கனவன் மனைவிக்குள் எலியும், பூனையும் போலா சண்டை வருகிறதா ? இந்த விளக்கு ஏற்றுங்கள் போதும்!

- Advertisement -

சமீபகாலமாகவே வீட்டில் இருக்கும் கணவன் மனைவி உறவுகளுக்குள் ஒருவர்க்கு ஒருவர் விவாதம் செய்து, கத்திக்கொண்டு, சண்டையிட்டுக் கொள்வதையை முழு நேர வேலையாக வைத்து கொண்டு உள்ளனர். எப்பொழுதெல்லாம் விவாகரத்து என்பது சாதாரணமான விஷயமாகிவிட்டது இப்படி கணவன் மனைவி இருவரும் சண்டை போட்டுக்கொண்டு அவரவர் கஷ்டங்களை அவர்களது மனதிற்குள் வைத்து கொள்கிறார்கள். அதனால் இப்படி வீட்டில் கணவன் மனைவியாக இல்லாமல் அந்நியர்கள் போல் எப்பொழுதும் சண்டை போட்டுக் கொண்டிருப்பவர்களை நல்ல குடும்ப தம்பதிகளாக மாற்றுவது பற்றி தான் இன்று நாம் இந்த ஆன்மீகம் குறித்த தொகுப்பில் தெளிவாக காணப் போகிறோம்.

-விளம்பரம்-

இப்படி கணவன் மனைவிக்குள் வரும் பிரச்சனையை ஒரு விளக்கு ஏற்றுவதன் மூலம் ஆன்மீக ரீதியாக நாம் சரி செய்து கொள்ளலாம். ஆம், இந்த பரிகாரத்திற்கு விளக்கு ஏற்றுவதற்கு நாம் கடைகளில் வாங்கும் திரியை பயன்படுத்தாமல் மரத்திலிருந்து கிடைக்கும் பஞ்சை எடுத்துக் கொண்டு அதை திரி போல தயார் செய்து நிறைய வைத்துக் கொள்ளுங்கள். பின்பு விளக்கு ஏற்றுவதற்கு மண்ணால் செய்யப்பட்ட அகல் விளக்கை எடுத்துக் கொள்ளுங்கள். விளக்கில் ஊற்றுவதற்கு நெய், நல்லெண்ணெய், வெண்ணெய் எதை வேண்டுமானாலும் பயன்படுத்திக் கொள்ளுங்கள்.

- Advertisement -

பின்பு பூஜை அறை சுத்தப்படுத்திக் கொண்டு உங்களுக்கு பிடித்த இஷ்ட தெய்வம் அல்லது குலதெய்வ படத்தின் முன்பாக மண்ணால் செய்யப்பட்ட அகல் விளக்கை வைத்து அதில் எண்ணெய் ஊற்றி நீங்கள் உங்கள் கைகளால் செய்த தனித்துவம் நிறைந்த திரியில் இரண்டு திரிகள் எடுத்துக் கொண்டு இரண்டையும் ஒன்றாக பின்னிப் பிணைந்து பின் விளக்கில் வைத்து விளக்கு ஏற்றி.

தெய்வத்தை மனதார நினைத்து “எந்தவித கருத்து வேறுபாடுகள், கஷ்டங்கள் வந்தாலும் எங்களுக்குள் வரும் சண்டையை நாங்களே பேசி தீர்த்துக் கொள்வோம் என்று மனம் உருகி வேண்டி வேண்டிக் கொள்ளுங்கள்” தினசரி எப்படி செய்து வந்தால் கணவன் மனைவிக்குள் சண்டை வராது. நாம் இப்படி இரண்டு திரி போட்டு விளக்கு போடுவது கணவன் மனைவிகுள் இருக்கும் ஒற்றுமையே குறிக்கும் பொருட்டு இந்த பரிகாரமும் செய்கிறோம்.

ஒரு ஆண் பெண் ஒரு மனதாக கணவன் மனைவி என்ற பந்தத்திற்குள் வரும் பொழுது அந்த உறவானது அற்புதமாகவும் புனிதமாகவும் இருக்கும். இந்த பந்தத்தில் இருக்கும் போது எந்த விஷயம் நடந்தாலும் முதலில் கணவன் மனைவியிடமும், மனைவி கனவனிடமும் தெரியப்படுத்தி கொள்வது அவசியம். நீங்கள் செய்யும் ஒவ்வொரு செயல்கள் பற்றி முடிவு எடுக்கும் பட்சத்தில் இருவருடைய கருத்தும் ஒரே போல் இருந்தால் அங்கு பிரச்சனை இருக்காது.

-விளம்பரம்-

அதை விட்டு இருவருக்கும் வேறு வேறு கருத்துகள் இருக்கும் பொழுது அதை நாம் பேசி தீர்க்காமல் போகும் பொழுது தான் அந்த இடத்தில் பிரச்சனை ஆரம்பிக்கிறது. ஆனால் இந்த கருத்து வேறுபாடுகள் என்பதெல்லாம் மிகப்பெரிய விஷயம் இல்லை. இதையும் தாண்டி எப்படி கணவன் மனைவி என்ற உறவில் விரிசில் விழாமல் பாதுகாக்க வேண்டும் என்பதை தான் நீங்கள் சிந்திக்க வேண்டும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here