நவகிரகங்களில் ராஜாவாக கருதப்படுபவர், சூரிய பகவான். இவர் தன்னம்பிக்கை, ஆற்றல், சகிப்புத்தன்மை ஆகியவற்றின் ஆதாரமாக இருக்கிறார். அதேபோல், நல்ல புத்தி, நன்கு பேசும் திறன், படிப்பு ஆகியவற்றின் ஆதாரமாகத் திகழ்கிறார், புதன் பகவான். இத்தகைய குணங்களைக் கொண்ட புதனும் சூரியனும் இணைந்து உருவாக்கும் யோகம், ’’புதாத்திய ராஜயோகம்’’ எனப்படுகிறது. இதில், சூரியனை – ஆதித்யா என்றும் குறிப்பிடுவர். இந்தப் புதாத்திய ராஜயோகத்தைப் பெறும் ராசிகளுக்கு மக்களிடையே செல்வாக்கு, பொதுவெளியில் மரியாதை, நிதி ஆகியவை செழிக்கும். கடந்த அக்டோபர் 29 அன்று, புதன் விருச்சிக ராசியில் நுழைந்த நிலையில், இப்போது நவம்பர் 16ஆம் தேதி, கிரகங்களின் ராஜாவான சூரியனும் இந்த ராசிக்குள் நுழைகிறார். சூரியன் விருச்சிக ராசிக்குள் நுழைகிறார். இதனால் உருவாகும் புத ஆதித்ய ராஜயோகத்தினால், 4 ராசிகள் பல வெற்றிகளைப் பெறுவார்கள், மேலும் நிதி ஆதாயமும் கிடைக்கும். யார் அந்த ராசிக்காரர்கள் என்று இந்த ஆன்மீகப் பதிவில் பார்க்கலாம்.
துலாம்

துலாம் ராசிக்காரர்களுக்கு புத ஆதித்ய ராஜயோகம் மிகவும் சிறப்பாக அமையப் போகிறது. வேலை செய்பவர்களுக்கு பதவி உயர்வு கிடைப்பதுடன் சம்பளமும் கூடும். நீண்ட தூர பயணம் மேற்கொள்ளும் வாய்ப்பு கிடைக்கும். அந்த பயணம் மூலம், வரும் காலத்தில் பெரிய அளவில் ஆதாயங்கள் கிடைக்கும் வாய்ப்பு உண்டு. குடும்பத்தைவிட்டுப் பிரிந்திருந்தவர்கள் ஒன்று சேர்வார்கள். கணவன் மனைவிக்குள் அந்நியோன்யம் அதிகரிக்கும்.
விருச்சிகம்

விருச்சிக ராசிக்காரர்கள் புதிய ஒப்பந்தங்களைப் பெறலாம், இது நல்ல லாபத்திற்கும் வழிவகுக்கும். நிதி நிலைமை மேம்படும் கடன் பிரச்சினைகளிலிருந்து விடுபடும் வாய்ப்பும் கிடைக்கும். வாழ்க்கையில் மகிழ்ச்சிக்கும் திருப்திக்கும் குறைவே இருக்காது. பதவி உயர்வு, சம்பள உயர்வுகான வாய்ப்பு அதிகம் உண்டு. இந்த யோகம் பெரியவர்களின் ஆசிகளையும் பித்ருக்களின் ஆசியைப் பெற்றுத்தரும். இதனால் தொடங்கும் முயற்சிகளில் வெற்றி கிடைக்கும்.
மகரம்

புதன் மற்றும் சூரியன் இணைவது மகர ராசிகளுக்கு நன்மை பயக்கும். முதலீடுகளில் நல்ல வருமானத்தைப் பெறலாம். பிள்ளைகள் தரப்பிலிருந்து சில நல்ல செய்திகளைக் கேட்கலாம். மூதாதையர் சொத்துக்கள் கைக்கு வரும் வாய்ப்பு உண்டு. குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். உறவுகள் வலுவாக இருக்கும். ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். கணவன் மனைவிக்கிடையே இருந்த சச்சரவுகள் நீங்கும். தடைப்பட்டிருந்த நன்மைகள் சுபகாரியங்கள் நிகழும்.
கும்பம்

கும்ப ராசிக்காரர்களுக்கு புதன் மற்றும் சூரியன் இணைவது சுப பலன்களைக் கொடுக்கும். அனைத்து துறைகளிலும் வெற்றி பெறுவார்கள். வாழ்க்கையில் முன்னேற்றத்திற்கான வாய்ப்புகள் கிடைக்கும். நிறைவேறாத ஆசைகள் அனைத்தும் நிறைவேறும் வாய்ப்பு உண்டு. குடும்பத்தில் இணக்கமும் நிம்மதியும் இருக்கும். இதுநாள்வரை இருந்த பொருளாதார நெருக்கடிகள் படிப்படியாக நீங்கி செல்வச் செழிப்பு உண்டாகும்.
இதனையும் படியுங்கள் : ராகு மற்றும் செவ்வாய் பெயர்ச்சியால் அதிர்ஷ்டம் அடிக்க போகும் சில ராசிகள்!


