- Prep
- 10 min
- Cook
- 10 min
- Total
- 20 min
- Serves
- 3
- Cuisine
- Indian
- Course
- Breakfast, evening
குழந்தைகளில் இருந்து பெரியவங்க வரைக்கும் எல்லாருமே பசிக்குது நான் சாப்பிட கூடியது பிஸ்கட் பிரட் இதுதான். இந்த பிஸ்கட் பிரட் வச்சு வீட்டிலேயே நிறைய ஸ்நாக்ஸ் ரெசிபி பேசும் நம்ம செய்யலாம். அந்த வகையில இன்னைக்கு நம்ம பிரட் வச்சு குழந்தைகள் இருந்து எல்லாருமே விரும்பி சாப்பிடக்கூடிய ஒரு சூப்பரான ஹனி மில்க் பிரட் தான் செய்யப் போறோம். ஸ்கூல் முடிஞ்சு வர்ற குழந்தைகளுக்கு இதை ஸ்னாக்ஸ் ஆகும் கொடுக்கலாம் இல்லனா காலைல ஸ்கூலுக்கு கிளம்பும்போது இந்த சூப்பரான மில்க் பிரட்ட செஞ்சு கொடுத்து சாப்பிட வச்சு அனுப்பலாம்.
குழந்தைகள் விரும்பி சாப்பிட்டு போவாங்க இது செய்றதுக்கு ரொம்ப ரொம்ப குறைவான நேரம் மட்டுமே தேவைப்படும். உங்ககிட்ட காய்ச்சி வச்ச பால் இருந்தா போதும் சட்டுன்னு செஞ்சு முடிச்சிடலாம். இந்த ஹனி மில்க் பிரட் க்கு பால் பவுடர் சோள மாவு வெண்ணிலா எசன்ஸ் சர்க்கரை இதெல்லாம் சேர்த்து ஒரு பேஸ்ட் மாதிரி ஒன்னு தயார் செஞ்சு பிரட் மேல ஊத்தி சாப்பிட்டா டேஸ்ட் அவ்வளவு சூப்பரா இருக்கும். ஒரே ஒரு தடவை மட்டும் இதை செஞ்சு சாப்பிட்டு பாருங்க அதுக்கப்புறம் உங்க குழந்தைகளும் உங்ககிட்ட அடிக்கடி கேட்பாங்க நீங்களும் அடிக்கடி செஞ்சு கொடுப்பீங்க. பிரட் வச்சு செய்யக்கூடிய ரெசிப்பீஸ்ல இந்த ரெசிபி ரொம்ப சூப்பரா இருக்கும். இப்ப வாங்க இந்த சூப்பர் டேஸ்டான ஹனி மில்க் பிரட் சட்டுன்னு எப்படி செய்றதுன்னு பார்க்கலாம்.
இதனையும் படியுங்கள் : இந்த பிரெட் ஆம்லெட் டோஸ்டை செய்து கொடுத்து உங்கள் வீட்டில் உள்ளவர்களின் காலை உணவை சுவையாக்குங்கள்!
Ingredients
Method
முதலில் பாலை நன்கு காய்ச்சி ஆற வைத்து எடுத்துக் கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தில் பால் பவுடர் சோள மாவு வெண்ணிலா எசன்ஸ் சர்க்கரை சிறிதளவு பால் சேர்த்து நன்றாக அடித்து கலந்து கொள்ளவும்.
ஒரு தோசை சட்டியில் பட்டர் சேர்த்து உருகியதும் பிரட்டை தனித்தனியாக ரோஸ்ட் செய்து எடுத்துக் கொள்ளவும்.
இப்பொழுது இரண்டு பிரெட்டை ஒன்று மேல் ஒன்றாக வைத்து அதன் மேல் காய்ச்சிய ஆற வைத்த பாலை சேர்த்துக் கொள்ளவும்.
பிறகு கலந்து வைத்துள்ள பால் பவுடர் கரைசலை பிரட்டின் மேல் சேர்த்து அனைத்தையும் கரண்டியால் எடுத்து பிரட்டின் மேல் போட்டு பிரட்டை அதில் நன்றாக நனைய வைத்து ஐந்து நிமிடங்கள் கழித்து அடுப்பை அணைத்துவிட்டு அதன் மேல் தேன் சேர்த்தால் சுவையான ஹனி மில்க் பிரட் தயார்.






