கனவன் மனைவி சண்டை தீர இந்த 5 விஷயங்களை மட்டும் செய்யுங்கள்!

- Advertisement -

பொதுவாக புதியதாக திருமணமான கனவன் மனைவிக்குள் சண்டை வருவதற்கு நிறைய காரணங்கள் உண்டு. அதில் அதிகபட்சமாக இரண்டு பேரும் சண்டையிட்டு கொள்வதற்கு மூன்று காரணங்கள் தான் உள்ளது. முதல் காரணம் தங்கள் இல்லற வாழ்வில் கணவன் மனைவிக்குள் நடக்கும் தனிப்பட்ட விஷயங்களை கணவன் மனைவியிடமும் மனைவி கணவனிடமும் பகிர்ந்து கொள்ள வேண்டும். இது இல்லாத இடத்திலும் கணவன் மனைவிக்குள் சண்டை சச்ரவுகள் வரும். இரண்டாவது காரணமாக ஒரு செயலை கணவன் மனைவி இரண்டு பேரும் சேர்ந்து செய்யும்போது அவர்களுடைய கருத்துகள் ஒருமித்ததாக இருக்கும் பொழுது அந்த இடத்தில் சண்டை என்ற வார்த்தைக்கே இடம் இருக்காது. அதையும் மீறி வேறுபட்ட கருத்துகளாக இருக்கும் பொழுது அந்த இடத்தில் சிறு சிறு மனக்கசப்புகள் ஏற்படும்.

மூன்றாவது காரணமாக மேலே சொன்ன இரண்டு காரணங்கள் மூலம் கணவன் மனைவிக்குள் சண்டை ஏற்படும் பட்சத்தில் கணவன் மனைவி உறவுகுகுள் விரிசல் ஏற்படும் அந்த விரிசலின் போது கணவன் தன் மனைவி எங்கே தன்னை விட்டு பிரிந்து விடுவாளோ இல்லை மனைவி தன்னை விட்டு தன் கணவன் பிரிந்து விடுவானோ என்ற பயம் ஆட்களும் பொழுது அவர்களுக்குள் இருக்கும் சண்டை இன்னும் பெரிதாக ஆகத் தொடங்கும் இதுவே வளர்ந்து கொண்டு போயி விவாகரத்து வரை சென்று விடும். ஆனால் இன்று இந்த கணவன் மனைவிக்கு இடையில் வரும் பிரச்சனைகளை ஆன்மிக ரீதியாக எப்படி எதிர்கொள்வது என்பதை பற்றி இந்த ஆன்மீகம் குறித்த தொகுப்பில் நாம் காணலாம் வாருங்கள்.

- Advertisement -

திருமணமான தம்பதிகள் தங்களின் குலதெய்வம் மற்றும் இஷ்ட தெய்வங்கள் ஆலயங்களுக்கு சென்று தரிசிக்கும் போது முதலில் கிருஷ்ணரை வணங்கி விட்டு செல்ல வேண்டும் இப்படி கிருஷ்ணரை வணங்குவது மூலமாக கணவன் மனைவிக்குள் அன்யோன்யமும் அன்பும் வேர் விட்டு வளரும்.

கணவன் மனைவிக்குள் சண்டை அடிக்கடி நிகழ்ந்து கொண்டிருக்கும் பொழுது கணவன் திங்கட்கிழமை நாட்களில் மனைவிக்கு வெள்ளை நிற பொருட்களை பரிசாக வாங்கி கொடுப்பது மிகவும் நல்லது.

-விளம்பரம்-

கணவன் தன் மனைவி யாருடனோ தொடர்பில் இருக்கிறார் என்ற சந்தேகம் வரும் பொழுதும், மனைவிக்கு தன் கணவன் வேறொரு பெண்ணுடன் தொடர்பில் உள்ளார் என்ற சந்தேகம், என இருவருக்கும் வரும் பொழுது வாராவாரம் வெள்ளிக்கிழமைகளில் பசுவுக்கு புல் வாங்கி கொடுத்து சாப்பிட வைத்தாள். வேறு நபருடன் தொடர்பில் உள்ளவர்கள் மனம் மாறி மறுபடியும் உங்களுடன் நல்லபடியாக பேச ஆரம்பித்து விடுவார்கள்.

மேலும் கணவன் மனைவி இருவருக்கும் இடையில் அன்யோன்யம் பெருகுவதற்காக வளர்பிறை அஷ்டமி நாட்களில் கணவன் மனைவியின் நெற்றியிலும் மற்றும் வகட்டிலும் குங்குமம் அல்லது செந்தூரம் வைத்து வந்தால் இருவருக்கும் இடையில் உள்ள அன்யோன்யம் பெருகும்.

கௌரிசங்கர் ருத்ராட்சம் அதாவது இயற்கையாகவே இணைந்த கௌரிசங்கர் ருத்ராட்சத்தை உங்கள் வீட்டில் வைத்த பூஜை செய்து வரும் பொழுது கணவன் மனைவி இருவருக்கும் இடையிலான அன்யோன்யம் பெருகி வளரும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here