பு சேர்த்து குடித்தால் அவ்வளவு ருசியா இருக்கும். டேஸ்டான அந்த ரெசிபிக்கு கண்டிப்பா வீட்ல இருக்குற எல்லாரும் அடிமையாகிடுவாங்க. கண்டிப்பாக கொய்யா பழம் இருந்தால் இன்னைக்கே உங்க வீட்ல இதை ட்ரை பண்ணி பாருங்க.
Prep Time5 minutes
Active Time10 minutes
Total Time15 minutes
Course: Drinks
Cuisine: Indian
Keyword: Guava Milkshake
Yield: 3 People
Calories: 119kcal

Equipment

  • 1 பவுள்
  • 1 மிக்ஸி

தேவையான பொருட்கள்

  • 2 கொய்யாப்பழம்
  • 1 டீஸ்பூன் மிளகாய்த்தூள்
  • 1/2 டீஸ்பூன் உப்பு
  • 1/2 லி பால்
  • ஐஸ் கட்டிகள் தேவையான அளவு
  • 2 டேபிள் ஸ்பூன் கண்டென்ஸ்டு மில்க்

செய்முறை

  • கொய்யா பழத்தை சிறிய துண்டுகளாக நறுக்கி மிக்ஸி ஜாரில் சேர்த்துக் கொள்ளவும்.
  • அதனுடன் காய்ச்சி ஆற வைத்த பால் கன்டென்ஸ்டு மில்க் சேர்த்து அரைத்து எடுத்துக் கொள்ளவும்.
  • மிளகாய் தூள் உப்பு இரண்டையும் கலந்து வைத்துக் கொள்ளவும்.
  • பரிமாறப்போகும் டம்ளரில் அரைத்து வைத்துள்ள மில்க் ஷேக் சேர்த்து அதன் மேல் ஐஸ் கட்டி உப்பு மிளகாய் தூள் தூவி குடித்தால் சுவை அருமையாக இருக்கும்.

Nutrition

Serving: 400g | Calories: 119kcal | Carbohydrates: 3.6g | Protein: 12g | Fat: 2.9g | Sodium: 42mg | Potassium: 126mg | Fiber: 8.9g | Sugar: 5g | Vitamin A: 41IU | Vitamin C: 228mg | Calcium: 15mg | Iron: 11mg

இதனையும் படியுங்கள் : மாம்பழ மில்க் ஷேக் ஒரு முறை இப்படி செய்தால், இனி மாம்பழமாக சாப்பிட மாட்டீங்க , மில்க் ஷேக் தான் செய்து குடிப்பீர்கள்!