நவகிரகங்களிலேயே குரு பகவான் தான் மிகவும் மங்களகரமானவர். குருபகவான் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு மாறும் பொழுது அனைத்து ராசிகளுக்கும் அதனுடைய தாக்கம் ஏற்படும். சில கிரகங்கள் தங்கள் ராசியை மிக விரைவாக மாற்றிக் கொள்ளும். சில ராசிகள் சில வருடங்கள் ஒரே ராசியில் இருக்கும். ஜோதிடத்தில், குரு பகவான் என அழைக்கப்படும் வியாழன் ஒரு வருடத்திற்கு ஒரு முறை தனது ராசியை மாற்றிக் கொள்கிறார். ஆண்டுக்கு ஒரு முறை ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு மாறக்கூடிய குரு பகவானால் அந்த ராசிக்கு பலவிதமான நன்மைகள் நடக்கும். ஒரு ராசி உச்சம் பெற்றால் அதனால் பல விதமான நன்மைகள் கிடைக்கும் என்று சொல்வார்கள்.
பொதுவாக குருபகவான் குழந்தை பாக்கியம் தொழில் செல்வம் மகிழ்ச்சி திருமணமாகாதவர்களுக்கு திருமணம் என பலவிதமான நன்மைகளை நடத்திக் கொடுப்பார். அறிவு, மகிழ்ச்சி, கல்வி, திருமணம் மற்றும் செழிப்பு ஆகியவற்றிற்கு காரணமான கிரகமாக இருக்கும் குரு பகவான், வருகிற ஆகஸ்ட் 20 ஆம் தேதி குரு பகவான் மிருகசிரீட நட்சத்திரத்தில் பெயர்ச்சியாக உள்ளார். குரு நட்சத்திர பெயர்ச்சியின் தாக்கம் அனைத்து ராசிகளிலும் காணப்படும். எனினும் சில ராசிகளில் இதனால் அதிகப்படியான நற்பலன்கள் ஏற்படும். இவர்களுக்கு வியாபாரம் விருத்தி அடையும். அந்த ராசிகாரர்கள் யார் என இந்த ஆன்மீகப் பதிவில் பார்க்கலாம்.
மேஷம்
மிருகசிரீட நட்சத்திரத்தில் குரு பெயர்ச்சி மேஷ ராசிக்காரர்களின் வாழ்வில் அதிசயங்களை செய்யும். நிதி நிலை வலுவாக இருக்கும். நிதி ஆதாயம் உண்டாகும். வாழ்க்கையில் முன்னேற வேகம் காட்டுவது நல்லது. மனக்குழப்பம் நீங்கும். தீவிர உழைப்பும், அதிக முயற்சிகளுடன் காரியங்களில் ஈடுபடுவீர்கள். மனம் மகிழும் சம்பவங்கள் நடக்கும். மனகவலை குறையும். ஆன்மிகத்தில் நாட்டம் உண்டாகும். எல்லாவகையிலும் சாதகமான பலன் கிடைக்க பெறுவீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்கள் தன்னம்பிக்கையுடன் செயல்பட்டு வெற்றி பெறுவார்கள். மேலதிகாரிகள் ஆதரவும் கிடைக்கும். தொழில் தொடர்பான விஷயங்கள் அனுகூலமாக நடக்கும்.
கன்னி
மிருகசிரீட நட்சத்திரத்தில் குரு பெயர்ச்சி அடையப் போவதால் கன்னி ராசிக்காரர்களுக்கு சுப பலன்கள் கிடைக்கும். நிதி ஆதாயம் உண்டாகும். வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும். தொழில் வியாபாரத்தில் கூடுதல் லாபம் கிடைக்கும் என்ற தன்னம்பிக்கை ஏற்படும். கணவன், மனைவி ஒருவருக் கொருவர் மனம் விட்டு பேசுவதன் மூலம் இடைவெளி குறையும். உங்கள் புத்திக்கூர்மை உங்களுக்கு வெற்றியைத் தேடித் தரும். பழைய பாக்கிகள் வசூலாவதில் வேகம் காணப்படும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் புத்திசாதூரியத்தால் வேலைகளை திறமையாக செய்து முடித்து பாராட்டு பெறுவீர்கள். பதவி உயர்வு கிடைக்கலாம். குடும்பத்தில் நிம்மதி காணப்படும்.
மகரம்
குரு நட்சத்திர பெயர்ச்சி மகர ராசிக்காரர்களுக்கு அற்புதமான பலனை தரும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். சமூகத்தில் பாராட்டுகளை பெறுவீர்கள். வியாபாரிகள் போட்டிகளையும், பொறாமைகளையும் சந்தித்தாலும் பொறுமையுடன் செயல்பட்டு அவற்றைச் சமாளிப்பீர்கள். உங்களின் சமயோஜித புத்தியால் பிரச்சினைகளிலிருந்து தப்பித்துக்கொள்வீர்கள். உறவினர்கள் மூலம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். பிள்ளைகள் மனம் மகிழும்படி தேவையான பொருட்களை வாங்கி கொடுப்பீர்கள். தொழில் வியாபாரத்தில் முன்னேற்றம் காணப்படும். அரசாங்கம் மூலம் நடக்க வேண்டிய காரியங்களில் சாதகமான நிலை காணப்படும். எதிர்பார்த்த பண உதவி கிடைக்கும்.
இதனையும் படியுங்கள் : சனியின் சஞ்சாரத்தால் சனியின் அருளை பெறும் 8 ராசிகள் இவைதான்!!!