- Prep
- 10 min
- Cook
- 15 min
- Total
- 25 min
- Serves
- 5
- Cuisine
- Indian, TAMIL
- Course
- sweets
ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு விதமான ஸ்வீட் ரொம்ப பிடிக்கும். ஒரு சிலருக்கு லட்டு புடிக்கும், ஒரு சிலருக்கு பால் கோவா பிடிக்கும், ஒரு சிலருக்கு ஜிலேபி பிடிக்கும் இந்த மாதிரி அவங்கவங்க விருப்பத்துக்கு ஏத்த மாதிரி கடைகளில் வாங்கி சாப்பிடுவாங்க. இப்போ தீபாவளி வேற வரப்போகுது இந்த தீபாவளி அப்படின்னாலே ஸ்வீட் அப்படின்னுதான் ஞாபகத்துக்கு வரும். பெரும்பாலும் வீட்ல முறுக்கு அதிரசம் ரவா லட்டு குலோப் ஜாமுன் இந்த மாதிரி தான் செய்வோம்.
ஆனா ஜிலேபி லட்டு இதெல்லாம் கடையில தான் வாங்குவோம் ஆனா ஜிலேபி பிரியர்கள் இனிமேல் கடையில தான் போய் வாங்கி ஜிலேபி சாப்பிடணும்னு அவசியமே கிடையாது. ரொம்ப ரொம்ப குறைவான பொருட்களை வச்சு சூப்பரா இந்த மாதிரி வீட்டிலேயே ஜிலேபி செய்ய முடியும். உங்களுக்கு பிடித்த மாதிரி சின்ன ஜிலேபியும் சாப்பிடலாம் பெரிய ஜிலேபியும் சாப்பிடலாம். அப்படியே கடையில கிடைக்கிற மாதிரி டேஸ்ட் வீட்லயே செய்யும்போது நமக்கு கிடைக்கும்.
அதுக்கு இந்த செய்முறையை அப்படியே ஃபாலோ பண்ணி செஞ்சு பாருங்க. கண்டிப்பா குட்டி குட்டி ஜிலேபி பாக்குறதுக்கே நாக்குல எச்சில் ஊரும் வகையில் இருக்கும். இதே மாவில் பெரிய ஜிலேபி வேண்டுமென்றாலும் செய்து கொள்ளலாம். ரொம்ப ரொம்ப ஈஸியாக உளுந்து பச்சரிசி சோள மாவு வச்சு அருமையான ஜிலேபி வீட்லையே செய்ய முடியும். எப்பவும் ஒரே மாதிரியா வீட்ல ஸ்வீட் செஞ்சு கொடுத்து போர் அடிக்காம இந்த மாதிரி ஒரு தடவை ஜிலேபியும் செஞ்சு அசத்துங்க.
கண்டிப்பாக ரொம்ப ரொம்ப அருமையாக கிடைக்கும். வீட்டுக்கு யாராவது விருந்தாளிகள் வந்தாலும் அவங்களுக்கும் இந்த ஜிலேபியை செஞ்சு கொடுத்து அசத்தலாம். வீட்ல செஞ்சது அப்படின்னு சொன்னா நம்பவே மாட்டாங்க அந்த அளவுக்கு ருசியாக கடைகளில் கிடைக்கின்ற ஜிலேபி மாதிரியே இருக்கும். இந்த தீபாவளிக்கு வீட்டிலேயே இந்த சுவையான ஜிலேபியை செஞ்சு பாருங்க. இப்ப வாங்க இந்த சுவையான டேஸ்டான ஜிலேபியை வீட்டிலேயே செய்து பார்க்கலாம்.
இதனையும் படியுங்கள் : பன்னீர் தேங்காய் லட்டு
Ingredients
Method
உளுந்து மற்றும் பச்சரிசியை 2 மணி நேரம் ஊறவைத்து மிக்ஸி ஜாரில் சேர்த்து உப்பு போட்டு அரைத்துக் கொள்ளவும்.
அதனுடன் சோள மாவு சேர்த்து நன்றாக கலந்து கேசரி பவுடர் சேர்த்து தோசை மாவு பதத்திற்கு கொஞ்சம் தண்ணீராக கரைத்துக் கொள்ளவும்.
ஒரு எண்ணெய் கவரில் கலந்து வைத்துள்ள மாவை சேர்த்து நுனியை லேசாக கட் செய்து விட்டு சூடான எண்ணெயில் ஜிலேபி மாதிரி சுற்றி சுற்றிவிட்டு நன்றாக வேகவைத்து எடுத்துக் கொள்ளவும்.
ஒரு கப் சர்க்கரை உடன் ஒரு கப் தண்ணீர் சேர்த்து ஒரு கம்பி பதம் வரும் வரை கொதிக்க வைத்து ரோஸ் எசன்ஸ் சேர்த்து இறக்கி வைக்கவும்.
அதில் சுட்டு வைத்துள்ள ஜிலேபியை போட்டு ஒரு மணி நேரம் நன்றாக ஊறியதும் பரிமாறினால் சுவையான ஜிலேபி தயார்.






