- Prep
- 10 min
- Cook
- 10 min
- Total
- 20 min
- Serves
- 5
- Cuisine
- Hyderabad, Indian
- Course
- Side Dish
வெவ்வேறு ஊர்களின் சமையல் எப்போதும் ஒரு தனி சுவவையுடன் இருக்கும். நமது ஊர் உணவைத் தாண்டி மற்ற ஊர்களினன் உணவையும் ருசித்து உண்ண மனம் ஏங்கும். அந்த வரிசையில் ஹைதராபாத்தின் அனைத்து விதமான உணவுகளுக்கும் தனி இடம் உண்டு. பிரியாணி சொன்னாலே நாம நினைக்கிற நகரம் ஹைதராபாத்தான். அதே மாதிரி, ஹைதராபாத்ல பிரியாணியோட கூட்டியாக டாப் லெவல்ல இருக்கறது இந்த தால்சா தான். தால்சா என்றால் பருப்பு, காய்கறி அல்லது மாமிசம் கலந்து செய்யும் ஒரு குழம்பு வகை. துவரம் பருப்பு, வெங்காயம், தக்காளி, மிளகாய் தூள், மஞ்சள் தூள், சோம்பு, பட்டை, கிராம்பு, ஏலக்காய், பூண்டு, இஞ்சி எல்லாம் சேர்ந்து செய்யும் ஒரு ரெசிபி தான்.
ஹைதராபாதி தால்சா என்பது தெலுங்கானா மாநிலத்தின் ஹைதராபாத் பகுதியில் பிரபலமாக உள்ள ஒரு பாரம்பரிய உணவாகும். அங்கு செய்யப்படும் தால்சா மிகவும் ருசியான ஒரு உணவாகும். தால்சாவில் சைவ மற்றும் அசைவம் என இரு விதமாக செய்யப்படுகிறது. அந்த வகையில் ஹைதராபாத் பகுதிகளில் பொதுவாக செய்யப்படும் சைவ தால்சா செய்யும் முறையை இங்கு காண்போம். விடுமுறை வந்தாலே நம் அனைவருக்கும் குஷி தான். ஏனெனில் அன்று நமக்கு பிடித்தவாறு எதையும் சமைத்து சாப்பிடலாம்.
அந்த வகையில் நீங்கள் இந்த வார இறுதியில் மட்டன் பிரியாணி செய்வதாக இருந்தால், இந்த ஹைதராபாத் ஸ்டைல் தால்சா செய்யுங்கள். இந்த தால்சா வெள்ளை சாதத்தில் போட்டு கொஞ்சம் நெய் விட்டு பிசைந்து சாப்பிட்டால், அட்டகாசமான சுவையில் இருக்கும். சூப்பரான ஹைதராபாத் ஸ்டைல் தால்சா ரெசிபியை சுவையாக எப்படி செய்வது என்பதை பற்றி இந்த பதிவில் தெரிந்து கொள்வோம் வாருங்கள்.
இதனையும் படியுங்கள் : அருமையான பிரயாணி சாப்பிட ருசியான மலபார் சிக்கன் பிரியாணி இப்படி வீட்டில் ஈஸியாக செய்து பாருங்க!
Ingredients
Method
முதலில் ஒரு குக்கரில் கடலை பருப்பு, துவரம் பருப்பு, பாசிப்பருப்பு, 1 நறுக்கிய பெரிய வெங்காயம், தக்காளி, மஞ்சள் தூள், பச்சை மிளகாய், கொத்தமல்லி, புதினா சேர்த்து தேவையான அளவு தண்ணீர் விட்டு நான்கு விசில் விட்டு வேகவைத்து எடுத்துக் கொள்ளவும்.
ஒரு கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பட்டை, கிராம்பு, ஏலக்காய், மிளகு, வர மிளகாய் சேர்த்து பொரிந்ததும், வெங்காயம் சேர்த்து நன்கு வதக்கவும்.
வெங்காயம் வதங்கியதும் தக்காளி மற்றும் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து நன்கு வதக்கவும். அதன்பிறகு மஞ்சள் தூள், மிளகாய் தூள், கரம் மசாலா தூள், சீரகத்தூள், மல்லி தூள் சேர்த்து எண்ணெய் பிரியும் வரை வதக்கவும்.
பின் நறுக்கிய வைத்துள்ள சுரைக்காய் சேர்த்து சிறிதளவு தண்ணீர் விட்டு மூடி வைத்து வேக விடவும். அதன்பிறகு வேக வைத்துள்ள பருப்பை சேர்த்து, அதனுடன் புளி கரைசல், உப்பு மற்றும் தண்ணீர் விட்டு மூடி வைத்து நன்கு வேக விடவும்.
இது நன்கு வெந்து கொதித்து வந்ததும் கொத்தமல்லி மற்றும் கஸ்தூரி மேத்தி சேர்த்து இறக்கவும். அவ்வளவுதான் சுவையான ஹைதராபாத் ஸ்டைல் தல்சா தயார்.






