வாடகை பணத்தை இப்படி கொடுத்து பாருங்க! வேகமாக சொந்த வீடு வாங்கலாம்!

- Advertisement -

மாதம் 1 ஆம் தேதி ஆகிவிட்டால் வாடகை வீட்டில் இருப்பவர்களுக்கு முதல் செலவே வாடகை கொடுப்பதாக தான் இருக்கும். அப்படி வாடகை வீட்டில் இருப்பவர்களின் பல நாள் கனவு ஆசையும் ஒரு சொந்த வீடு கட்டி அங்கு வாழ்வதாக தான் இருக்கும். ஏன் அவர்களின் வாழ்வின் லட்சியமே சொந்த வீடு கட்டுவது வாங்குவதாக தான் இருக்கும். இப்படி வாடகை வீட்டில் இருப்பவர்கள் அவர்களின் சொந்த வீடு வாங்கும் லட்சியம் நிறைவேறுவதற்காக வாடகைக்கு இருக்கும் வீட்டில் வீட்டு சொந்தக்காரருக்கு வாடகை கொடுக்கும் போது பின்வரும் விதிமுறைகளை பின்பற்றி கொடுக்கும் பட்சத்தில் உங்களுக்கு சொந்த வீடு வாங்க கூடிய யோகம் கூடி வரும். அதேபோல் லோன் போட்டு வீடு கட்டியவர்கள் வீட்டு தவணையை இப்படி கொடுத்தால் வேகமாக முடிவடையும் இதைப்பற்றி இந்த ஆன்மீகம் குறித்த தொகுப்பில் நாம் தெளிவாக காணலாம் வாருங்கள்.

-விளம்பரம்-

வாடகை பணம்

பொதுவாக வாடகைக்கு குடியிருக்கும் பலர் சந்திக்கும் பிரச்சனைகள் என்று பார்த்தால் வீட்டில் பல குறைகள் இருந்தாலும் வீட்டு வாடகை மட்டும் சரியான நேரத்தில் கொடுக்கவில்லை என்றால் சிலர் கடித்துக் கொள்வார்கள். ஏன் வீடே கூட சிறியதாக இருந்தாலும் வீட்டு வாடகை தொகை பெரியதாக இருக்கும் இது போன்று பலருக்கும் நேர்ந்திருக்கும் இப்படி என்ன பிரச்சனை இருந்தாலும் வீட்டின் சொந்தக்காரர்களிடம் வாடகை பணம் கொடுக்கும் போது இந்த வீட்டுக்கு இவ்வளவு வாடகை என்று சலித்துக் கொண்டோ ஏதோ செலவுக்கு பணம் கொடுப்பது போன்று மன சஞ்சலத்துடனும் பணம் கொடுக்கக் கூடாது. உங்கள் மனதார இந்த வீட்டில் நாங்கள் குடியிருப்பதற்கு நன்றி என மனதார நினைத்து வாடகை கொடுக்க வேண்டும்.

- Advertisement -

வாடகை இப்படி கொடுங்கள்

அதேபோல் மாதம் முதல் தேதி ஆனவுடன் வாடகை கொடுக்க வேண்டும் என்று நினைக்காதீர்கள் முடிந்த அளவிற்கு இரண்டு தேதிகளுக்கு மேல் வாடகை கொடுக்கும் வழக்கத்தை கடைபிடித்து வாருங்கள். அப்படி நீங்கள் வாடகை கொடுக்கக்கூடிய கிழமை செவ்வாய்க்கிழமையாக இருக்குமாறு பார்த்துக் கொள்ளுங்கள் நேரம் மதியம் ஒரு மணியிலிருந்து இரண்டு மணிக்குள் செவ்வாய் ஓரை இருக்கும் போது வாடகை செலுத்தி வாருங்கள் இந்த நேரத்தில் வாடகை செலுத்துவது மிகவும் சிறப்பான விஷயமாக இருக்கும். சிலர் வாடகையை வீட்டின் சொந்தக்காரரின் வங்கி கணக்கில் போடுவார்கள், அப்படி வங்கியில் போடுபவர்கள் கூட இந்த நேரத்தில் வாடகையே வங்கி கணக்கில் செலுத்தி வாருங்கள்.

முறையாக பாரமரியுங்கள்

உங்களுக்கு இந்த நேரத்தில் வாடகை கொடுக்க முடியாத பட்சத்தில் மாலை 6 மணியில் இருந்து ஏழு மணிக்குள் வாடகை செலுத்தி வாருங்கள். இப்படி வாடகையை கொடுக்கும்போது இந்த செய்முறைகள் எல்லாம் நீங்கள் கடைப்பிடித்து வரும்போது உங்களுக்கு சொந்தமாக வீடு வாங்கக்கூடிய யோகம் வேகமாக கூடிய வருவதற்கு வாய்ப்புகள் அதிகமாக உள்ளது. அதேபோல் நீங்கள் வாடகை வீட்டில் தான் குடி இருக்கிறீர்கள் என்றாலும் பரவாயில்லை அதை உங்கள் சொந்த வீடு போல பார்த்துக் கொள்ளுங்கள் இது வாடகை வீடு தானே என்று நீங்கள் அலட்சியம் காட்டினால் கடைசி வரை நீங்கள் வாடகை வீட்டிலேயே வாழ வேண்டியது தான். அதனால் வாடகை வீடாக இருந்தாலும் சரி சொந்த வீடு போல நினைத்து பராமரித்து வாருங்கள்.

நிச்சயம் பலன் உண்டு

அப்படி நீங்கள் குடியிருக்கும் வீட்டை எந்த அளவிற்கு சுத்தமாக வைத்து பராமரித்து வைத்துக் கொள்கிறீர்களோ அந்த அளவிற்கு உங்களின் வாழ்விலும் நன்மைகள் நடந்து கொண்டே இருக்கும். அதில் ஒன்றுதான் இந்த வீடு வாங்கக்கூடிய யோகம் நீங்கள் நல்ல விஷயங்களை தொடர்ந்து கடை பிடித்து வரும்போது உங்களுக்கான பலனை அந்த கடவுள் சற்று தாமதமாக கொடுத்தாலும் கண்டிப்பாக கொடுப்பார். அதனால் வாடகை வீட்டில் குடியிருப்பவர்கள் மேலே சொன்ன விஷயங்களை நினைவில் வைத்துக் கொண்டு அதை சரியாக செய்து வரும் போது உங்களுக்கான நேரம் கைகூடிவரும். அப்போது நீங்களும் சொந்த வீடு வாங்கி அங்கு வாழ ஆரம்பித்து விடுவீர்கள் நம்பிக்கையுடன் செய்து பாருங்கள் நல்ல பலனை உங்களுக்கு கிடைக்கும்.

-விளம்பரம்-

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here