மேஷம்

இந்த வாரம் உங்களுக்கு பணவரவு திருப்திகரமாக இருக்கும். ஆனாலும் தேவையற்ற செலவுகளால் சேமிக்க முடியாத நிலை ஏற்படக்கூடும். உறவினர்கள் மற்றும் நண்பர்களை அனுசரித்துச் செல்வது நல்லது. மனை இடம் நிலம் போன்றவற்றில் முதலீடு செய்வீர்கள். உறவினர்களால் உங்களுக்கு சில உபத்திரவங்கள் வந்து சேரும். உத்தியோகத்தில் சிலருக்கு பிரச்சனை உண்டாகும். குடும்பத்தில் நிம்மதி இழந்த நிலை காணப்படும். எதிர்பாராத விருந்தாளிகள் வரக்கூடும். தொழிலுக்கு தேவையான கட்டமைப்புகளை உருவாக்குவீர்கள். வெளியூர் பயணங்களால் சில நன்மைகள் உண்டாகும்.
ரிஷபம்

இந்த வாரம் உங்களுக்கு பொருளாதார நிலை திருப்திகரமாக உள்ளது. வீண் செலவுகள் எதுவும் ஏற்படுவதற்கில்லை. எதிர்பார்த்த இடத்திலிருந்து தடையில்லாமல் பணம் வரும். தொழிலில் சாதனை படைப்பீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். உறவினர்களிடையே இருந்த மனக் கசப்பு நீங்கி ஒற்றுமை வலுப்படும். திட்டம் போட்டு காரியம் செய்தால் வெற்றி நிச்சயம். அரசு பணியாளர்களுக்கு வேலை மாற்றம் உண்டாகும். வியாபாரத்தில் கிடைத்த லாபத்தை விவசாயத்தில் முதலீடு செய்வீர்கள். போட்டி பந்தயங்களில் வெற்றி கிடைக்கும். கூட்டுத்தொழில் முன்னேற்றத்தைக் கொடுக்கும்.
மிதுனம்

இந்த வாரம் உங்களுக்கு எதிர்பாராத செலவுகள் ஏற்பட்டாலும் சமாளிக்கக்கூடிய அளவுக்கு பணவரவு திருப்திகரமாக இருக்கும். திருமண முயற்சிகள் சாதகமாகும். வெளிநாட்டு பயணங்களின் மூலம் தொழிலுக்கு தேவையான உதவிகளை திரட்டுவீர்கள். சகோதரர்களுடன் இணக்கமான உறவு ஏற்படும். பிள்ளைகள் கல்வியில் முன்னேற்றம் காண்பார்கள். கோயில் காரியங்களுக்கு நிதி உதவி செய்வீர்கள். படிப்புக்காக அதிகம் செலவு செய்வீர்கள். அரசு ஊழியர்கள் கவனமாக பணியாற்ற வேண்டும். இந்த வாரம் வாகனங்களில் செல்லும்போது இரு மடங்கு எச்சரிக்கை தேவை.
கடகம்

இந்த வாரம் உங்களுக்கு எதிர்பாராத பணவரவு இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். உங்களுடைய பொதுநல போக்கால் வெளிவட்டாரத்தில் செல்வாக்கு அதிகரிக்கும். உறவினர்கள் மத்தியில் உங்கள் பேச்சுக்கு மரியாதை கூடும். சகோதர வகையில் அனுகூலம் உண்டாகும். உடல் நலனில் சிறுசிறு பாதிப்புகள் ஏற்படலாம். வெளிநாட்டு பயணங்கள் வெற்றிகரமாக அமையும். வியாபாரம் சம்பந்தப்பட்ட நல்ல வாய்ப்புகள் வீடு தேடி வரும். இழுபறியாக இருந்த சொத்து விவகாரம் வார இறுதியில் நல்ல முடிவுக்கு வரும். பூர்வீக சொத்தில் இருந்த வில்லங்கம் விலகும்.
சிம்மம்

இந்த வாரம் உங்களுக்கு தேவையான அளவுக்கு பணவரவு இருக்கும். வீண் செலவுகள் எதுவும் ஏற்படுவதற்கில்லை. குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். உறவினர்களால் ஆதாயம் உண்டாகும். வார இறுதியில் கணவன் – மனைவி இடையில் சிறுசிறு பிரச்னைகள் ஏற்படக்கூடும். புதிய வாகனங்கள் வாங்குவீர்கள். வீட்டை பழுது பார்த்து வர்ணம் பூசுவீர்கள். நண்பர்கள் உதவியால் புதிய தொழில் தொடங்குவீர்கள். பழைய கடன்களை அடைப்பீர்கள். குழந்தை செல்வம் இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். தொழிலுக்குத் தேவையான கடன்களை பெறுவதில் வெற்றி அடைவீர்கள்.
கன்னி

இந்த வாரம் உங்களுக்கு பணவரவு திருப்திகரமாக இருக்கும். சில அநாவசியமான செலவுகளும் ஏற்படக்கூடும். குடும்பத்தில் உள்ளவர்களை அனுசரித்துச் செல்வது அவசியம். திருமணம் தடைப்பட்டு வந்தவர்களுக்கு திருமணம் கூடி வரும். பிள்ளைகளின் கல்விச் செலவு அதிகரிக்கும். அரசு பணியாளர்கள் அதிக வருமானம் பெறுவார்கள். ஏற்றுமதி இறக்குமதி தொழில் ஏற்றமான பலனை தரும். வருமா வராதா என்று நினைத்த பணம் கைக்கு வந்து சேரும். தந்தையாரின் உடல்நிலையில் கவனம் தேவை. உங்கள் குழந்தைகள் ஆசைப்பட்ட பொருட்களை வாங்கி கொடுத்து மகிழ்வீர்கள்.
துலாம்

இந்த வாரம் உங்களுக்கு பணவரவு திருப்தியாக இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். மூத்த சகோதரர்களின் அறிவுரையும் உதவியும் ஆறுதல் தருவதாக இருக்கும். பழைய கடன்களைத் தந்து முடிப்பீர்கள். புதிய வீடு கட்டுவதற்காக திட்டமிடுவீர்கள். கல்விக்காக பிள்ளைகள் வெளிநாடு செல்வார்கள். நண்பர்களின் உதவியால் உங்களுக்கு வரும் பிரச்சினைகளை தாண்டி வருவீர்கள். முக்கிய வேலைகளை நீங்களே நேரடியாகச் சென்று முடிப்பது நல்லது. பிரிந்து போன உறவுகள் மீண்டும் வந்து சேர்வார்கள். இந்த வாரம் பொறுமையும் நிதானமும் குடும்பப் பிரச்சினைகளுக்கு தீர்வாக அமையும்.
விருச்சிகம்

இந்த வாரம் உங்களுக்கு பணவரவு சுமாராகத்தான் இருக்கும். செலவுகள் கட்டுக்குள் இருக்கும். கணவன் – மனைவி இடையில் அந்நியோன்யம் அதிகரிக்கும். சிலருக்கு புண்ணிய ஸ்தலங்களுக்குச் சென்று நேர்த்திக் கடன்களை செலுத்தும் வாய்ப்பு உண்டாகும். வாகனங்கள் பழுதாகி செலவு ஏற்படும். சிறு வியாபாரிகள் தொழிலுக்கு தகுந்த லாபம் பெறுவார்கள். இந்த வாரம் வியாபாரத்தில் நுணுக்கங்களை புகுத்துவீர்கள். வீட்டில் மங்கல காரியங்கள் நடக்கும். குழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். அலுவலகத்தில் பணிச்சுமை அதிகரிக்கும்.
தனுசு

இந்த வாரம் உங்களுக்கு பணவரவு திருப்திகரமாக இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியும் நிம்மதியும் காணப்படும். இந்த வாரம் கேட்ட இடங்களில் பணம் கிடைக்கும். வியாபாரம் வெற்றிகரமாக நடக்கும். தொழிலில் புதிய முதலீடுகள் செய்வீர்கள். எதிர்பார்த்த பதவி உயர்வு, ஊதிய உயர்வு கிடைப்பதற்கான வாய்ப்பு தள்ளிப் போகும். சகோதரர்களிடையே இருந்து வந்த கருத்து வேறுபாடுகள் நீங்கி ஒற்றுமை ஏற்படும். பிள்ளைகளால் பெருமைப்படுவீர்கள். சில முக்கிய முடிவுகள் எடுப்பதில் தடுமாற்றம் அடைவீர்கள். வராமல் இருந்த சில கடன்கள் வசூலாகி மனத்திருப்தி உண்டாகும். சிலருக்கு வெளிநாடு செல்லும் வாய்ப்பும் உண்டாகும்.
மகரம்

இந்த வாரம் உங்களுக்கு பணவரவு திருப்தி தருவதாக இருக்கும்.ஆனாலும், தேவையற்ற செலவுகளால் மனச் சஞ்சலம் உண்டாகும். உறவினர்களாலும் நண்பர்களாலும் தேவையற்ற பிரச்னைகள் ஏற்படும் என்பதால் பொறுமையுடன் இருப்பது அவசியம். உங்கள் எதிர்பார்ப்பை விட வியாபாரம் நல்ல முறையில் நடக்கும். அலுவலகத்தில் இதுவரை எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கப் பெறலாம். இந்த வாரம் பங்குச்சந்தை வியாபாரத்தில் பக்குவமாக முதலீடு செய்யுங்கள். திருமண பேச்சு வார்த்தைகள் வெற்றிகரமாக நிறைவேறும். தனியார் துறை ஊழியர்கள் மேலதிகாரிகளின் பாராட்டை பெறுவார்கள்.
கும்பம்

இந்த வாரம் உங்களுக்கு பணவரவு திருப்தி தருவதாக இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியும் உற்சாகமும் காணப்படும். அடுத்தடுத்து சுபநிகழ்ச்சிகளில் கலந்துகொள்ளும் வாய்ப்பு உண்டாகும். தொழிலை புத்திசாலித்தனமாக விரிவுபடுத்துவீர்கள். வசீகர பேச்சால் வாடிக்கையாளர்களை கவர்ந்து இழுப்பீர்கள். திருமண முயற்சிகள் அனுகூலமாக முடியும். வேலைக்குச் செல்லும் பெண்மணிகள் வேலைகளில் கவனமாக இருக்கவும். பங்குச்சந்தை வர்த்தகம் தங்கு தடையில்லாமல் நடக்கும். புதிய நண்பர்களிடம் எச்சரிக்கையாக இருங்கள். இந்த வாரம் மற்றவர்களின் விஷயத்தில் தலையிடவேண்டாம்.
மீனம்

இந்த வாரம் உங்களுக்கு பொருளாதார நிலை ஓரளவு திருப்தி தருவதாக இருக்கும். முக்கிய முடிவுகள் எடுப்பதில் குழப்பம் உண்டாகும். தேவையற்ற சில பிரச்னைகளால் மனதில் அடிக்கடி சஞ்சலம் உண்டாகும். புதிய திட்டங்களுக்குச் சிறப்பான முறையில் செயல் வடிவம் கொடுப்பீர்கள். கணவன் – மனைவி இடையில் அந்நியோன்யம் அதிகரிக்கும். தொடக்கத்தில் மந்தமான நிலையிலிருந்த வியாபாரம் வார இறுதியில் சூடு பிடிக்கும். வீட்டில் திருமண நிகழ்ச்சிகளால் மகிழ்ச்சி பொங்கும். வெளியூர் பயணங்களின் போது பணத்தை பத்திரமாக வைத்திருங்கள். அலுவலகத்தில் தங்கள் பணிகளை மட்டும் கவனமாகச் செய்து வருவது நல்லது.
இதனையும் படியுங்கள் : 2025ல் சிவனின் அருளைப் பெற போகும் ராசிகள்


