- Prep
- 5 min
- Cook
- 10 min
- Serves
- 3
- Cuisine
- tamil nadu
- Course
- LUNCH
நம்ம வீட்ல எப்படி பருப்பு பொடி ரசம் பொடி மிளகாய் பொடி எல்லாமே அரைச்சு வைக்கிறோமோ அதே மாதிரி இந்த கொள்ளு பொடியும் அரைத்து வைத்துக்கொண்டால் ரொம்ப நல்லது. இந்த கொள்ளு பொடிய சாதத்தில் போட்டு கொஞ்சம் நெய் ஊற்றி சாப்பிட்டால் டேஸ்ட் செமையா இருக்கும். பொதுவா இந்த கொள்ளு நம்ம சாப்பாட்டுல சேர்த்துட்டா நம்ம உடல் எடை குறையும்.
இருமல் சளி வரும் போது இந்த கொள்ளு பயிறு வச்சு ரசம் வைத்து குடித்தால் இருமல் சளி உடனே சரியாகிவிடும் என்று சொல்லுவாங்க. அதுமட்டுமில்லாம கொள்ளு பயிறு வச்சு சட்னி குழம்புன்னு எல்லாமே செய்வாங்க. கொள்ளு பயிர வேக வச்சு அப்படியே கூட நம்ம சாப்பிடலாம். அந்த வகையில இப்ப நம்ம செய்ய போற இந்த கொள்ளு பொடியை ஆறு மாசம் வரைக்கும் நம்ம நல்லா ஸ்டோர் பண்ணி வச்சுக்கலாம், கெட்டே போகாது.
குழம்பு எதுவும் வைக்க முடியாத நேரத்துல இந்த பொடியை போட்டு நெய் ஊத்தி இல்லனா நல்லெண்ணெய் ஊத்தி சாப்டா போதும் டேஸ்ட் அட்டகாசமா இருக்கும். இப்ப வாங்க இந்த சுவையான கொள்ளு பொடியை எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
இதையும் படியுங்கள் : ஆரோக்கியம் நிறைந்த ஸ்நாக்ஸ் சாப்பிட முளைக்கட்டிய பயறு சுண்டல் இப்படி செஞ்சி பாருங்க!
Ingredients
Method
ஒரு கடாயில் கொள்ளு மற்றும் காய்ந்த மிளகாய் சேர்த்து நன்றாக வறுக்கவும்.
அதனை தனியாக எடுத்து ஆற வைத்துவிட்டு அதே கடாயில் கடலை பருப்பு உளுந்தம் பருப்பு மிளகு சீரகம் பொட்டுக்கடலை சேர்த்து வறுக்கவும்
பிறகு பூண்டை தோல் உரிக்காமல் சேர்த்துக் கொள்ளவும். காய்ந்த கருவேப்பிலை சேர்த்து நன்றாக வறுத்து எடுத்துக் கொள்ளவும்
அனைத்தையும் ஆற வைத்து மிக்ஸி ஜாரில் சேர்த்து தேவையான அளவு உப்பு பெருங்காயத்தூள் சேர்த்து நன்றாக அரைத்து எடுத்தால் சுவையான கொள்ளு பொடி தயார்






