பொதுவாக கணவன் மனைவி இருவருக்கும் இடையில் சண்டை வருவதற்கு பல்வேறு காரணங்கள் இருக்கலாம். அதில் இருக்கும் காரணங்களிலேயே முக்கியமான காரணம் என்றால் அது கருத்து வேறுபாடுகள் தான். கணவன் மனைவி இருவரும் சேர்ந்து ஒரு செயல் செய்யும்போது அவர்கள் இருவரும் எடுக்கும் முடிவுகள் ஒருமித்ததாக இருக்கும் பொழுது அங்கு சண்டே சச்சரவுகள் என எதற்கும் இடம் இருக்காது.
ஆனால் ஒருவேளை இரண்டு பேரும் எடுக்கும் முடிவுகள் வேறுபட்ட முடிவுகளாக இருக்கும் பொழுது அந்த இடத்தில் சண்டை சச்சரவுகள் அதிகமாகின்றனர். இதன் காரணமாகவே கணவன் மனைவி உறவு விவாகரத்து என்ற இடத்தில் போய் முடிகிறது இப்படி கணவன் மனைவிக்குள் வரும் சண்டை சச்சரவுகளை ஆன்மிகத்தின் மூலமாக எப்படி சரி செய்வது என்பதை பற்றி இந்த ஆன்மீகம் குறித்த தொகுப்பில் நாம் காணலாம் வாருங்கள்.
மதுரையா ? சிதம்பரம்பா ?
பொதுவாக முன்பெல்லாம் புதியதாக திருமணமான தம்பதிகளிடம் மதுரையா ? சிதம்பரமா ? என்று பார்ப்பவர்கள் கேள்வி எழுப்புவார்கள் எதற்காக தெரியுமா ? மதுரை என்பது மீனாட்சி தாயின் கை ஓங்கி இருக்கும் இடம் ஆகும். சிதம்பரம் என்பது சிவபெருமானின் உருவமான நடராஜரின் கை ஓங்கி இருக்கும் இடமாகும். அதனால் அவர்களது திருமண வாழ்க்கை பற்றி மதுரையா சிதம்பரம் என்று கேள்வி எழுப்பும் பொழுது ஆணின் கை ஓங்கி இருக்கும் தம்பதிகள் சிதம்பரம் என்றும் பெண்ணின் கை ஒங்கி இருக்கும் தம்பதிகள் மதுரை என்றும் பதில் கூறுவார்கள். ஆனால் மூன்றாவதாகவும் ஒரு பதில் உள்ளது.
அர்த்தநாரீஸ்வரர்
ஆனால் அந்த திருமண வாழ்க்கையில் கணவன் மனைவி இருவரும் ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து சமநிலையான வாழ்க்கை வாழ்பவர்கள் திருச்செங்கோடு எனக் கூறுவார்கள். திருச்செங்கோடு என்பது சிவபெருமான் பார்வதி தேவி இணைந்த உருவம். அதாவது ஆண் பெண் இருவரும் இணைந்த அர்த்தநாரீஸ்வரர் கோவில் இருக்கும் இடமாகும்.
கனவன் மனைவி சண்டை தீர
அதே போன்று நாம் தமிழகத்தில் சிவகங்கை பைரவர் பட்டியில் பைரவர் சன்னிதானத்திற்கு அருகிலேயே அர்த்தநாரீஸ்வரரின் திருஉருவ சிலை உள்ளது. குடும்பத்தில் அடிக்கடி சண்டை நிகழ்ந்து கொண்டிருக்கும் கணவன் மனைவிகள் இருவரும் இந்த கோயிலுக்கு சென்று அர்த்தநாரீஸ்வரர் தரிசித்து தங்கள் பிரார்த்தனைகளை கூறி வந்தால் திருமண வாழ்க்கையில் கணவன் மனைவி இருவருக்கும் சண்டை சச்சரவுகள் இல்லாமல் ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து சுகமான வாழ்க்கையை வாழ்வார்கள்.