குறைந்த செலவில், குறைவான நேரத்தில் சமைக்கும் உணவு தான் சட்னி. இதை பெரும்பாலும் நாம் இட்லி, தோசை, சப்பாத்தி ஆகியவற்றுடன் சேர்த்து சாப்பிடுவோம். அப்படி எளிமையாக தயார் செய்யப்படும் ஹைதராபாத் வேர்க்கடலை சட்னி எப்படி செய்வது என இந்த தொகுப்பில் பார்க்கலாம். தினமும் நாம் காலை உணவாக சாப்பிடும் இட்லி, தோசை போன்றவற்றிற்கு தேங்காய் சட்னி, கார சட்னி, சாம்பார் என்று செய்ததே செய்து அலுத்து விட்டதா? இதனை தவிர வேறு ஏதாவது சட்னியை செய்து தருமாறு வீட்டில் உள்ளவர்கள் கேட்டால் இந்த ஹைதராபாத் வேர்க்கடலை சட்னியை செய்து கொடுங்கள்.
பின் இதனையே அடிக்கடி செய்து தருமாறு வீட்டில் இருப்பவர்கள் சொல்லும் அளவிற்கு அதன் சுவை அபாரமாக இருக்கும். தென்னிந்திய உணவு வகைகளில் ஹைதராபாத் உணவு வகை மிகவும் பிரபலமான ஒன்றாக உள்ளது. ஏனென்றால் இவற்றின் சுவையும், ருசியும் தனித்துமானதாக உள்ளது. இந்த அற்புதமான ஹைதராபாத் உணவு வகைகளில் காலை வேளையில் செய்யப்படும் உணவுகள் அல்டிமேட் சுவையில் இருக்கும். அதிலும் இட்லி, தோசைகளுக்கு பரிமாறப்படும் சட்னிகளின் ருசியே தனி தான்.
இந்த டேஸ்ட்க்காகவே கணக்கில்லாமல் இட்லி, தோசைகளை உள்ளே தள்ளலாம். அப்படிப்பட்ட காரசாரமான ஹைதராபாத் வேர்க்கடலை சட்னி செய்வது எப்படி என்று இங்கு பார்க்கலாம். விதவிதமான சட்னி வகைகள் இருக்கும் போதும் வேர்க்கடலை சட்னிக்கு மயங்காதவர்களே இருக்க முடியாது என கூறலாம். முறுகலான தோசை உடன் கொஞ்சம் வேர்க்கடலை சட்னி வைத்து கொடுத்தால் அவ்வளவு அருமையாக இருக்கும். ஹைதராபாத் பகுதிகளில் கிடைக்கக் கூடிய இந்த வேர்க்கடலை சட்னியை எளிமையாக நாமும் நம் வீட்டிலேயே செய்து காட்டலாம்.
ஹைதராபாத் வேர்க்கடலை சட்னி | Hyderabad Groundnut Chutney Recipe In Tamil
Equipment
- 1 கடாய்
- 1 மிக்ஸி
- 1 பவுள்
- 1 தாளிப்பு கரண்டி
தேவையான பொருட்கள்
- 1 கப் வேர்க்கடலை
- 1 துண்டு புளி
- 1/2 டீஸ்பூன் கடுகு
- 1/2 டீஸ்பூன் சீரகம்
- 1 கொத்து கறிவேப்பிலை
- எண்ணெய் தேவையான அளவு
- உப்பு தேவையான அளவு
- 1/4 கப் தேங்காய் துருவல்
- 5 பல் பூண்டு
- 5 பச்சை மிளகாய்
- 2 வர மிளகாய்
- 1/4 டீஸ்பூன் பெருங்காயத்தூள்
செய்முறை
- முதலில் ஒரு கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் வேர்கடலையை சேர்த்து வறுத்து எடுத்துக் கொள்ளவும்.
- பின் அதே எண்ணையில் பச்சை மிளகாய், சீரகம், பூண்டு, தேங்காய் துருவல் சேர்த்து வதக்கி கொள்ளவும்.
- பின் இவை ஆறியதும் இதனை ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்து அதனுடன் உப்பு மற்றும் புளி, சிறிதளவு தண்ணீர் விட்டு நன்கு அரைத்துக் கொள்ளவும்.
- பின் ஒரு தாளிப்பு கரண்டியை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, கறிவேப்பிலை, உளுந்தம் பருப்பு, வர மிளகாய், பெருங்காயத்தூள் சேர்த்து தாளித்து சட்னியில் சேர்த்து கலந்து விடவும்.
- அவ்வளவுதான் சுவையான மற்றும் ஆரோக்கியமான ஹைதராபாத் வேர்க்கடலை சட்னி தயார். இது இட்லி, தோசைக்கு மட்டுமல்லாமல் சாதத்துடன் சேர்த்து சாப்பிட மிகவும் சுவையாக இருக்கும்.
Nutrition
இதனையும் படியுங்கள் : தோசை, இட்லிக்கு இப்படி செட்டிநாடு ஸ்டைல் தக்காளி சட்னி செய்து பாருங்கள் இரண்டு அதிகமாகவே சாப்பிடுவார்கள்!!