- Prep
- 10 min
- Cook
- 15 min
- Total
- 25 min
- Serves
- 5
- Cuisine
- Indian
- Course
- LUNCH
சிக்கன் எடுத்தாலே நம்ம வீட்ல எப்பவுமே சிக்கன் கிரேவி சிக்கன் குழம்பு சிக்கன் பிரியாணி சிக்கன் 65 அப்படின்னுதான் செய்வோம் ஆனா எப்பவுமே ஒரே மாதிரியா செய்யாம கொஞ்சம் வித்தியாசமா குழந்தைகள்ல இருந்து பெரியவங்க வரைக்கும் எல்லாருக்குமே ரொம்ப பிடிக்கிற மாதிரி ஒரு சூப்பரான ஹரியாலி சிக்கன் பிரை தான் பாக்க போறோம். சிக்கன் ஸ்மோக்கி பிளேவரோட சாப்பிட பிடிக்கும் அப்படின்னா அவங்களுக்கு இந்த ஹரியாலி சிக்கன் ப்ரை ரொம்ப பிடிக்கும்.
இதுல மல்லி இலைகள் புதினா இலைகள் எல்லாமே அரைச்சு சேர்க்கறதால சுவை ரொம்பவே சூப்பரா இருக்கும். அது மட்டும் இல்லாம இதுல இன்னும் நிறைய பொருட்கள் சேர்த்து செய்றதால டேஸ்ட் நீங்க எதிர்பார்க்கிறத விட ரொம்பவே சூப்பரா இருக்கும். வீட்ல பிரியாணி செஞ்சு அதுக்கு சைடு டிஷ்ஷா இந்த ஹரியாலி சிக்கன் ப்ரை செஞ்சு சாப்பிட்டு பாருங்க. இப்ப வாங்க இந்த சூப்பரான ஹரியாலி சிக்கன் பிரை எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
இதனையும் படியுங்கள் : கொஞ்சம் வித்தியாசமா சிக்கன்ல முறுக்கு செஞ்சு சாப்பிட்டு பாருங்க!
Ingredients
Method
ஒரு பாத்திரத்தில் கழுவிய சிக்கன் சேர்த்து அதில் எலுமிச்சை சாறு மிளகுத்தூள் உப்பு சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்.
ஒரு மிக்ஸி ஜாரில் கொத்தமல்லி இலைகள் புதினா இலைகள் இஞ்சி பூண்டு பச்சை மிளகாய் சேர்த்து நன்றாக அரைத்து எடுத்துக் கொள்ளவும்.
அரைத்த விழுதை சிக்கனுடன் சேர்த்து கலந்து பின்பு அதனுடன் மல்லித்தூள் மஞ்சள் தூள் கரம் மசாலா தயிர் சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்.
அதன் மேல் ஒரு கரித்துண்டு வைத்து புகை வரும் பொழுது பாத்திரத்தை மூடி வைத்து ஒரு மணி நேரம் நன்றாக ஊற வைக்கவும்.
ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி ஊறவைத்த சிக்கனை போட்டு இரண்டு பக்கமும் வேக வைத்து பொறித்து எடுத்தால் சுவையான ஹரியாலி சிக்கன் பிரை தயார்.






