பெற்றோர்கள் அனைத்து குழந்தைகளும் சிறப்பாக இருக்க வேண்டும் நன்றாக படிக்க வேண்டும் என்று ஆசைப்படுவார்கள். சிறப்பான முறையில் அவர்களை படிக்க வைக்க பல்வேறு முயற்சிகளையும் எடுப்பார்கள் இருந்தாலும் குழந்தைகள் கல்வியறிவை சிறப்பாக பெறாமல் ஏதாவது ஒரு கல்வி தடையால் பாதிக்கப்படுவார்கள். அப்படிப்பட்ட கல்வி தடையை நீக்க சிறந்த அறிவை பெறுவதற்கு இந்த ஒரு எளிமையான வழிபாட்டு முறையை பின்பற்றி பாருங்கள் அதனைப் பற்றி இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் பார்க்கலாம்.

ஹயக்ரீவர்
சிறந்த கல்வியறிவையும் ஞானத்தையும் பெறுவதற்கு சரஸ்வதி தேவியை வழிபாடு செய்ய வேண்டும். சரஸ்வதி தேவிக்கு குருவாக இருப்பவர்தான் ஹயக்ரீவர். இவர் பெருமாள் உடைய அவதாரமாக கருதப்படுகிறார் அசுரர்கள் வேத புத்தகங்களை திருடி மறைத்து வைத்திருந்ததை ஹயக்ரீவ அவதாரம் எடுத்து தான் திரும்ப பெற்றதாக புராணங்களில் உள்ளது. அதனால் சரஸ்வதி தேவியை விட ஹயக்ரீவரை வழிபாடுவது சிறந்த கல்வியறிவை நமக்கு கொடுக்கும். அப்படிப்பட்ட ஹயக்ரீவரை புதன்கிழமை வழிபாடு செய்வது மிகவும் நல்லது.
ஹயக்ரீவர் வழிபாடு
ஹயக்ரீவருக்கு வாசனை மிகுந்த ஏலக்காயை பயன்படுத்தி மாலைகள் கட்டி போட்டு வழிபாடு செய்யலாம். ஹயக்ரீவரின் அருளால் சிறந்து ஞானத்தை பெற முடியும் மேலும் அவருக்கான மந்திரங்களையும் கூறி தினமும் படிக்க சென்றால் நிச்சயமாக கல்வி அறிவை தானாக பெற முடியும் ஞாபக சக்தியும் அதிகரிக்கும். மேலும் இந்த ஹயக்ரீவர் முத்திரையை செய்வதன் மூலம் ஞாபக சக்தி மேலும் அதிகரிக்கும்.
ஹயக்ரீவர் முத்திரை செய்யும் முறை
இடது கையின் உள்ளங்கை பகுதியில் வலது கையில் உள்ள அனைத்து விரல்களையும் குவித்து வைக்க வேண்டும். பிறகு வலது கை நடு விரலையும் இடது கை நடு விரலையும் சேர்த்து வைக்க வேண்டும். இதுதான் ஹயக்ரீவர் முத்திரை இதனை செய்துவிட்டு இந்த மந்திரத்தை 9 முறை காலை நேரத்தில் உச்சரித்தால் குழந்தைகளின் கல்வித்திறன் மேம்படும் ஞானமும் அதிகரிக்கும்.
மந்திரம்
“ஓம் ஐம் ஹ்ரீம் ஸ்ரீம் ஹயக்ரீவாய நமஹ”
இந்த முத்திரையை செய்து விட்டு மந்திரத்தை கூறும் போது நிச்சயமாக குழந்தைகளுடைய கல்வி திறன் மேம்படும்
நம்பிக்கையோடு முழுமனதோடு இதனை செய்து பாருங்கள்.
இதனையும் படியுங்கள் : குழந்தைகள் கல்வியில் சிறந்து விளங்க



