- Prep
- 5 min
- Cook
- 10 min
- Total
- 15 min
- Serves
- 4
- Cuisine
- Indian, TAMIL
- Course
- LUNCH
புளி ரசம், தக்காளி ரசம், மாங்காய் ரசம் அப்படின்னா விதவிதமான ரசம் செஞ்சி இருக்கீங்க. ஆனா கொய்யாப்பழம் வச்சு கண்டிப்பா இந்த ரசம் செஞ்சு பார்த்திருக்கவே மாட்டீங்க. ஒரே ஒரு தடவை செஞ்சு பாருங்க கண்டிப்பா உங்களுக்கு ரொம்ப பிடிக்கும் உங்க வீட்ல இருக்குறவங்களுக்கும் ரொம்ப ரொம்ப பிடிக்கும். கொய்யாப்பழம் வெச்சு கொய்யாப்பழம் அல்வா செஞ்சிருப்பீங்க. கொய்யாப்பழம் வைத்து ஜூஸ் போட்டு குடிச்சிருப்பீங்க ஆனா ரசம் ரொம்பவே புதுமையான ஒரு ரெசிபி. சுட சுட சாதத்தில் இந்த ரசம் ஊத்தி கூடவே கொஞ்சமா உருளைக்கிழங்கு பிரை வைத்து சாப்பிட்டால் சுவை ரொம்பவே அருமையாக இருக்கும்.
குக் வித் கோமாளி சீசன் 6 ல் பிரியா ராமன் இந்த ரெசிபியை செய்து அசத்திருப்பாங்க. நீங்களும் அதை பார்த்திருக்கலாம் அந்த ரெசிபி எப்படி செய்றதுன்னு உங்களுக்கு ஒரே குழப்பமா இருந்திருக்கும். மேலும் கொய்யா பழத்துல எப்படி ரசம் செய்வது? அது நல்லா இருக்குமா அப்படின்னு நினைச்சு இருப்பீங்க? இதே செய்முறையில் செஞ்சு பாருங்க. டேஸ்ட் ரொம்பவே அற்புதமாக இருக்கும். இந்த சுவையான கொய்யாப்பழ ரசம் ரொம்ப ரொம்ப வித்தியாசமான ஒரு ரெசிபி. வித்தியாசமாக ஏதாவது ஒரு ரெசிபி.
நீங்க அடிக்கடி செய்து பார்த்தால் உங்களுக்கும் சமையல் மேல ஒரு இன்ட்ரஸ்ட் வரும் மேலும் சாப்பிடறவங்களுக்கும் இது ரொம்ப ரொம்ப பிடிக்கும். வீட்டுக்கு யாராவது விருந்தாளிகள் வந்தா அவங்களுக்கு இதை செய்து கொடுத்து அசத்துங்கள். இந்த சூப்பரான ரெசிபியை கண்டிப்பா விரும்பி சாப்பிடுவாங்க. இனிப்பா புளிப்பா காரமா சாப்பிடுவதற்கு ரொம்ப ருசியாக இருக்கும். இதுல புளிப்புக்காக நம்ம எலுமிச்சை சாறு சேர்க்க கண்டிப்பா நீங்க நினைக்கிறது விட இந்த ரெசிபி ரொம்பவே சூப்பரா இருக்கும். இப்ப வாங்க கொய்யாப்பழம் வைத்து எப்படி இந்த ரசம் வைப்பது என்று பார்க்கலாம்.
இதனையும் படியுங்கள் : கொய்யா பழ ஊறுகாய் ஒருமுறை இப்படி செஞ்சு வச்சுக்கிட்டா 6 மாசத்துக்கு சூடான சாதம், ரசம், சாம்பார், தயிருக்கு தொட்டுக் கொள்ளலாம்!
Ingredients
Method
கொய்யா பழத்தை நறுக்கி மிக்ஸி ஜாரில் சேர்த்து அரைத்து வடிகட்டி எடுத்துக் கொள்ளவும்.
ஒரு மிக்ஸி ஜாரில் தக்காளி, பூண்டு, மல்லி விதைகள் ,மிளகு, சீரகம், நான்கு காய்ந்த மிளகாய் சேர்த்து கொரகொரப்பாக அரைத்துக் கொள்ளவும்.
இந்த விழுதை கொய்யாப்பழ கரைசலில் சேர்த்து மஞ்சள் தூள் உப்பு பெருங்காயத்தூள் சேர்த்து கலந்து அடுப்பில் வைத்து கொதிக்க வைக்கவும்.
ஒரு கடாயில் எண்ணெய் சேர்த்து கடுகு உளுந்து பருப்பு கருவேப்பிலை இரண்டு காய்ந்த மிளகாயை சேர்த்து தாளித்து கொதிக்க வைத்ததில் சேர்த்துக் கொள்ளவும்.
இறுதியாக எலுமிச்சை சாறு கொத்தமல்லி இலைகள் தூவி இறக்கினால் சுவையான கொய்யாப்பழ ரசம் தயார்.






