வீட்டு வாசல் படியில் அமர கூடாது என்று சொல்வார்கள் ஏன் தெரியுமா ?

- Advertisement -

நாம் முன்னோர்கள் ஏதாவது ஒரு விஷயத்தை நமக்கு சொல்லி இருக்கிறார்கள் என்றால் அதற்குப் பின்பாக ஒரு அறிவியல் காரணமோ அல்லது ஆன்மீகம் சம்பந்தமான காரணங்களோ ஒளிந்திருக்கும் ஆனால் அவர்கள் அப்படி சொல்லி வந்ததை நாம் இன்றளவும் போற போக்கில் எவனாவது சொல்லிவிட்டு சென்றிருப்பான் என்று சொல்லி நகையாடுகிறோம் சமீபத்தில் நம் முன்னோர்கள் சொன்ன விஷயங்களின் பின்னால் இருக்கும் அறிவியல் காரணங்கள் ஆன்மிக காரணங்கள் ஏராளமானது வெளி வருகின்றனர். இதை கேட்கும் பலரும் இதுற்கு பின்னால் இப்படி ஒரு காரணம் இருக்கிறதா என்றல்லாம் வியந்து போவார்கள்.

-விளம்பரம்-

வளைகாப்பு

உதாரணமாக சொல்ல வேண்டுமென்றால் வெளிநாட்டில் எல்லாம் கர்ப்பிணி பெண்கள் கடலில் துள்ளி விளையாடிக் கொண்டிருக்கும் டால்பினை தன் வயிற்றில் முத்தமிட செய்வார்கள் அது ஒரு வித ஒலி அலையை ஏற்படுத்தும். இதற்காக அவர்கள் பல லட்சம் செலவழித்து செய்வார்கள் இப்படி செய்வதன் மூலமாக குழந்தை மூளை வளர்ச்சி அதிகமாகும் நல்ல ஆரோக்கியத்துடனும் பிறக்கும் என்று கூறுவார்கள். ஆனால் இதை விஷயத்தை நம் 10 ரூபாய் செலவில் முடிக்கிறோம் என்று சொன்னால் உங்களால் நம்ப முடியுமா ? இன்றும் கருதரித்த பெண்களுக்கு வளைகாப்பு என்ற பெயரில் கர்ப்பிணி பெண்களின் இரு கை நிறைய வளையல் போடவும் அந்த வளையல்கள் இருந்து வெளிவரும் சத்தம் குழந்தைகளுக்கு எவ்வளவு நன்மை பயக்குமோ இதே வேலையை தான் லட்சக்கணக்கில் நாம் பணம் கொடுக்கும் போது அந்த டால்பின் செய்யும்.

- Advertisement -

வாசபடியில் அமர கூடாது

இப்படி நம் முன்னோர்கள் சொல்லி ஒவ்வொரு விஷயத்திற்கு பின்னால் ஒரு விஷயம் ஔந்திருக்கும். அப்படி நம் முன்னோர்கள் நம் வீட்டில் வைத்திருக்கும் அம்மிக்கல், ஆட்டுக்கல் போன்றவற்றில் உட்கார கூடாது. அதேபோல் நாம் வீட்டில் வைத்திருக்கும் வெற்றிலைகள், வாழை இலைகளை வாடக்கூடாது என்று இதுபோல் நிறைய சொல்லி இருக்கிறார்கள். அது போல தான் வீட்டு வாசல் படியில் அமரக்கூடாது கூட்டமாக உட்கார்ந்து பேசவும் கூடாது என்றும் கூறியுள்ளார்கள்.

நரசிம்ம அவதாரம்

ஏன் வீட்டின் வாசப்படியால் அமரக்கூடாது என்று கூறியுள்ளார்கள் தெரியுமா ? இதற்கு பின்னால ஒரு ஆன்மீக காரணம் இருக்கிறது பூமியில் வாழும் மனிதர்களை தனது கொடூர அரக்க குணத்தால் துன்புறுத்தி வாழ்ந்து வந்த கொடூர அரக்கன் தான் இரண்யகசிபு இந்த அரக்கனின் அட்டூழியங்களை கண்டு பொறுக்க முடியாத மகாவிஷ்ணு நரசிம்ம அவதாரம் எடுத்து இரண்யகசிபுவின் அட்டூழியத்தை அடக்க. இரண்யகசிபு உடன் சண்டை போட்ட நரசிம்ம பெருமாள் கடைசியில் இரண்யகசிபுவை வாசப்படியில் வைத்து தான் வதம் செய்தார். அதனால் தான் வாசப்படியில் அமர்ந்து பேசக்கூடாது அமரக்கூடாது என்றும். ஏன் வாசப்படியில் வைத்து பணம் வாங்கக்கூடாது கொடுக்கக்கூடாது என்பதற்கு கூட இந்த ஆன்மீக காரணம் தான்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here