மேஷம்

இந்த வாரம் மேஷ ராசியினருக்குப் புகழும், கௌரவமும் பெருகும் வாரமாக அமைகிறது. எதிலும் துணிச்சலுடன் செயல்பட்டு வெற்றி காண்பீர்கள். சமூக நற்பணிகளை முன்னாள் நின்று செய்வீர்கள். ஆன்மீக உணர்வுகள் அதிகரிக்கும். உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் பாராட்டு கிட்டும். வங்கி கடன் விண்ணப்பம் ஏற்கப்பட்டு கடன் கைவந்து சேரும். வியாபாரி களுக்கு தொழிலில் நல்ல முன்னேற்றம் இருக்கும். வழக்குகள் சாதகமாகும். பணியாளர்கள் உங்களுக்குத் துணை புரிவார்கள். சிந்தனைத் தெளிவு வரும். கணவன் – மனைவி உறவுகளில் கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டு கவலைகள் உருவாகலாம்.
ரிஷபம்

ரிஷப ராசியினருக்குப் பொருளாதார ரீதியாக இக்காலம் பொற்காலமாக அமையும். தடைபட்ட காரியங்கள் யாவும் தடையின்றி நிறைவேறும். உறவினர் வீட்டு சுப காரியங்களில் குடும்பத்துடன் கலந்து கொண்டு மகிழ்வீர்கள். பணப்புழக்கம் திருப்திகரமாக இருக்கும், பழைய கடன்களை அடைப்பதற்கான வழிகள் பிறக்கும். தொழிலில் ஏற்பட்ட நெருக்கடிகள் விலகி நிம்மதி கிடைக்கும். வராது என்று நினைத்து கைவிட்ட பணம் எதேச்சையாக பேசும்போது கிடைத்து விடும். வாழ்க்கையில் புதிய மாற்றங்களை உணருவீர்கள். எதிரிகள் இருந்தாலும் கூட உங்கள் முயற்சிகளை அவர்களால் எதிர்க்க முடியாது. யாரிடம் பழகினாலும் அதிக உரிமை எடுத்துக் கொள்ள வேண்டாம்.
மிதுனம்

இந்த வாரம் அறிவுத்திறன் மிளிரும் வாரமாகத் திகழ்கிறது. எடுக்கும் முயற்சிகள் யாவும் சாதகமான பலன்களைத் தரும். யாருக்காவது உதவி செய்வதற்கு முன் அது குறித்து சிந்தித்து செயல்பட வேண்டும். உத்தியோகத்தில் இடமாற்றம் அல்லது பதவி உயர்வுக்கான சாத்தியக்கூறுகள் உண்டு. கடன் கொடுத்தல் மற்றும் பெறுதல் ஆகியவற்றில் கவனம் தேவை. எதிர்பார்த்த இடமாற்றம் மற்றும் பதவி உயர்வுகள் கிடைக்கும். உத்தியோகத்தில் மேலதிகாரிகளால் பாராட்டப் பெறுவீர்கள். பிள்ளைகள் குறித்த கவலை மனதில் இருந்து கொண்டே இருக்கும். ஆரோக்கிய குறைவு உள்ளவர்கள் அலட்சியமாக இருக்கக் கூடாது. குடும்ப உறவுகளில் மிகுந்த கவனம் தேவை.
கடகம்

இந்த வாரம் மனமகிழ்ச்சியும் நிம்மதியும் நிறைந்ததாக இருக்கும். குழப்பங்கள் நீங்கி மனம் தெளிவு பெறும். பூர்வீக சொத்து விவகாரங்களில் சாதகமான தீர்ப்பு கிடைக்கும். நண்பர்கள் மற்றும் உறவினர்களுடன் உறவு இனிக்கும். எதிர்பாராத நல்ல மாற்றங்களை எதிர்பார்க்கலாம். பணம் தேவையான அளவிற்கு இருக்கும். இடம், வீடு வாங்க முயற்சிகள் வெற்றி பெறும். நல்ல உத்தியோகத்திற்காக காத்துக் கொண்டிருப்பவர்களுக்கு மனதுக்கேற்ற உத்தியோகம் கிடைக்கும். குடும்பத்தில் சிற்சில நெருக்கடிகள் இருந்து கொண்டே இருக்கும். சில விஷயங்கள் உங்கள் சகிப்புத் தன்மையைச் சோதிக்கும்.
சிம்மம்

சிம்ம ராசியினருக்கு இவ்வாாரம் அதிகாரம் மற்றும் செல்வாக்கு மேலோங்கும். அரசு வழியில் எதிர்பார்த்த உதவிகள் தடையின்றி வந்து சேரும். நண்பர்களுடன் அதிகமாக நெருங்கி பழகுவதை தவிர்ப்பது அவசியம். உறவினர்களால் சில நன்மைகள் வந்து சேரும். வருமானம் உயருவதற்கான புதிய வாய்ப்புகள் பிரகாசமாக உள்ளன. தெய்வ பக்தி அதிகரிக்கும். வணிகத்தில், விற்பனையில் இருந்த மந்த நிலை மாறி உற்சாகம் கிடைக்கும். முக்கியமான மனிதர்கள் உங்களுடைய முயற்சிக்கு உறுதுணையாக இருப்பார்கள். தெய்வ பலனும் உண்டு. அவ்வப்பொழுது ஆரோக்கியத்தில் பிரச்னைகள் வரலாம். வேலைப்பளு அதிகரிக்கும்.
கன்னி

கன்னி ராசியினருக்கு இந்த வாரம் திட்டமிட்ட காரியங்கள் அனைத்தும் நிறைவேறும் வாரமாக அமையும். ஒரு சிலருக்கு வீடு, மனை, வண்டி, வாகன யோகம் கிடைக்கும். குடும்ப உறுப்பினர்களுடன் ஆன்மீகப் பயணங்கள் மேற்கொள்வீர்கள். எதிர்காலத்தைக் குறித்த உங்கள் ஏற்பாடுகள் பலன் தர ஆரம்பிக்கும். உத்தியோகத்தில் நீங்கள் வெகு காலமாக எதிர்பார்த்த ஒரு முன்னேற்றம் கை வசப்படும். உத்தியோகஸ்தர்களுக்குப் பணிச்சுமை அதிகரித்தாலும் அதற்கேற்ற ஊதியம் கிட்டும். நீங்கள் எதிர்பாராத முன்னேற்றத்தையும் வெற்றியையும் சந்திப்பீர்கள். எப்பொழுதோ முடிந்து போன பிரச்னைகள் மறுபடியும் தலைதூக்கி உங்களை பயமுறுத்தலாம்.
துலாம்

துலாம் ராசியினருக்கு இக்காலம் எதிலும் நிதானத்தையும் பொறுமையையும் கடைபிடிக்க வேண்டிய வாரமாகும். கலைத்துறையினருக்குப் புதிய வாய்ப்புகள் தேடி வரும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் நிலவும். வாழ்க்கைத் துணையின் உதவியால் பல்வேறு சிரமங்கள் அகலும். பொருளாதாரத்தில் சுமாரான முன்னேற்றம் உண்டு. முக்கியஸ்தர்களை சந்திப்பீர்கள். தொழிலில் முக்கிய முடிவுகள் எடுக்கக்கூடிய வாய்ப்புகள் உண்டு. வெளிநாட்டில் பணிபுரிபவர்களுக்கு வெகு காலமாக எதிர்பார்த்து இருந்த நல்ல பதவி மாற்றம் கிடைக்கும். பிறர் குறித்த எந்த அபிப்பிராயத்தையும் வாய்விட்டுச் சொல்ல வேண்டாம். தந்தையோடு கருத்து வேறுபாடுகள் ஏற்படலாம்.
விருச்சிகம்

விருச்சிக ராசியினருக்கு அதிர்ஷ்டக் காற்று உங்கள் பக்கம் வீசும் வாரமாக இருக்கிறது. தடைப்பட்ட திருமண முயற்சிகள் கைகூடும். உங்களுக்காக செய்வது விட பிறருக்காக செய்யும் காரியங்கள் வெற்றி பெறும். சமூகத்தில் மதிப்பும் மரியாதையும் உயரும். பூமி மற்றும் வாகன சேர்க்கைக்கான யோகம் உண்டாகும். கடன் சுமைகள் குறையத் தொடங்கும். விரயங்கள் இருந்தாலும் சுப விரயங்களாக இருக்கும் வாய்ப்பு உண்டு. வெகு காலமாக நினைத்திருந்த நல்ல செயல்களை செய்யும் ஆர்வம் பிறக்கும். மற்றவர்கள் விஷயத்தில் ஆலோசனைகள் சொல்ல வேண்டாம். வாகனத்தில் செல்லும் பொழுது எச்சரிக்கையுடனும் மிதமான வேகத்துடனும் கவனித்துச் செல்லுங்கள்.
தனுசு

தனுசு ராசியினருக்குப் பல நற்பலன்கள் கிட்டும் வாரமாக இது அமைகிறது. ஆன்மீகப் பெரியோர்களின் ஆசி கிட்டும். ஆன்மீக வழிபாடு மூலம் எதிர்பார்த்த பலன்கள் கை வந்து சேரும். குடும்பத்தில் அமைதியும் மகிழ்ச்சியும் நிலவும். பூர்விகச் சொத்துக்கள் மூலம் ஆதாயம் உண்டாகும். நீண்டகால முதலீடுகளில் திட்டமிட்டு ஈடுபடுவதால் பல நன்மைகள் வந்து சேரும். உத்தியோகத்தில் சிலருக்கு பதவி உயர்வும் சம்பள உயர்வும் கிடைக்கும். அரசியலில் ஈடுபட்டு இருப்பவர்களின் செல்வாக்கு அதிகரிக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்கள் மேலதிகாரியை அனுசரிப்பது நல்லது. தொழிலிலும் உத்தியோகத்திலும் கவனக் குறைவு கூடாது.
மகரம்

மகர ராசியினருக்கு இவ்வாாரம் உழைப்பிற்கு ஏற்ற பலன் கிடைக்கும். எந்த ஒரு செயலையும் நிதானமாகச் செய்வதுதான் வெற்றி தரும். மௌனம் நல்லது. குடும்பப் பொறுப்புகள் அதிகரிக்கும், உறவினர்களிடையே உங்கள் பேச்சுக்கு மதிப்புக் கூடும். தொழிலில் இருந்த மந்த நிலை மாறி லாபம் அதிகரிக்கும். பழைய பாக்கிகள் வசூலாகும். வீட்டுக்கு புதிய பொருள்களை வாங்க நினைத்தவர்கள் நினைத்தபடி வாங்குவார்கள். கணவன் மனைவி உறவுகளில் கருத்து வேறுபாடுகள் ஏற்படும் வாய்ப்பு உண்டு அதனால் ஒருவருக்கொருவர் விட்டு கொடுத்து செல்ல வேண்டும். சோம்பலால் சில வாய்ப்புகளை இழக்கும் படி நேரலாம் கவனம் தேவை.
கும்பம்

கும்ப ராசியினருக்கு இந்த வாரம் மனவலிமையும் புதிய நம்பிக்கையும் பிறக்கும் வாரமாக அமைகிறது. புதிய முயற்சிகளில் எதிர்பார்த்த வெற்றி கிடைத்து, மனதில் தன்னம்பிக்கை அதிகரிக்கும். வெளியூர் பயணங்களால் ஆதாயம் உண்டு. நண்பர்களின் உதவியால் சிக்கலான பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பீர்கள். வருமானத்தில் எந்த பிரச்னையும் இல்லை. கொடுக்கல் வாங்கல்கள் சிறப்பாக நடக்கும். தெய்வ பலமும் முன்னோர்கள் ஆசிர்வாதமும் உண்டு. புதிய பொறுப்புக்களால் பணிச்சுமை அதிகரிக்கும். உங்கள் உற்சாகத்தைக் குறைக்கும் படியாக சில சம்பவங்கள் நடக்கலாம்.
மீனம்

மீன ராசியினருக்கு இந்த வாரம் தெய்வீக அருளும் மனநிறைவும் கொண்ட வாரமாக அமையும். கோவில் வழிபாடு, புண்ணிய தீர்த்த நீராடல் உண்டு. புண்ணியக் காரியங்களில் ஈடுபடுவீர்கள். சமூகத்தில் பெரிய மனிதர்களின் நட்பு கிடைக்கும். ஆபரணங்கள் வாங்கும் யோகம் உண்டு. புதிய வாடிக்கையாளர்கள் கிடைப்பார்கள். சங்கடமான சூழ்நிலைகள் மாறி, மனம் சாந்தி அடையும். வழக்குகள் சாதகமாக முடியும் வருமானத்தில் குறைவிருக்காது. ஆசைகள் பூர்த்தியாகும். சுப நிகழ்ச்சிகள் நடக்கும் வாய்ப்பு உண்டு. செலவுகள் செய்யும் பொழுது உற்சாகத்தில் சேமிப்பு கரைந்து விடும்படியாகச் செய்ய வேண்டாம்.
இதனையும் படியுங்கள் : 2026 ராகு கேது பெயர்ச்சியால் பலன் பெறும் ராசிகள்


