Advertisement
சைவம்

சுட சுட சாதத்துடன் சாப்பிட ருசியான கோவைக்காய் கூட்டு இப்படி ஒரு தரம் செய்து கொடுங்கள்! ஒரு சட்டி சோறும் காலியாகும்!

Advertisement

கோவக்காய் அப்படின்னாலே எல்லாருக்கும் இப்ப ரொம்பவே பரிச்சயமான ஒரு காயாக ஆயிடுச்சு. முன்னாடி இது விளையாடறதுக்கு மட்டும் பயன்படுத்தற காய் அப்படின்னு நினைச்சிட்டு இருந்தோம். ஆனா இப்போ அந்த காய்கள் நல்ல மருந்து பொருளாகவும் உணவுக்கு பயன்படுத்தப்பட்டிருக்கிறது. அதனுடைய இலைகளும் , கோவை பழங்களுமே வந்து மருத்துவ குணம் நிறைந்ததாக இருக்கு. அப்படி அந்த கோவக்காய் நம்ம எப்ப வாங்கினாலும் அதுல வறுவலும், பொரியலும் தான் பண்ணி இருப்போம்.

ஆனால் இந்த கோவக்காய் வச்சு கூட்டு பண்ணி சாப்பிட்டு இருக்கீங்களா? அது இன்னுமே ரொம்ப சுவையா இருக்கும். இந்த கோவக்காய் கூட்டு எப்படி செய்யறது தெரிஞ்சுக்க இருக்கும் இந்த பதிவில். கோவக்காயில் சிலர் வற்றல் கூட போடுவாங்க. இந்த கோவக்காய் வற்றல் ரொம்பவே சுவையா இருக்கும். கோவக்காய் விருப்பமில்லாதவர்களுக்கு கூட இந்த கோவக்காயில நம்ம கூட்டு வச்சி கொடுக்கும் போது ரொம்ப விரும்பி சாப்பிடுவாங்க.

Advertisement

இந்த கோவக்காய் உடலில் நிறைய பிரச்சனைகளுக்கு தீர்வாக இருக்குது. முக்கியமா சர்க்கரை நோயாளிகளுக்கு இந்த கோவக்காய் நல்ல பலன்களை கொடுக்கிறது குளுக்கோஸை அளவை சமமாக வைப்பதில். ஆகையால் முடிந்த அளவுக்கு எல்லாருமே வாரத்துக்கு ஒரு தடவையாவது இந்த கோவக்காயை உணவில் சேர்த்துக்கோங்க. சரி வாங்க இந்த ருசியான கோவக்காய் கூட்டு எப்படி செய்யலாம் அப்படின்னு பார்க்கலாம்.

கோவைக்காய் கூட்டு | Ivy Gourd Kootu Recipe In Tamil

Print Recipe
கோவக்காய்அப்படின்னாலே எல்லாருக்கும் இப்ப ரொம்பவே பரிச்சயமான ஒரு காயாக ஆயிடுச்சு. முன்னாடி இது விளையாடறதுக்கு மட்டும் பயன்படுத்தற காய் அப்படின்னு நினைச்சிட்டு இருந்தோம். ஆனா இப்போ அந்த காய்கள் நல்ல மருந்து பொருளாகவும் உணவுக்கு பயன்படுத்தப்பட்டிருக்கிறது.அதனுடைய இலைகளும் , கோவை பழங்களுமே வந்து மருத்துவ குணம் நிறைந்ததாக இருக்கு. அப்படி அந்த கோவக்காய் நம்ம எப்ப வாங்கினாலும் அதுல வறுவலும், பொரியலும் தான் பண்ணி இருப்போம். சரி வாங்க இந்த ருசியான கோவக்காய் கூட்டு எப்படி செய்யலாம் அப்படின்னு பார்க்கலாம்.
Advertisement
Course LUNCH
Cuisine tamil nadu
Keyword Ivy Gourd Kootu
Prep Time 5 minutes
Cook Time 12 minutes
Servings 4
Calories 21

Equipment

  • 1 கடாய்

Ingredients

  • 1/4 கிலோ கோவைக்காய்
  • 1/4 கப் பாசிப்பருப்பு
  • 2 பச்சைமிளகாய்
  • 1 தக்காளி
  • 1/2 ஸ்பூன் பெருங்காயம்
  • 1 வெங்காயம்
  • 1 ஸ்பூன் கடுகு
  • 1 ஸ்பூன் சீரகம்
  • 1 ஸ்பூன் கடலைப்பருப்பு
  • 2 காய்ந்த மிளகாய்
  • 1/2 ஸ்பூன் மஞ்சள் தூள்
  • 1 ஸ்பூன் மிளகாய் தூள்
  • 1/2 கப்  தேங்காய் துருவல்
  • 2 பல் பூண்டு
  • 1 கப் மோர்
  • உப்பு தேவையான அளவு
  • எண்ணெய் தேவையான அளவு

Instructions

  • முதலில் கோவை காய்களை சுத்தம் செய்து நீளவாக்கில் நறுக்கி மோரில் ஊற வைக்க வேண்டும்.
    Advertisement
  • பிறகு அடுப்பில் ஒரு குக்கரை வைத்து அதில் கழுவி வைத்துள்ள பாசிப்பருப்பு, தக்காளி,  பச்சைமிளகாய் சேர்த்து சிறிதளவு உப்பு, பெருங்காயம் சேர்த்து வேக வைக்கவும். அடுப்பில் ஒரு கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி கடுகு, சீரகம் சேர்த்து தாளித்து கொள்ளவும்.
  • பிறகு அதில் கடலைப்பருப்பு, காய்ந்த மிளகாய் சேர்த்து நன்றாக வதக்கிக் கொள்ளவும். பின்பு கறிவேப்பிலை , பொடியாக நறுக்கி வைத்த வெங்காயத்தை சேர்த்து பொன்னிறமாக வதக்கிக் கொள்ளவும்.
  • வெங்காயம் பொன்னிறமாக வதங்கிய பிறகு அதில் மிளகாய் தூள், மஞ்சள் தூள் சேர்த்த நன்றாக வதக்கிக் கொள்ளவும். பின் கூட்டிற்கு தேவையான அளவு நீர் சேர்த்துக் கொள்ளவும்.
  • இப்போது மோரில் ஊற வைத்துள்ள கோவைகாய்களை எடுத்து சேர்த்து நன்றாக கலந்து மூடி போட்டு வேக வைக்கவும். கோவக்காய் வெந்த பிறகு அதில் வேக வைத்து எடுத்துள்ள பாசிப்பருப்பை நன்றாக மசித்து விட்டு கொதித்துக் கொண்டிருக்கும் கோவைக்காயில் சேர்த்து நன்றாக கலந்து விடவும்.
  •  பிறகு ஒரு மிக்ஸி ஜாரில் தேங்காய் துருவலை சேர்த்து அதில் பச்சைமிளகாய், பூண்டு, சீரகம் சேர்த்து சிறிது தண்ணீர் ஊற்றி விழுதாக அரைத்து எடுத்துக் கொள்ளவும்.
  • கொதித்துக் கொண்டிருக்கும் கோவைக்காய் கூட்டில் அரைத்து வைத்துள்ள தேங்காய் விழுதை சேர்த்து நன்றாக கலந்து விடவும். தேங்காய் சேர்த்து ஒரு கொதி வந்த பிறகு இறக்கி சாதத்தோடு பரிமாறினால் சுவையான கோவைக்காய் கூட்டு தயார்.

Nutrition

Serving: 500g | Calories: 21kcal | Carbohydrates: 3.4g | Protein: 1.4g | Potassium: 30mg | Fiber: 1g | Vitamin A: 14IU | Calcium: 25mg
Advertisement
Prem Kumar

Recent Posts

மலாய் கோஃப்தா  ஒரு முறை இப்படி ட்ரை பன்னி பாருங்க சட்டி நிறைய செய்தாலும் காலியாகும்!

சப்பாத்தி என்றாலே அதற்கு சைட் டிஷ் ஆக குருமா தக்காளி சட்னி போன்றவை தான் அதிகமாக செய்வோம். அதையும் தவிர்த்து…

1 மணி நேரம் ago

கொய்யாப்பழ ரோஸ் மில்க் ஷேக் ஒரு முறை இப்படி செய்து! இனி அடிக்கடி இந்த சுவையான மில்க் ஷேக் தான் செய்து குடிப்பீர்கள்!

மாலை வேளையில் உங்கள் குழந்தைகள் பள்ளி முடிந்து வரும் போது, அவர்களுக்கு சத்தான, சுவையான மற்றும் வயிறு நிரம்பும்படியான ரெசிபியை…

4 மணி நேரங்கள் ago

கேரளா ஸ்பெஷல் ருசியான நேந்திரம் பழம் பஜ்ஜி இப்படி செய்து பாருங்க! இதன் ருசியே தனி!!

மழைக்காலத்தில் அல்லது டீக்கடைகளில் நமக்கு பிடித்த ஒன்று வடை அதுவும் சூடான சுவையான வடை என்றால் யாருக்குத்தான் பிடிக்காது அதிலும்…

4 மணி நேரங்கள் ago

செல்வம் பெருகிக் கொண்டே இருக்க குபேரனை எப்படி வழிபட வேண்டும்

செல்வம் பலமடங்கு பெருகவும், நமக்கு தேவையான செல்வத்தை சம்பாதிக்கவும், நாம் சேமித்து வைத்துள்ள செல்வத்தை பாதுகாக்கவும், எப்போதும் நம் வீட்டில்…

6 மணி நேரங்கள் ago

எளிமையான மற்றும் சுவையான தக்காளி சிக்கன் கறி ஒரு முறை இப்படி செய்து பாருங்கள் இனி இப்படித்தான் செய்வீர்கள் அந்த அளவிற்கு இதன் சுவை இருக்கும்!!

ஞாயிற்றுக்கிழமை வந்துட்டாலே, பலருக்கும் ஜாலியாக இருக்கும். ஏன்னா நமக்கு பிடிச்ச மாதிரி சமைச்சு, அதை எவ்வளவு நேரம் வேணாலும் பொறுமையா…

8 மணி நேரங்கள் ago

அருமையான வாழைக்காய் பருப்பு கடையல் இப்படி செய்தால் உங்கள் வீட்டில் உள்ள அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள்!!

மதிய நேரத்தில் என்ன சமைக்கலாம் என்று யோசித்தே சலித்து போய்விட்டதா. சாம்பார் செய்வதை விட சுலமான முறையில் அதுவும் சுவையான…

9 மணி நேரங்கள் ago