இன்றைய நாட்களில் காதல் திருமணம் செய்து கொண்டாலும் சரி வீட்டிலேயே பார்த்து திருமணம் செய்து வைத்தாலும் சரி திருமண வாழ்க்கை நல்லபடியாக தான் இருக்கும் என்று யாரையும் சொல்லிவிட முடிவதில்லை. என்னதான் காதலிச்சு திருமணம் செய்து கொண்டாலும் வீட்டில் பார்த்து திருமணம் செய்து வைத்தாலூம் திருமண பந்தம் என்ற ஒரு உறவிற்குள் கணவன் மனைவியாக ஒரு ஆண் பெண் வரும்பொழுது ஒருவர், ஒருவர் விட்டுக் கொடுத்தும், சிறு சிறு தியாகங்களை செய்தும் நான் வாழ வேண்டி இருக்கும். ஆனால் இன்றைய நாட்களில் பலரும் இதை பெரிதாக எடுத்துக் கொள்வது கிடையாது. உனக்காக நான் ஏன் இதையெல்லாம் தியாகம் செய்ய வேண்டும் என்று கேள்வி தான் கேட்கிறார்கள்.
மேலும் கணவன் மனைவி வாழ்பவரின் திருமண உறவு அதிகமாக விவாகரத்து வரைக்கும் செல்வதற்கு காரணம் என்று பார்த்தால் பெரும்பாலான பிரிவிற்கு ஒரே காரணமாகத்தான் இருக்கும் கருத்து வேறுபாடுகள். ஆம் திருமணம் ஆவதற்கு முன் ஒரு ஆண் அல்லது பெண்ணோ தனக்குத் தானே சொந்தமாக முடிவு எடுத்துக் கொள்ள வேண்டிய சூழ்நிலையில் இருப்பார்கள். அதை திருமணம் முடிந்தவன் ஒருவர் ஒரு முடிவெடுக்க வேண்டும் என்றாலும் இரண்டு பேர் சேர்ந்து அதை எடுக்க வேண்டிய சூழ்நிலை வரும். அப்போது ஒருவர் கூறுவதை ஒருவர் ஏற்றுக் கொள்ள முடியாத சூழ்நிலைகளை சண்டை வந்து, சண்டை மிகப்பெரிய பிரச்சனையாக மாறி ஒருவருக்கு ஒருவர் எரிச்சலுடன் பார்த்துக் கொண்டு பிரிந்து விடுகிறார்கள். இப்படி இது போன்ற காரணங்களால் பிரிந்து விட கூடாது என்பவர்கள் ஒரு சக்தி வாய்ந்த மந்திரத்தை தினசரி உச்சரிப்பதன் மூலம் இது போன்ற கணவன் மனைவி பிரச்சினைகளுக்கு ஒரு தீர்வு கிடைக்கும்.
ராம மந்திரம்
பெரும்பாலும் பெண்கள் தனக்கு கிடைக்கப் போகும் கணவன் ராமரை போல் உத்தமனாக, அன்பானவனாக, வீரம் மிக்கவனாகவும் இருக்க வேண்டும் என்று தான் விரும்புவார்கள். அதே போல் ஆண்கள் தனக்கு வர போகும் பெண் சீதை போல் அன்பானவளாகவும், தன்னை புரிந்து கொண்டு வாழ வேண்டும் என விரும்புவார்கள். அதனால் தங்கள் திருமண வாழ்வில் பிரிவு ஏதும் வரக்கூடாது என்று விரும்புவர்கள் ஸ்ரீ ராமரின் சக்தி வாய்ந்த இந்த மந்திரத்தை உச்சரித்தால் மட்டும் போதும்.
ஶ்ரீ ராமரின் சக்தி வாய்ந்த மந்திரம்:
ஸ்ரீ ராமாய ராமபத்ராய
ராமசந்திராய வேதசே
ரகுநந்தாய நாதாய சீதாய
பதயே நமஹ…
இந்த மந்திரத்தின் பொருள் என்னவென்று தெரியுமா ? இந்த மந்திரத்தில் வரும் ராமா, ராம், பத்திரா, ராமச்சந்திரா, ராகுநாதா, நாதா என்று வரும் பெயர்கள் அனைத்தும் ராமரை அழைக்கும் அவருடைய வேறு பெயர்கள் எப்படி அழைக்கப்படும். இந்த பெயர் கொண்ட சீதையோட கனவனை நான் வணங்குகிறேன் என்பதனை இதனுடைய பொருள் ஆகும்.
மந்திரத்தின் பலன்
இந்த மந்திரத்தை உச்சரிப்பதால் நமக்கு என்ன பலன்கள் எல்லாம் கிடைக்கும் தெரியுமா ? ஆம் இந்த ராமரின் சக்தி வாய்ந்த மந்திரத்தை உச்சரிப்பவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மனதால் செய்த பாவங்கள் கூட நீங்குமாம். மேலும் சிறு சிறு விஷயங்களுக்கு கூட கோபித்துக் கொண்டு சண்டை போட்டு ஒருவரை ஒருவர் வெறுத்துக் கொண்டு கணவன் மனைவியாக வாழ்பவரின் சூழ்நிலையை மாற்றி தரக்கூடிய சக்தி இந்த ராமர் மந்திரத்திற்கு உண்டு. மேலும் இந்த மந்திரத்தை நாம் உச்சரிக்கும் போது ஒருவரை அவர் புரிந்து கொண்டு வாழ்வதற்கு உதவியாக இருக்கும் கணவன் மனைவி யார் வேண்டுமானாலும் இந்த மந்திரத்தை உச்சரிக்கலாம் நல்ல பலன் கொடுக்கும்.
மந்திரத்தை எப்படி உச்சரிக்க வேண்டும்
இந்த சக்தி வாய்ந்த ராமரின் மந்திரத்தை உச்சரிக்க காலையில் குளித்து முடித்த பின்பு உங்கள் பூஜை அறையில் அமர்ந்து உங்களால் எவ்வளவு முறை உச்சரிக்க முடியுமோ அவ்வளவு முறை உச்சரித்துக் கொள்ளலாம். அதை போல் மாலையிலும் குளித்து முடித்துவிட்டு சுத்த பத்தமாக பூஜை அறையில் உட்கார்ந்து உங்களால் முடிந்த அளவிற்கு இந்த மந்திரத்தை உச்சரிக்கலாம். நீங்கள் கணவன் மனைவி இருவரும் அமர்ந்து தம்பதியராக இந்த மந்திரத்தை சொல்லும் போது இன்னும் சிறப்பாக இதனுடைய பலன் உங்களுக்கு கிடைக்கும். இதன் மூலம் உங்கள் மனவைி சீதை போல உங்களை சுற்றி சுற்றி வருவார். கணவன்களும் ராமரை போல் உங்களையே சுற்றி சுற்றி வருவார் இதன் மூலம் உங்கள் இடையில் இருந்து, கருத்து வேறுபாடு, மணக்கசப்பு, சண்டைகள், ஏன் பிரிந்து விட வேண்டும் என்ற எண்ணத்தில் இருந்தால் கூட உங்கள் மனம் மாறி சேர்ந்து வாழ்வதற்கு ஆசைப்படுவீர்கள்.
மந்திரத்தின் மற்றொரு சிறப்பு
இந்த மந்திரமானது ராமனின் புகழைப் பாடக்கூடிய மந்திரமாக இருந்தாலும் இந்த மந்திரத்தை ராமருக்காக சிவபெருமான் கூறுவதாக இருக்கும். என்னதான் இந்த மந்திரத்தை ராமனைப் புகழ்ந்து சிவபெருமான் கூறியதாக இருந்தாலும் இந்த மந்திரத்தில் விஷ்ணு பகவான், ராமர், சிவன் என்று இந்த மூன்று கடவுள்களையும் வணங்கும் விதமாகத்தான் இருக்கும். அதனால் இந்த ஸ்லோகத்தை தினசரி உச்சரிப்பவர்களுக்கு எல்லா விதமான வளங்களும், பலன்களும் கிடைக்குமாம். உங்கள் வாழ்வில் இருக்கும் கஷ்டங்கள், அவமானங்கள், துன்பங்கள், போராட்டங்கள் அனைத்தும் உங்களை விட்டு நீங்கி உங்களுக்கு ஒரு நிம்மதியான வாழ்க்கை கிடைப்பதற்காக வழி வகுக்குமாம். நம்பிக்கையுடன் இதை செய்து பாருங்கள் நல்ல பலனை உங்களுக்கு கிடைக்கும்.