- Prep
- 5 min
- Cook
- 10 min
- Serves
- 4
- Cuisine
- tamil nadu
- Course
- starters
சிக்கன் வெரைட்டிகள்ல இன்னைக்கு நம்ம பாக்க போறது ஜெய்பூர்ல பேமஸான ஜெய்ப்பூர் ஜில்லா சிக்கன். ஒரு இடத்துக்கு ரொம்பவே பேமஸான ஒரு பொருள் இருந்தா மட்டும்தான் அது ரொம்ப தேடி தேடி செய்வாங்க. அந்த மாதிரி இது போல ரொம்ப ஃபேமஸான ஜில்லா சிக்கன் இந்த ஜெய்ப்பூர் ஜில்லா சிக்கன ரொம்ப ஈஸியா வீட்ல இருக்க பொருள்களை வைத்து செய்திடலாம். எல்லாமே ஒரே மாதிரியா மசாலாக்கள் தான் ஆனால் எப்படி நம்ம சேர்க்கிறோம் அப்படிங்றத பொருத்து சுவை மாறிப் போயிடுது.
இந்த ஜெய்ப்பூர் ஜில்லா சிக்கன் ரொம்பவே சுவையா இருக்கும். இந்த சிக்கனை சப்பாத்தி, ரோட்டி, பரோட்டா, சாதத்துக்கு எல்லாத்துக்குமே சேர்த்து சாப்பிடலாம். இட்லி , தோசைக்கு கூட இந்த ஜெய்ப்பூர் ரொம்பவே ருசியா இருக்கும் சிக்கன்ல பலவிதமான உணவுகள் இருக்கு ஒரு ஒரு உணவிற்கும் ஒருவர் விதமான ருசி இருக்கும். அந்த மாதிரி தான் இந்த ஜெயப்பூர்ல செய்யக்கூடிய ஜில்லா சிக்கனோட ருசியும் வித்தியாசமா இருக்கும்.
எல்லாருமே ரொம்பவே விருப்பப்பட்டு சாப்பிடுவாங்க. நீங்களும் உங்க வீட்ல செய்து உங்க குடும்பத்தில் இருக்கிற எல்லாரையுமே நீங்க ரொம்பவே சந்தோஷப்படுத்தலாம். ஏனென்றால் உணவு அப்படிங்கிற விஷயம் எல்லாருக்கும் ரொம்பவே புடிக்கும். அதிலும் வித்தியாச வித்தியாசம் செய்து கொடுக்கும் பொழுது ரொம்பவே விரும்பி சாப்பிடுவாங்க. அப்படி இந்த ஜெய்ப்பூர் ஜில்லா சிக்கனை எப்படி சுவையா ருசியா செய்றது அப்படின்னு தெரிஞ்சுக்கலாம்.
இதையும் படியுங்கள் : வீடே மணக்க மணக்க வறுத்து அரைச்ச கோழிக்கறி இம்முறையில் செய்து அனைவரையும் அசத்துங்கள்!
Ingredients
Method
முதலில் சிக்கனை சுத்தம் செய்து எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.பிறகு சுத்தம் செய்து எடுத்து வைத்துள்ளசிக்கனில் ஒரு ஸ்பூன் மிளகாய் தூள், மஞ்சள் தூள், மிளகுத்தூள் , சீரகத்தூள் சேர்த்துநன்றாக கலந்து விட வேண்டும்.
பிறகு தேவையான அளவு உப்பு இரண்டு ஸ்பூன் தயிர் சேர்த்து எலுமிச்சை பழத்தை பிழிந்து விட்டு நன்றாககலந்து அரை மணி நேரம் ஊற வைக்க வேண்டும்.
பிறகு மசாலா அரைப்பதற்காக ஒரு மிக்ஸி ஜாரில் தனியா விதைகள், சீரகம், மிளகு, பச்சை மிளகாய், கொத்தமல்லி சேர்த்து தயிர் இரண்டு ஸ்பூன் சேர்த்துவிழுதாக அரைத்து எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.
பிறகு ஊற வைத்துள்ள சிக்கன்களை பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி எண்ணெய் காய்ந்த பிறகு சிக்கன்களை போட்டு லேசாக நிறம் மாறாமல் பொரித்துஎடுத்துக் கொள்ள வேண்டும்.
பிறகு அடுப்பில் ஒரு கடாயை வைத்து சிறிதளவு எண்ணெய் ஊற்றி பட்டை , கிராம்பு, ஏலக்காய் , பிரிஞ்சி இலைசேர்த்து தாளித்துக் கொள்ள வேண்டும். பிறகு அதில் கீறி வைத்துள்ள இரண்டு பச்சை மிளகாய்சேர்த்து நன்றாக வதக்கிக் கொள்ள வேண்டும்.
இதில் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனைபோகும் வரை வதக்கிக் கொள்ளவும். பிறகு அதில் பொடியாக நறுக்கி வைத்துள்ள வெங்காயத்தை சேர்த்து நன்றாக பொன்னிறமாகும் வரை வதக்கிக் கொள்ளவும்.
வெங்காயம் பொன்னிறமாக வதங்கிய பிறகு மிளகாய்தூள், மஞ்சள்தூள், அரைத்து வைத்துள்ள மசாலாவை அதில் சேர்த்து நன்றாக கலந்து விட்டு ஒரு கொதி வர வைக்க வேண்டும்.
பிறகு லேசாக வறுத்து எடுத்து வைத்துள்ள சிக்கன்களை அதில் சேர்த்து நன்றாக கலந்து விட்டு சிறிதளவு தண்ணீர் ஊற்றி வேக வைக்கவும். சிக்கன்கள் நன்றாக வெந்த பிறகு கரம் மசாலா கஸ்தூரி மேத்தி நன்றாக கலந்து விட்டு இறக்கினால் சுவையான ஜெய்ப்பூர் ஜில்லா சிக்கன் தயார்.






