ஹோட்டல் சுவையில் முட்டை சப்பாத்தி எப்படி செய்வது ?

- Advertisement -

இன்று பலரும் விரும்பி சாப்பிடும் சத்தான உணவுகளில் ஒன்று முட்டை. இப்போதல்லாம் ஹோட்டல் வீடு என் எங்கு சென்றாலும் உணவுடன் முட்டை இல்லாமல் பலர் இங்கு சாப்புடுவதில்லை. நிறைய பேருக்கு பிடித்த உணவும்கூட, இதில் உடலுக்கு தேவையான கால்சியம் சத்துக்கள் அதிகளவில் அடங்கியுள்ளது. இத்தகைய சத்தான முட்டையை வைத்து இன்று முட்டை சப்பாத்தி எப்படி செய்யலாம் என்று தான் பார்க்க இருக்கிறோம்.

-விளம்பரம்-

இதையும் படியுங்கள் : ரூசியான கொத்து சப்பாத்தி செய்வது எப்படி ?

- Advertisement -

இந்த முட்டை சப்பாத்தி முட்டை பிரியர்களுக்கு ஏற்றவாறு இருக்கும், அதுமட்டும் இல்லாமல் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் வகையில் அட்டகாசமாக இருக்கும், இந்த உணவை காலை மற்றும் இரவு உணவுகளாக சமைத்து தரலாம். இத்தகைய உணவை எப்படி சமைக்கலாம் என்று கீழே கொடுக்கப்பட்டுள்ள தேவையானவை மற்றும் செய்முறை விளக்கங்களை நன்கு படித்து பார்த்து நீங்களும் செய்து பாருங்கள்.

Print
No ratings yet

முட்டை சப்பாத்தி | Egg Chapathi Recipe in Tamil

இப்போதல்லாம் ஹோட்டல் வீடு என் எங்கு சென்றாலும் உணவுடன் முட்டை இல்லாமல் பலர் இங்கு சாப்புடுவதில்லை. நிறைய பேருக்கு பிடித்த உணவும்கூட, இதில் உடலுக்கு தேவையான கால்சியம் சத்துக்கள் அதிகளவில் அடங்கியுள்ளது. இத்தகைய சத்தான முட்டையை வைத்து இன்று முட்டை சப்பாத்தி எப்படி செய்யலாம் என்று தான் பார்க்க இருக்கிறோம். இந்த முட்டை சப்பாத்தி முட்டை பிரியர்களுக்கு ஏற்றவாறு இருக்கும், அதுமட்டும் இல்லாமல் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் வகையில் அட்டகாசமாக இருக்கும், இந்த உணவை காலை மற்றும் இரவு உணவுகளாக சமைத்து தரலாம்.
Prep Time10 minutes
Active Time20 minutes
Total Time30 minutes
Course: Breakfast, dinner
Cuisine: Indian, TAMIL
Keyword: Chapathi, சப்பாத்தி
Yield: 4 people
Calories: 60kcal

Equipment

  • 1 பவுள்
  • 1 கடாய்
  • 1 தோசை கல்

தேவையான பொருட்கள்

  • 4 முட்டை
  • 1 டேபிள் ஸ்பூன் கடலைமாவு
  • 1 பச்சைமிளகாய் பொடியாக நறுக்கியது
  • 3 பெரியவெங்காயம் பொடியாக நறுக்கியது
  • ½ டேபிள் ஸ்பூன் சீரகம்
  • மஞ்சள் தூள் சிறிதளவு
  • கொத்தமல்லி தழை சிறிதளவு பொடியாக நறுக்கியது
  • கருவேப்பிலை சிறிதளவு
  • உப்பு தேவைக்கேற்ப
  • எண்ணெய் தேவைக்கேற்ப

செய்முறை

  • முதலில் வாணலியில் அடுப்பில் வைத்து அதில் எண்ணெய் ஊற்றி எண்ணெய் சூடானதும், அதில் வெங்காயம், பச்சைமிளகாய், ஆகியவற்றை சேர்த்து நன்கு வதக்கவும்.
  • பிறகு வெங்காயம் சற்று வதங்கியதும், அதனுடன் கடலை மாவு, தேவையான அளவு உப்பு, மஞ்சள் தூள், கொத்தமல்லி தழை, மற்றும் கருவேப்பிலை ஆகியவற்றை சேர்த்து கிளறவும்.
  • கிளறிய பிறகு அதனுடன் முட்டைகளை உடைத்து ஊற்றி கிளறிவிடவும்.
  • அடுப்பில் தோசைக்கல்லை வைத்து, அது சூடேறியதும் ஒரு சப்பாத்தியை அதில் போட்டு முட்டை கலவையை ஊற்றி தடவி விடவும். சுற்றி எண்ணெய் விடவும்.
  • அது வெந்ததும் திருப்பி போட்டு அடுத்த பகுதிலும் முட்டை கலவையை ஊற்றி வேக வைத்து எடுக்கவும்.
  • இப்பொழுது ருசியான முட்டை சப்பாத்தி ரெடி..

Nutrition

Serving: 50கிராம் | Calories: 60kcal | Carbohydrates: 4g | Protein: 9g | Saturated Fat: 0.8g | Cholesterol: 42mg | Sodium: 8.9mg | Potassium: 56mg | Fiber: 2g | Sugar: 4.5g | Calcium: 38mg

English Overview: egg chapathi is one of the most important dishes in india. egg chapathi recipe or egg chapathi seivathu eppadi or egg chapathi in Tamil are a few important terms to describe this recipe in the tamil language.

LEAVE A REPLY

Recipe Rating




Please enter your comment!
Please enter your name here