பொதுவாக நாம் நம் வீட்டில் அழகுக்காக செடிகளை வளர்த்து வருவோம். அப்படி நாம் அழகுக்காகவும் நமது வீடு பசுமையாக இருக்க வேண்டும் என்பதற்காக வளர்க்கும் செடிகளை முறையாக வைத்து வளர்க்க வேண்டும் என விருட்ச சாஸ்திரங்கள் கூறுகிறது. அதாவது ஒரு சில செடிகளை தனியாக நட்டு வளர்க்க கூடாதா அதனுடன் வேறு ஒரு செடியையும் நட்டு வளர்க்க வேண்டும் என சாஸ்திரங்கள் கூறுகின்றன. அதையும் மீறி நாம் ஒரு செடியை தனியாக வளர்க்கும் போது அது வீட்டில் இருக்கும் கணவன் மனைவி இருவருக்கும் இடையில் ஒற்றுமை இல்லாமல் செய்து இருவருக்கும் இடையே அடிக்கடி சண்டை வர வழி வகுக்கும் அதனால் இந்த ஆன்மிக குறித்த தொகுப்பில் அது என்னென்ன செடிகள் மரங்கள் என பார்க்கலாம் வாருங்கள்.
வெற்றிலை கொடி
பொதுவாக பலரும் வீட்டில் கொடி வகைகளை வளர்க்க விரும்புவார்கள். அதில் வெற்றிலை கொடியை பெரும்பாலான வீட்டில் வளர்ப்பார்கள். ஆனால் வெற்றிலை கொடியை எப்போதும் தனியாக வளர்க்கக்கூடாது என விருட்ச சாஸ்திரமே சொல்கிறது. அதனுடன் சேர்த்து வேற ஏதாவது செடியை வளர்க்க வேண்டுமா ஏனென்றால் வெற்றிலை கொடி ஒரு ஆண் செடி என சாஸ்திரங்களில் குறிப்பிட பட்டுள்ளது. இப்படி வெற்றிலை கொடியை நாம் தனியாக நட்டு வைத்து வளர்க்கும் போது அதனால் வீட்டில் உள்ள கணவன் மனைவிக்கு இடையே பல பிரச்சனைகள் வரும். குறிப்பாக வம்சம் விருத்தி அடைவதில் பல சிக்கல்கள் வரும் என விருட்ச சாஸ்திரம் நமக்கு சொல்கிறது.
கருவேப்பிலை, பப்பாளி
நாம் மேலே பார்த்த வெற்றிலை கொடியை போலவே கருவேப்பிலை செடி, பப்பாளி செடி என இந்த இரண்டு செடிகளையும் தனியாக நட்டு வளர்ப்பது நல்லது இல்லை என்று சாஸ்திரம் கூறுகின்றது. இந்த இரண்டு செடிகளையும் நாம் வேறு செடிகளுடன் நட்டு வளர்க்காமல் தனியாக நட்டு வளர்க்கும் பட்சத்தில் இதுவும் வீட்டில் உள்ள கணவன் மனைவிக்குள் சண்டை ஏற்படுத்தி தினசரி வீட்டில் சண்டை சச்சரவுகள் ஏற்பட்டு அவர்கள் கணவன் மனைவி உறவுக்குள் விரிசல் விழ காரணமாக அமையுமாம்.
மகத்துவம் வாய்ந்தது தான்
கருவேப்பிலை செடி என்பது ஒரு மகத்துவம் வாய்ந்த செடி இந்த செடியை நாம் தாராளமாக வீட்டில் நட்டு வளர்க்கலாம். இந்த கருவேப்பிலை செடி எந்த அளவிற்கு செழித்து வளர்கிறதோ அந்த அளவிற்கு செழிப்பாக வளர்கிறதோ. நமது வீடும் அந்த அளவிற்கு செல்வ செழிப்புடன் இருக்கும் என சாஸ்திரங்கள் சொல்லியுள்ளனர். இவ்வளவு மகத்துவம் இருந்தாலும் இந்த கருவேப்பிலை செடியை தனியாக நட்டு வளர்ப்பது தான் தவறான செயல் இதை ஒருபோதும் செய்யாதீர்கள்.
ஆனால் சேர்த்து வளர்க்கும் போது
அப்படி நீங்கள் இந்த கருவேப்பிலை செடி அல்லது பப்பாளி செடி இரண்டில் எது வளர்க்க விருப்பப்பட்டாலும் இந்த இரண்டு செடிகளை வீட்டில் ஒன்றாக நட்டு வளர்க்கும் போது வீட்டில் இருக்கும் கணவன் மனைவி இருவருக்கும் இடையில் அன்யோன்யம் என்பது அதிகரிக்கும். பல வீடுகளில் கணவன் மனைவி என்ற உறவுக்குள் இருப்பவர்கள் எலியும், பூனையுமாக தினசரி சண்டை போட்டுக் கொண்டிருப்பார்கள். அவர்கள் எல்லாம் இந்த கருவேப்பிலை செடியையும், பப்பாளி செடியையும் ஒன்றாக நட்டு வளர்க்கும் போது விவாகரத்து வரை சென்று இருந்த உறவு கூட மீண்டும் இணைந்து வாழ வழி வகுத்து கொடுக்கும். எக்காரணம் கொண்டும் இந்த இரண்டு செடிகளில் ஒன்றை மட்டும் தனியாக நட்டு வளர்க்காதீர்கள்.