- Prep
- 10 min
- Cook
- 10 min
- Total
- 20 min
- Serves
- 6
- Cuisine
- Indian, TAMIL
- Course
- Breakfast, dinner
இந்த பொடி உளுத்தம் பருப்பு, கடலை பருப்பு, காய்ந்த மிளகாய் ஆகியவற்றைக் கொண்டு செய்யப்படும் ஒரு சுவையான பொடி வகை தான். இட்லி, தோசை, போன்றவற்றுடன் சேர்த்து சாப்பிட்டால் மிகவும் சுவையாக இருக்கும். இட்லி, தோசைக்கு சட்னி, சாம்பார் என சாப்பிடுவதை விட அவ்வப்போது இது போன்ற இட்லி பொடியையும் சேர்த்து கொள்ளவும். இந்த பொடியை அரைத்து வைத்துக் கொணடால் 3-4 மாதங்கள் வரை கெடாமல் இருக்கும்.
இதையும் படியுங்கள் : சுவையான முடக்கத்தான் கீரை சட்னி செய்வது எப்படி ?
சாம்பார், சட்னி செய்வதற்கு நேரம் இல்லையென்றால் அப்பொழுது இந்த பொடியுடன் சேர்த்து சாப்பிடுங்கள் அவ்வளவு சுவையாக இருக்கும். குறிப்பாக உங்கள் வீட்டில் குழந்தைகள் மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள் அந்த அளவிற்கு அட்டகாசமான சுவையில் இருக்கும். இந்த இட்லி மிளகாய் பொடி எப்படி செய்வது, தேவையான பொருட்கள், செய்முறை என அனைத்தையும் இந்த சமையல் குறித்த தொகுப்பில் நாம் காணலாம் வாருங்கள்.
Ingredients
Method
முதலில் வெறும் வாணலியில்அடுப்பில் வைத்து எள்ளை சேர்த்து சிவக்க வறுக்கவும்.
பிறகு வாணலில் எண்ணெய் விட்டு முதலில் கடலைப் பருப்பு, பிறகு கருப்பு உளுந்து, பிறகு காய்ந்த மிளகாய், வெள்ளை உளுத்தம் பருப்பு சேர்த்து வறுத்து, இறுதியில் கருவேப்பிலையும் போட்டு வறுத்து தேவையான உப்பு சேர்த்து இறக்கிவிடவும்.
சற்று ஆறிய பின் மிக்சியில் சேர்த்து கொரகொரப்பாக அரைத்துக் கொள்ளவும்.
காற்றுப்படாத டப்பாவில் போட்டு வைத்துப் பயன்படுத்தவும்.






