Advertisement
சைவம்

இட்லி தோசைக்கு சட்னி அரைக்க முடியாத நேரத்துல கை கொடுக்கக் கூடிய இந்த காரசாரமான இட்லி மிளகாய் பொடியை செஞ்சு பாருங்க!

Advertisement

நம்ம வீட்டுல அடிக்கடி செய்யக்கூடிய இட்லி தோசைக்கு ஒரு சிலருக்கு சட்னி வைத்து சாப்பிட பிடிக்கும் ஒரு சிலருக்கு சாம்பார் வைத்து சாப்பிட பிடிக்கும் ஒரு சிலருக்கு குருமா, பழைய குழம்பு சர்க்கரை தேன் இதெல்லாம் வைத்து சாப்பிட பிடிக்கும் ஆனா ஒரு சிலருக்கு இட்லி மிளகாய் பொடி வச்சு அதுல எண்ணெய் ஊத்தி சாப்பிட ரொம்ப ரொம்ப பிடிக்கும். நம்ம வீட்ல ஒரு வேலை சட்னி சாம்பார் எதுவுமே இல்லனா ரொம்ப பசிக்குதுனா சட்டுனு ரெண்டு தோசை சுட்டு இட்லி மிளகாய் பொடியும் நல்லெண்ணெயோ சேர்த்து வச்சு சாப்பிட்டா டேஸ்டும் செம்மையா இருக்கும் சட்டுனு நம்ம சாப்பாட்டு வேலை முடிஞ்சு மாதிரியும் இருக்கும்.

அந்த அளவுக்கு நமக்கு வேலையாக குறைக்கக்கூடிய ரொம்ப  டேஸ்ட்டா இருக்கக்கூடிய இட்லி மிளகாய் பொடி எப்படி செய்வது என்று பார்க்க போறோம். இந்த மிளகாய் பொடியில் நம்ம உளுந்து சேர்த்து அரைக்கிறதால ரொம்பவே ஆரோக்கியமானது என்று கூட சொல்லலாம். காரணம் உளுந்து சாப்பிடுவதால் நம்ம உடம்புல கை கால் வலி மூட்டு வலி போன்ற பிரச்சனைகள் எல்லாமே சரியாகும். அதுமட்டுமில்லாம பெண்கள் முக்கியமா இந்த உளுந்து அதிகமா சேர்த்துகிறதால அவங்களுக்கு ரொம்பவே ஆரோக்கியமானது. இந்த இட்லி மிளகாய் பொடிய நம்ம இட்லிக்கு தொட்டு மட்டும் தான் சாப்பிட முடியுமான்னு கேட்டா இல்ல.

Advertisement

தோசைக்கு மேல இதை தூவி விட்டு பொடி தோசை சுட்டு சாப்பிடலாம் அந்த புளி தோசைக்கு காம்பினேஷன் தேங்காய் சட்னி வைத்து சாப்பிட்டால் செமையா இருக்கும். அது மட்டும் இல்லாம மினி இட்லி தட்டு இட்லி எல்லாத்துக்கும் இந்த பொடியை தூவி விட்டு கொஞ்சம் நெய் ஊத்தி அதுக்கு தேங்காய் சட்னியோ தக்காளி சட்னியோ இல்ல சாம்பாரோ வச்சு சாப்பிட்டா டேஸ்ட் ரொம்பவே சூப்பரா இருக்கும். குழந்தைகளும் இந்த இட்லி மிளகாய் பொடி ரொம்பவே விரும்புவாங்க. அதனால எல்லார் வீட்லயும் கண்டிப்பா இந்த இட்லி மிளகாய் பொடி இருக்கணும் முக்கியமா வேலைக்கு போறவங்க வீட்ல இந்த இட்லி மிளகாய் பொடி இருந்துச்சுன்னா உங்களுக்கு ரொம்பவே உதவியா இருக்கும். இப்ப வாங்க இந்த ஆரோக்கியமான டேஸ்டான இட்லி மிளகாய் பொடி எப்படி செய்வது என்று பார்க்கலாம்

இட்லி மிளகாய் பொடி | Idly Milagai podi Recipe In Tamil

Advertisement
Print Recipe
தோசைக்கு மேல இதை தூவி விட்டு பொடி தோசை சுட்டு சாப்பிடலாம் அந்த புளி தோசைக்கு காம்பினேஷன்தேங்காய் சட்னி வைத்து சாப்பிட்டால் செமையா இருக்கும். அது மட்டும் இல்லாம மினி இட்லிதட்டு இட்லி எல்லாத்துக்கும் இந்த பொடியை தூவி விட்டு கொஞ்சம் நெய் ஊத்தி அதுக்கு தேங்காய்சட்னியோ தக்காளி சட்னியோ இல்ல
Advertisement
சாம்பாரோ வச்சு சாப்பிட்டா டேஸ்ட் ரொம்பவே சூப்பரா இருக்கும்.குழந்தைகளும் இந்த இட்லி மிளகாய் பொடி ரொம்பவே விரும்புவாங்க. அதனால எல்லார் வீட்லயும்கண்டிப்பா இந்த இட்லி மிளகாய் பொடி இருக்கணும் முக்கியமா வேலைக்கு போறவங்க வீட்ல இந்தஇட்லி மிளகாய் பொடி இருந்துச்சுன்னா உங்களுக்கு ரொம்பவே உதவியா இருக்கும். இப்ப வாங்கஇந்த ஆரோக்கியமான டேஸ்டான இட்லி மிளகாய் பொடி எப்படி செய்வது என்று பார்க்கலாம்
Course Breakfast, dinner
Cuisine tamil nadu
Keyword Idly Milagai Podi
Prep Time 5 minutes
Cook Time 10 minutes
Servings 4
Calories 354

Equipment

  • 1 கடாய்

Ingredients

  • 1 1/2 கப் வெள்ளை உளுந்து
  • 1/2 கப் கருப்பு உளுந்து
  • 10 காய்ந்த மிளகாய்
  • 1 டீஸ்பூன் பெருங்காயத்தூள்
  • 3 டேபிள் ஸ்பூன் கடலைப் பருப்பு
  • 6 டீஸ்பூன் எள்
  • 2 கைப்பிடி கறிவேப்பிலை
  • உப்பு தேவையான அளவு
  • எண்ணெய் தேவையான அளவு

Instructions

  • முதலில் ஒரு கடாயில் எள் சேர்த்து வறுத்து எடுத்துக் கொள்ளவும்.
  • பிறகு அதே கடாயில் சிறிதளவு எண்ணெய் சேர்த்து காய்ந்த மிளகாய் கடலைப்பருப்பு சேர்த்து வறுத்துக் கொள்ளவும் வெள்ளை உளுந்து மற்றும் கருப்பு உளுந்து சேர்த்து வறுத்துக் கொள்ளவும்
  • இறுதியாக கருவேப்பிலை சேர்த்த நன்றாக வறுத்து எடுத்து அனைத்தையும் ஆற வைக்கவும். அனைத்து பொருட்களையும் வகுக்கும் பொழுது அடுப்பையும் மிதமான தீயில் வைத்துக் கொள்ள வேண்டும்
  • அனைத்து பொருட்களும் ஆறியப் பிறகு ஒரு மிக்ஸி ஜாரில் போட்டு தேவையான அளவு உப்பு பெருங்காயத்தூள் சேர்த்து கொரகொரப்பாக அரைத்துக் கொள்ளவும்.
  • இப்பொழுது அதனை ஒரு டப்பாவில் போட்டு அடைத்து வைத்துக் கொண்டால் ஆறு மாதம் வரையில் பயன்படுத்திக் கொள்ளலாம்.

Nutrition

Serving: 200g | Calories: 354kcal | Carbohydrates: 34g | Protein: 12g | Potassium: 398mg | Calcium: 12mg

இதையும் படியுங்கள் : சட்டுனு ரசம் வைக்க நினைத்தால் சூப்பரான இந்த தீடீர் ரசப்பொடிய செஞ்சு வச்சுக்கோங்க அவசரத்திற்கு உதவும்!

Advertisement
Ramya

Recent Posts

மீந்து போன சப்பாத்தியை வீணாக்காமல் அதில், சூப்பரான சப்பாத்தி நூடுல்ஸ் இப்படி ட்ரை பண்ணி பாருங்க!

பெரும்பாலானோரின் வீட்டில் இரவு நேரத்தில் சப்பாத்தி தான் டின்னராக இருக்கும். அப்படி உங்கள் வீட்டில் இரவு செய்து சப்பாத்தியானது மீதம்…

9 மணி நேரங்கள் ago

வேலை பார்க்கும் இடத்தில் நல்ல பெயர் வாங்குவதற்கு ஒரு எளிமையான பரிகாரம்

இந்த உலகில் உள்ள அனைவரும் நேர்மையாக வேலை பார்க்க வேண்டும் என்று நினைப்பதற்கு இரண்டு காரணங்கள் ஒன்று அனைவரிடமிருந்தும் பாராட்டுக்களை…

10 மணி நேரங்கள் ago

மலாய் கோஃப்தா  ஒரு முறை இப்படி ட்ரை பன்னி பாருங்க சட்டி நிறைய செய்தாலும் காலியாகும்!

சப்பாத்தி என்றாலே அதற்கு சைட் டிஷ் ஆக குருமா தக்காளி சட்னி போன்றவை தான் அதிகமாக செய்வோம். அதையும் தவிர்த்து…

12 மணி நேரங்கள் ago

கொய்யாப்பழ ரோஸ் மில்க் ஷேக் ஒரு முறை இப்படி செய்து! இனி அடிக்கடி இந்த சுவையான மில்க் ஷேக் தான் செய்து குடிப்பீர்கள்!

மாலை வேளையில் உங்கள் குழந்தைகள் பள்ளி முடிந்து வரும் போது, அவர்களுக்கு சத்தான, சுவையான மற்றும் வயிறு நிரம்பும்படியான ரெசிபியை…

14 மணி நேரங்கள் ago

கேரளா ஸ்பெஷல் ருசியான நேந்திரம் பழம் பஜ்ஜி இப்படி செய்து பாருங்க! இதன் ருசியே தனி!!

மழைக்காலத்தில் அல்லது டீக்கடைகளில் நமக்கு பிடித்த ஒன்று வடை அதுவும் சூடான சுவையான வடை என்றால் யாருக்குத்தான் பிடிக்காது அதிலும்…

15 மணி நேரங்கள் ago

செல்வம் பெருகிக் கொண்டே இருக்க குபேரனை எப்படி வழிபட வேண்டும்

செல்வம் பலமடங்கு பெருகவும், நமக்கு தேவையான செல்வத்தை சம்பாதிக்கவும், நாம் சேமித்து வைத்துள்ள செல்வத்தை பாதுகாக்கவும், எப்போதும் நம் வீட்டில்…

16 மணி நேரங்கள் ago