- Prep
- 10 min
- Cook
- 15 min
- Total
- 25 min
- Serves
- 5
- Cuisine
- Indian, TAMIL
- Course
- LUNCH
மீன் குழம்பு அப்படின்னு சொன்னாலே எல்லாருக்கும் நாக்குல எச்சில் வரும். மீன் குழம்பு மட்டும் ரெண்டு மூணு நாள் வைத்து சாப்பிடலாம். இட்லி, தோசை, சாதம் எல்லாத்துக்குமே ரொம்ப ரொம்ப சூப்பரா இருக்கும். பழைய சாதத்துக்கு பழைய மீன் குழம்பு வைத்து சாப்பிடும் போது அவ்ளோ ருசியா இருக்கும் அதே போல் இட்லிக்கும் பழைய மீன் குழம்பு வைத்து சாப்பிடும் போது அவ்ளோ ருசியா இருக்கும். மீன் குழம்பு அன்னைக்கு சாப்பிடுவதை விட ரெண்டு நாள் வச்சு சாப்பிடும் போது சொல்ல முடியாத அளவுக்கு டேஸ்ட்டா இருக்கும்.
அந்த அளவுக்கு டேஸ்ட்டான மீன் குழம்பு ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு மாதிரி வைப்பாங்க. மீன் வகைகளும் ஏராளமா இருக்கு கட்லா மீன், ஜிலேபி மீன், பாறை மீன், வஞ்சரம் மீன் அப்படின்னு சொல்லிக்கிட்டே போகலாம். அந்த வகையில இந்த ஜிலேபி மீன் குழம்பு தேங்காயை இல்லாம நல்லா புளிப்பா காரசாரமா இதே செய்முறைல வச்சு பாருங்க எல்லாரும் ரசிச்சு ருசிச்சு சாப்பிடுவாங்க. ரெண்டு நாள் ஆனாலும் குழம்பு அப்படியே இருக்கும். அந்த அளவுக்கு டேஸ்ட்டா இருக்கும்.
சுட சுட சாதத்தில் போட்டு பிசைந்து சாப்பிடும் போது அவ்ளோ ருசியா இருக்கும் பழைய சாதத்துக்கும் நீங்க அடுத்த நாள் வச்சு சாப்பிடலாம். இட்லிக்கும் இந்த குழம்பு ஊத்தி சாப்பிடும்போது அவ்வளவு ருசியா இருக்கும். மீன் எடுத்துட்டு வந்துட்டு தேங்காய் இல்லை அப்படின்னா கவலைக்கே படாதீங்க இந்த மாதிரி தேங்காயே இல்லாம சின்ன வெங்காயம் நிறைய சேர்த்து பூண்டு சேர்த்து வைக்கிற இந்த மீன் குழம்பு அவ்வளவு ருசியா இருக்கும்.
வீட்ல இருக்குற எல்லாருமே விரும்பி சாப்பிடுவாங்க. விருந்தாளிகள் வந்தா கூட அவங்களுக்கும் இந்த ரெசிபியை இதே ஸ்டைலில் செஞ்சு கொடுத்து பாருங்க சாப்பிட்டு ருசியில அசந்து போயிடுவாங்க. இந்த மீன் குழம்பு நம்ம நல்லெண்ணெய் மட்டும் தான் சேர்த்து செய்யணும் அப்பதான் ருசி இன்னும் கூடுதலாக இருக்கும். இப்ப வாங்க இந்த ருசியான ஜிலேபி மீன் குழம்பு தேங்காயே இல்லாம ருசியா எப்படி வைப்பது என்று பார்க்கலாம்.
இதனையும் படியுங்கள் : அடுத்த முறை மீன் வாங்கினால் குழம்பு வைக்காமல் ஒரு முறை இந்த மீன் ஆம்லேட் செய்து பாருங்கள்!!
Ingredients
Method
ஒரு பாத்திரத்தில் புளியை ஊற வைத்து கரைத்து எடுத்துக் கொள்ளவும்.
ஒரு கடாயில் எண்ணெய் சேர்த்து 75 கிராம் சின்ன வெங்காயம், தக்காளி சேர்த்து வதக்கி ஆற வைத்து மிக்ஸி ஜாரில் சேர்த்து அரைத்து எடுத்துக் கொள்ளவும்.
அதே கடாயில் எண்ணெய் சேர்த்து கடுகு உளுந்தம் பருப்பு கருவேப்பிலை வெந்தயம் சேர்த்து தாளித்துக் கொள்ளவும்.
மீதமுள்ள வெங்காயம் பூண்டு சேர்த்து வதக்கி கரைத்து வைத்துள்ள புளியை சேர்த்து தனி மிளகாய் தூள், குழம்பு மிளகாய் தூள் சேர்த்து நன்றாக கொதிக்க வைக்கவும்.
அரைத்து வைத்துள்ள தக்காளி, வெங்காய விழுதை சேர்த்து பத்து நிமிடம் நன்றாக கொதித்ததும் கழுவி வைத்துள்ள ஜிலேபி மீனை சேர்த்து ஐந்து நிமிடத்தில் இறக்கினால் சுவையான ஜிலேபி மீன் குழம்பு தேங்காயே இல்லாமல் தயார்.






