வீட்டில் கனவன் மனைவிக்குள் அடிக்கடி சண்டை வருவதற்கு! இது தான் காரணமா!

- Advertisement -

தன் வாழ்நாளில் பாதி நாட்கள் வாடகை வீட்டிலேயே வசித்து வந்து பின்னர் தன் வாழ்வின் லட்சியமாக இருந்த வீட்டை கட்டிவிட்டு அந்த வீட்டில் குடும்பத்துடன் சந்தோஷமாக வாழலாம் என்று நினைத்தவர்கள் பலர் அவர்களது வீட்டில் நிம்மதியான வாழ்வை வாழ முடியாமல் போகிறது. ஏனென்றால் வீட்டில் ஏதாவது வாஸ்து தோஷங்கள் இருக்கும் பட்சத்தில் நாம் ஆசையாக பார்த்து பார்த்து கட்டிய வீட்டின் அமைப்பையே வாஸ்து தோஷங்களுக்காக மாற்ற வேண்டிய சூழ்நிலை கூட உண்டாகின்றது. இந்த வாஸ்து தோஷங்கள் உங்கள் வீட்டில் இருந்தால் அதனால் பல வீட்டில் பல பிரச்சனைகளும் குழப்பங்களும் வரும் ஏன் அடிக்கடி கனவன் மனைவிக்குள் சண்டை வருவதற்கு இதான் காரணம். அதனால் இந்த வாஸ்து தோஷங்களை எளிய முறையில் எப்படி நீக்குவது என்பதனை இந்த ஆன்மீகம் குறித்த தொகுப்பில் நாம் காணலாம் வாருங்கள்.

-விளம்பரம்-

வாஸ்து தோஷம்

இப்படி நாம் கஷ்டப்பட்டு கட்டிய வீட்டின் இருக்கும் வாஸ்து தோஷங்கள் என்று பார்க்கும் போது அது சிறிய தோஷம் முதல் பெரிய தோஷங்கள் வரை பல உள்ளன. இருந்தாலும் நம் வீட்டில் இருக்கும் வாஸ்து தோஷம் சிறிய அளவாக இருந்தாலும் சரி, பெரியளாக இருந்தாலும் சரி ஒரு எளிய பரிகாரத்தை நாம் வீட்டில் செய்வதன் மூலம் நம் வீட்டில் இருக்கும் வாஸ்து தோஷத்தை நீக்கி நாம் வாழ்நாள் முழுவதும் கஷ்டப்பட்டு உழைத்து சம்பாதித்த பணத்தில் கட்டிய வீட்டில் எந்த வித குறையும் இல்லாமல் சந்தோஷமாக வாழலாம் வாருங்கள் பதிவிற்கு போகலாம்.

- Advertisement -

கிரகலட்சுமி

வாஸ்து தோஷங்களை நிவர்த்தி செய்யும் கடவுளாக இருப்பவள் தான் கிரகலட்சுமி இந்த கிரகலட்சுமியின் பரிபூரணமான அருள் நமக்கு கிடைத்துவிட்டாலே போதும் நம் வீட்டில் இருக்கும் எந்த விதமான வாஸ்து தோஷம் சார்ந்த பிரச்சனைகளால் நம்மை ஒன்றும் செய்ய முடியாது. அப்படிப்பட்ட சக்தி வாய்ந்த கிரகலட்சுமியின் அருளை நாம் எப்படி பெறப்போவது என்று பார்க்கலாம். பொதுவாக நம் வீட்டில் உள்ள பெரியோர்கள் நிலை வாசலில் அமரக்கூடாது, நிலை வாசலை மிதிக்காதே, நிலை வாசலில் நிக்காதே என்று நம்மளை திட்டி தீர்ப்பார்கள். அதற்கு காரணம் என்ன தெரியுமா நம் வீட்டின் நிலை வாசலில் இருந்தால் கிரகலட்சுமி வாசம் செய்வாரள்.

வெள்ளிகிழமை் வழிபாடு

இப்படி கிரகலட்சுமி தாயார் வாசம் செய்யும் நம் வீட்டின் நிலை வாசலை நாம் எந்த அளவுக்கு முக்கியத்துவம் கொடுத்து பார்த்துக் கொள்கிறோமோ அந்த அளவிற்கு கிரகலட்சுமி தாயாரின் பரிபூரண அருளும் நமக்கு கிடைக்கும். மேலும் வெள்ளிக்கிழமை ஆனால் ஒரு சில வீடுகளில் இன்றளவும் நிலை வாசலை சுத்தமாக மஞ்சள் தண்ணியால் கழுவி சுத்தம் செய்து. பின் மஞ்சள் குங்குமம் போட்டு வைத்து, பூ வைத்து வழிபடுவார்கள். இதுவே வாஸ்து தோஷம் நீங்க எளிய பரிகாரம், தனலட்சுமி தாயாரின் அருள் கிடைப்பதற்கும் ஒரே வழி இது தான்.

தயாரின் திரு உருவ படம்

இப்படி நம் வாரந்தோறும் கிரகலட்சுமி வாசம் செய்யும் நிலை வாசலுக்கு மஞ்சள் குங்குமம் பொட்டு வைத்து பூ வைத்து வழிபட்டு வரும்போது கிரகலட்சுமி பரிபூரண அருள் நமக்கு கிடைத்து விடுகிறது. அதன் பின்பு நம் வீட்டில் இருக்கும் வாஸ்து தோஷங்கள் அனைத்தும் நீங்கிவிடும் அதுமட்டும் இல்லாமல் உங்கள் வீட்டில் நிலை வாசலில் கிரகலட்சுமி தயாரின் உருவப்படத்தை வைத்து ஒவ்வொரு வாரமும் வெள்ளிக்கிழமை தயாரின் படத்திற்கு மஞ்சள் குங்குமம் பொட்டு வைத்து பூ சூடி வழிபட்டு வந்தாலும் நம் வீட்டில் இருக்கும் வாஸ்து தோஷங்கள் நீங்கும். நம்பிக்கையுடன் செய்து பாருங்கள் நல்ல பலனை உங்களுக்கு கிடைக்கும்.

-விளம்பரம்-

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here