- Advertisement -
நிறைய பேருக்கு உடம்பில் ஆரோக்கிய ரீதியாக நிறைய பிரச்சனை வரும். இந்த பிரச்சினைக்கு தீர்வை பெற நிறைய மருந்து மாத்திரைகளை சாப்பிட்டு வருவார்கள். உடலுக்கு சக்தி அளிப்பதாகவும் பலவகைகளில் பல சத்துகளை கொண்டதும், இந்திய நாட்டை பூர்விகமாக கொண்ட ஒரு சிறந்த பழமாக “நாவல் பழம்” இருக்கிறது. உடல் ஆரோக்யம் பெற்று சிறப்பாக இருக்க நம் வீட்டில் இருந்தபடியே சுலபமான நாவல்பழ ஜூஸ் எப்படி தயாரிப்பது என்பதை பற்றிதான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். அற்புதமான ஒரு நாவல்பழ ஜூஸ் ரெசிபி உங்களுக்காக. வெயில் காலத்துக்கு இது ரொம்ப ரொம்ப பயனுள்ளதாக இருக்கும்.
-விளம்பரம்-
- Advertisement -
நாவல்பழ ஜூஸ் | Jamun Fruit Juice recipe in Tamil
நிறைய பேருக்கு உடம்பில் ஆரோக்கிய ரீதியாக நிறைய பிரச்சனை வரும். இந்த பிரச்சினைக்கு தீர்வை பெற நிறைய மருந்து மாத்திரைகளை சாப்பிட்டு வருவார்கள். உடலுக்கு சக்தி அளிப்பதாகவும் பலவகைகளில் பல சத்துகளை கொண்டதும், இந்திய நாட்டை பூர்விகமாக கொண்ட ஒரு சிறந்த பழமாக “நாவல் பழம்” இருக்கிறது. உடல் ஆரோக்யம் பெற்று சிறப்பாக இருக்க நம் வீட்டில் இருந்தபடியே சுலபமான நாவல்பழ ஜூஸ் எப்படி தயாரிப்பது என்பதை பற்றிதான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.
Yield: 2
Calories: 92kcal
Equipment
- 1 மிக்ஸி
- 1 பவுள்
தேவையான பொருட்கள்
- 10 நாவல்பழம் நீள் வடிவம்
- 10 பேரீச்சம்பழம்
- 2 வெல்லத்தூள்
- 1/2 எலுமிச்சம்பழம்
செய்முறை
- நாவல்பழத்தைஇரண்டாகக் கீறி, விதை நீக்கவும். பேரீச்சம்பழங்களையும் விதையை எடுக்கவும். இவை இரண்டையும் மிக்ஸியில் போட்டு. தண்ணீர் சேர்க்காமல் அரைக்கவும்.
- வெல்லத்தூளுடன்கால் கட் தண்ணீர் சேர்த்து, அடுப்பில் வைத்து. கரைந்ததும் வடிகட்டிக்கொள்ளவும். வெல்லத்தண்ணீர் ஆறியதும், நாவல்பழ விழுதைச் சேர்க்கவும்.
- சிட்டிகை உப்புப் போட்டு, அருந்தலாம். விரும்பினால், எலுமிச்சம்பழத்தைப் பிழிந்து, பொடியாக நறுக்கிய புதினாலை மேலே துவலாம். மணமும் சுவையும் தூக்கலாக இருக்கும்
Nutrition
Serving: 1ltr | Calories: 92kcal | Carbohydrates: 23g | Protein: 1.2g | Fat: 0.5g | Sodium: 5mg | Fiber: 4g | Vitamin C: 15.6mg