Advertisement
உடல்நலம்

இதய ரத்தக்குழாய் அடைப்பு போக்கும் எளிய வீட்டு வைத்தியம்!

Advertisement

இஞ்சி… அஞ்சறைப்பெட்டியில இருக்கக்கூடிய சமையல் பொருள்கள்ல இதுவும் ஒண்ணு. தமிழர்களோட சமையல்ல இஞ்சி அவசியம் இடம் பெறக்கூடிய ஒண்ணு. பல பேர் கிட்ட கேட்டா இஞ்சி, பூண்டு இல்லாம எங்க வீட்டுல சமையல் இருக்காதுன்னு சொல்வாங்க. இஞ்சிக்கு நிறைய மருத்துவ குணம் இருக்கு. சித்தர்கள் பாடல்ல… காலையில் இஞ்சி கடும் பகல் சுக்கு மாலையில் கடுக்காய்ன்னு ஒரு வரி வரும். அந்த அளவுக்கு மருத்துவ குணம் உள்ளது இஞ்சி. காலைல இஞ்சியை அரைச்சு சாறு எடுத்துக் குடிச்சா பல நோய்கள் சரியாகும்.

ஒரு மண்டலம்

இஞ்சியை வெறும் வயித்துல குடிக்கலாமான்னு நிறைய பேருக்கு சந்தேகம் வரும். வாய்ப்புண், வயிற்றுப்புண் பிரச்சினை உள்ளவங்க இஞ்சி சாப்பிட வேண்டாம். மத்தவங்க சாப்பிடுறதுல தப்பு இல்ல. ஆனா எதையுமே அளவோட சாப்பிடணும். பல பேர் இஞ்சி நல்லது செய்யுதுன்னு சொல்லிட்டு மாசக் கணக்குல, வருஷக்கணக்குல சாப்பிடுறாங்க. அந்தமாதிரி சாப்பிடுறது உடம்புக்கு நல்லது கிடையாது. அதனாலதான் மருந்துகளை ஒரு மண்டலம் இல்லன்னா அரை மண்டலம் சாப்பிடணும்னு சித்தர்கள் சொல்லிருக்காங்க. ஒரு மண்டலம்ங்கறது 48 நாள். உதாரணத்துக்கு உடல் எடையைக் குறைக்கறவங்க 48 நாள் இந்த இஞ்சியை அரைச்சு சாறு எடுத்து வெறும் வயித்துல குடிச்சிட்டு வந்தா பலன் கிடைக்கும். அதை தொடர்ந்து குடிக்கணுன்னா மருத்துவர்கள்கிட்ட கேட்டு முடிவு பண்ணுங்க.

Advertisement

தோல் நீக்கிய இஞ்சி

செரிமானப் பிரச்சனை உள்ளவங்களும் இஞ்சிச்சாறை சிலநாட்கள் இதே மாதிரி குடிக்கலாம். ரத்த அழுத்தத்துக்குக்கூட இஞ்சி சாறு ரொம்ப நல்லதுதான். இஞ்சியை அப்படியே சாப்பிடக்கூடாது. தோல் நீக்கி அரைச்சி சாறு எடுத்து 5 நிமிஷமாவது வைக்கணும். அடியில வெள்ளையா ஒரு படிவம் படியும். அதை விட்டுட்டு தெளிஞ்ச நீரை மட்டும் எடுத்து தேன்ல கலந்து குடிச்சிட்டு வந்தா ரத்த அழுத்தம் இயல்பு நிலைக்கு வரும். நிறைய பேர் ரத்த அழுத்தம்,

Advertisement
இதய நோய், ரத்தக்குழாய்ல அடைப்புக்கு வேற வேற மருந்துகளை சாப்பிட்டு உடம்பை கெடுத்துக்கிடுறாங்க. அது மட்டுமில்ல சிலபேர் பல மருந்துகள் சாப்பிட்டும் தீர்வு கிடைக்கலன்னு ரொம்ப வருத்தமா சொல்வாங்க. முறைப்படி இஞ்சியை சாப்பிட்டு வந்தா பலன் கிடைக்கும்.

ரத்தக்குழாய் அடைப்பு

ரத்தக்குழாய் அடைப்பு பிரச்சினைக்கு நல்ல தீர்வு தரக்கூடிய ஒரு மருந்து இருக்கு. ஒரு முழு

Advertisement
எலுமிச்சம்பழத்தை எடுத்துச் சாறு பிழிஞ்சி அதோட தோலை மட்டும் எடுத்துக்கணும். அதே அளவு தோல் நீக்கின இஞ்சி எடுத்துக்கோங்க. ரெண்டையும் பொடிப்பொடியா நறுக்கி அது மூழ்குற அளவுக்கு தண்ணி ஊத்தி ஒரு கொதி வந்ததும் இறக்கி வடிகட்டி காலையில வெறும் வயித்துல 48 நாள் குடிச்சிட்டு வந்தா ரத்தக்குழாயில அடைப்பு இருந்தா அது சரியாயிரும். ஒரு மண்டலம் சாப்பிட்டா போதும். அதுக்கப்புறம் பத்து நாளைக்கு ஒருதடவை, வாரத்துல ஒருநாள்னு குடிச்சா போதும். மருந்தை மருந்தா சாப்பிடணும். நம்ம விருப்பப்படி சாப்பிடக்கூடாது.

அளவுடன் சாப்பிடுவது நல்லது

சில பேரு இஞ்சிச்சாறு குடிப்பாங்க, இஞ்சி டீ குடிப்பாங்க. சிலபேர் வருசக்கணக்குல இஞ்சி டீ குடிப்பாங்க. எனக்கு இஞ்சி டீ இல்லாம டீ குடிச்ச மாதிரி இருக்காதுன்னு சொல்வாங்க. அப்பிடி தொடர்ந்து சாப்பிட்டா அது வேறமாதிரி பிரச்சினைகளை உண்டுபண்ண வாய்ப்பிருக்கு. பலபேருக்கு பசியே எடுக்கலன்னு சொல்வாங்க.தொடர்ந்து டீ குடிச்சிட்டு இருந்தாலே பசி எடுக்காது. அப்படி இருக்கும்போது இஞ்சியை தொடர்ந்து சாப்பிட்டா அது அதிகமா செரிமானத்தை உண்டாக்கி வேற மாதிரி பிரச்சினைகளை உண்டாக்க வாய்ப்பிருக்கு. அதனால அளவோட சாப்பிடுங்க. நாளைக்கு வேற ஒரு பிரச்சினைக்கு வழிவகுக்கலாம். அதனால எச்சரிக்கையா இருக்கிறது நல்லது.

Advertisement
Maria Bellsin

Recent Posts

இரவு டிபனாக ருசியான துவரம் பருப்பு அடை இப்படி ஒரு தரம் ட்ரை பண்ணி பாருங்க! 2 அடை அதிகமாவே சாப்பிடுவாங்க!

துவரம் பருப்பில் உடம்பிற்கு தேவையான அதிகப்படியான ஊட்டச்சத்துக்கள் இருக்கிறது. அதனால் தான் பல உணவை சமைப்பதாக இருந்தாலும் அதில் ஒரு…

52 நிமிடங்கள் ago

ருசியான வெஜிடபிள் ஒயிட் குருமா இப்படி செய்து பாருங்க! இதன் ருசியே தனி ருசி தான்!!

இன்று உங்கள் வீட்டில் சப்பாத்தி செய்ய திட்டமிட்டுள்ளீர்களா? அதற்கு ஒரு அட்டகாசமான சைடு டிஷ் செய்ய வேண்டுமா? உங்கள் வீட்டில்…

2 மணி நேரங்கள் ago

தித்திக்கு சுவையில் ஆப்பிள் கீர் இப்படி ட்ரை பண்ணி பாருங்க! பார்தாலே நாவில் எச்சி ஊறும்!

கீர் ஒரு சுவையான வட இந்திய ரெசிபி ஆகும். கீரில் பல வகைகள் உள்ளன. பாதாம் கீர், கேரட் கீர்,…

3 மணி நேரங்கள் ago

முட்டை போண்டா இப்படி செஞ்சி குடுங்க நிமிசத்துல எல்லாமே காலி ஆகிவிடும்

என்னதான் வாழைக்காய் பஜ்ஜி வெங்காய பஜ்ஜி வெங்காய போண்டா உளுந்து வடை பருப்பு வடை மசால் போண்டா சாப்பிட்டாலும் முட்டை…

4 மணி நேரங்கள் ago

சுவையான வெண்ணெய் புட்டு இப்படி வீட்டிலயே செஞ்சி பாருங்கள்! மீண்டும் செய்ய சொல்லி கேட்பார்கள்!

அது என்ன வெண்ணெய் புட்டு அப்படின்னு யோசிக்கிறீங்களா இது அரிசி மாவுல பண்ணக்கூடிய ஒரு சுவையான கேக் இந்த மாதிரியான…

7 மணி நேரங்கள் ago

அக்னி நட்சத்திரம் 2024 எப்போது? தேதி, நேரம்.. முழு விவரம் இதோ!

கோடை தொடங்கியதுமே பள்ளி விடுமுறை, மாம்பழம், தர்பூசணி என நினைவுக்கு வரும். அதோடு கத்திரி வெயில் காலம் சுட்டெரிக்குமே என்பதையும்…

7 மணி நேரங்கள் ago