- Advertisement -
Home சட்னி நாவல் பழ சட்னி இந்த மாதிரி செஞ்சு பாருங்க டேஸ்ட் ரொம்ப பிடிக்கும்!!

நாவல் பழ சட்னி இந்த மாதிரி செஞ்சு பாருங்க டேஸ்ட் ரொம்ப பிடிக்கும்!!

- Advertisement -

இது நாவல் பழ சீசன் இந்த நாவல் பழ சீசன்லயே நாவல் பழம் வாங்கி எவ்வளவு முடியுமோ அவ்வளவு சாப்பிட்டுக் கொள்ளலாம். மற்ற நேரங்களில் இது கிடைக்காது. நாவல் பழம் வைத்து நிறைய பேர் ஜாம் செஞ்சு சாப்பிடுவாங்க. இன்னும் ஒரு சிலர் நாவல் பழம் வைத்து சட்னி செய்வாங்க அந்த மாதிரி நாவல் பழம் வைத்து செய்ய போற சட்னி தான் இப்ப பாக்க போறோம். இந்த சட்னி எப்படி இருக்கும்னு யோசிக்க வேண்டாம் ரொம்ப ரொம்ப அருமையாக இருக்கும். நிறைய நாவல் பழம் இருந்தால் மொத்தமாக சாப்பிட முடியவில்லை என்றால் நாவல் பழம் வைத்து இந்த சூப்பரான சட்னி ரெசிபி சாப்பிடலாம்.

இது ரொம்ப ரொம்ப அட்டகாசமாக இருக்கும் இந்த டேஸ்டான ரெசிபிக்கு எல்லாருமே விரும்பி சாப்பிடுவாங்க. குக் வித் கோமாளி ஷோல கூட ஒரு எபிசோட் ல இந்த ரெசிபியை செஞ்சுருப்பாங்க இது எல்லாராலயும் பாராட்டப்பட்ட ஒரு ரெசிபியும் கூட. இந்த ரெசிபி செய்றது ரொம்ப ரொம்ப ஈஸி வெறும் நாலஞ்சு பொருட்கள் வச்சு ஒரு சூப்பரான நாவல் பழ சட்னி செய்யலாம். இட்லி தோசைக்கு தொட்டு சாப்பிட ரொம்பவே அருமையாக இருக்கும். இதுக்கு எண்ணெயே தேவையில்ல தாளிப்பு சேர்க்காமல் ஒரு சூப்பரான சட்னி செய்யணும் அப்படின்னா இந்த மாதிரி செஞ்சு பாருங்க.

- Advertisement -

ஒரு தடவை செஞ்சு பார்த்துட்டீங்கன்னா அதுக்கப்புறம் நாவல் பழம் கிடைக்கும்போதெல்லாம் இந்த ரெசிபியை செய்வீங்க அந்த அளவுக்கு ரொம்ப ரொம்ப ருசியாகவே இருக்கும். சர்க்கரை நோயாளிகளுக்கு நாவல் பழம் சாப்பிடுவது ரொம்ப ரொம்ப நல்லது. அதனால சர்க்கரை நோயாளிகள் அடிக்கடி இந்த நாவல் பழ சட்னி செஞ்சு சர்க்கரை நோயாளிகள் மட்டுமில்லாமல் எல்லாருமே இதை சாப்பிடலாம். எல்லாருக்குமே ஆரோக்கியமான ஒரு ரெசிபி தான் இது. இந்த மாதிரி வித்தியாசமா செஞ்சு கொடுத்தா வீட்டுல இருக்குறவங்களும் விரும்பி சாப்பிடுவாங்க. இப்ப வாங்க இந்த சுவையான நாவல் பழ சட்னி எப்படி செய்யறதுன்னு பாக்கலாம்.

Print
No ratings yet

நாவல் பழ சட்னி | Jamun Chutney Recipe In Tamil

இது நாவல் பழ சீசன் இந்த நாவல் பழ சீசன்லயே நாவல் பழம் வாங்கி எவ்வளவு முடியுமோ அவ்வளவு சாப்பிட்டுக் கொள்ளலாம். மற்ற நேரங்களில் இது கிடைக்காது. நாவல் பழம் வைத்து நிறைய பேர் ஜாம் செஞ்சு சாப்பிடுவாங்க. இன்னும் ஒரு சிலர் நாவல் பழம் வைத்து சட்னி செய்வாங்க அந்த மாதிரி நாவல் பழம் வைத்து செய்ய போற சட்னி தான் இப்ப பாக்க போறோம். இந்த சட்னி எப்படி இருக்கும்னு யோசிக்க வேண்டாம் ரொம்ப ரொம்ப அருமையாக இருக்கும். நிறைய நாவல் பழம் இருந்தால் மொத்தமாக சாப்பிட முடியவில்லை என்றால் நாவல் பழம் வைத்து இந்த சூப்பரான சட்னி ரெசிபி சாப்பிடலாம். இது ரொம்ப ரொம்ப அட்டகாசமாக இருக்கும் இந்த டேஸ்டான ரெசிபிக்கு எல்லாருமே விரும்பி சாப்பிடுவாங்க. குக் வித் கோமாளி ஷோல கூட ஒரு எபிசோட் ல இந்த ரெசிபியை செஞ்சுருப்பாங்க இது எல்லாராலயும் பாராட்டப்பட்ட ஒரு ரெசிபியும் கூட. இந்த ரெசிபி செய்றது ரொம்ப ரொம்ப ஈஸி வெறும் நாலஞ்சு பொருட்கள் வச்சு ஒரு சூப்பரான நாவல் பழ சட்னி செய்யலாம்.
Prep Time5 minutes
Active Time10 minutes
Total Time15 minutes
Course: chutney
Cuisine: Indian, TAMIL
Keyword: Jamun Chutney
Yield: 5 People
Calories: 83kcal

Equipment

  • 1 பவுள்
  • 1 மிக்ஸி

தேவையான பொருட்கள்

  • 1 கப் நாவல்பழம்
  • 2 பச்சை மிளகாய்
  • 1/4 கப் தேங்காய்
  • 2 பல் பூண்டு
  • 1/2 எலுமிச்சை பழம்
  • உப்பு தேவையான அளவு

செய்முறை

  • நாவல் பழத்தில் கொட்டைகளை நீக்கிவிட்டு பழத்தை மட்டும் மிக்ஸி ஜாரில் கழுவி சேர்த்துக் கொள்ளவும்.
  • பூண்டு தேங்காய் பச்சை மிளகாய் உப்பு எலுமிச்சைச் சாறு சேர்த்து நன்றாக அரைத்து ஒரு பாத்திரத்தில் சேர்த்துக் கொள்ளவும்.
  • இப்பொழுது பரிமாறினால் சுவையான நாவல் பழ சட்னி தயார்.

Nutrition

Serving: 300g | Calories: 83kcal | Carbohydrates: 1.8g | Protein: 15g | Fat: 2.7g | Sodium: 91mg | Potassium: 143mg | Fiber: 19g | Vitamin A: 60IU | Vitamin C: 129mg | Calcium: 18mg | Iron: 17mg

இதனையும் படியுங்கள் : கடலை பருப்பு சட்னி செய்வது எப்படி