- Prep
- 10 min
- Cook
- 10 min
- Total
- 20 min
- Serves
- 4
- Cuisine
- Indian, TAMIL
- Course
- Breakfast, dinner
தென்னிந்திய காலை உணவு வகைகளில் மிகவும் பிரபலமான ஒன்றாக தோசை மற்றும் இட்லி உள்ளது. அதுவும் குறிப்பாக, தோசை என்றால் பலரது விருப்பமான உணவாகும். சொல்லப்போனால், இட்லியை விட தோசை பிரியர்கள் தான் அதிகம். எத்தனை தோசை சுட்டுக் கொடுத்தாலும் அவர்கள் அதை சலிக்காமல் சாப்பிட்டுக் கொண்டே இருப்பார்கள். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை என அனைவரும் தோசை தான் விரும்பி சாப்பிடுவார்கள். அந்த வகையில் நீங்களும் தோசை பிரியர் என்றால் உங்களுக்கான பதிவு தான் இது.
குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை என அனைவரும் விரும்பி ருசிக்கும் இந்த அற்புதமான உணவு தற்போது ஏகப்பட்ட வெரைட்டிகளில் கிடைக்கின்றது. ஆனியன் தோசை, ரவை தோசை, மாசாலா தோசை, கேரட் தோசை என இப்படி சொல்லிக் கொண்டே போகலாம். அந்த வகையில் எப்போதும் வழக்கமான தோசை சாப்பிட்டு போர் அடுத்துவிட்டதா? அப்படியானால் சத்தான மிகவும் சுவையான சோள தோசையை வீட்டில் உள்ளவர்களுக்கு செய்து கொடுத்து பாருங்கள். இந்த சுவையான சோள தோசையை ஒரே ஒரு தடவை வீட்டில் செய்து பார்த்துவிட்டால் அதுக்கப்புறம் அடிக்கடி செய்வீர்கள்.
இந்த தோசைக்கு கார சட்னி, தக்காளி சட்னி இது எல்லாமே ரொம்ப ரொம்ப அற்புதமாக இருக்கும். இந்த டேஸ்டான ரோள தோசை ரெசிபி சின்ன குழந்தைகளிலிருந்து பெரியவர்கள் வரை எல்லாருக்குமே ரொம்ப ரொம்ப பிடிக்கும். அதனால் கண்டிப்பாக ஒரே ஒரு தடவை மட்டும் இந்த ரெசிபியை மிஸ் பண்ணாமல் செய்து பாருங்கள். இந்த ரெசிபியை காலையில் டிபனுக்கு மட்டுமல்லாமல் இரவு உணவிற்கும் செய்யலாம். இதில் நாம் வெங்காயம், கேரட், கறிவேப்பிலை எல்லாம் சேர்த்து செய்வதால் இந்த தோசையின் சுவை அட்டகாசமாக இருக்கும். இப்போது சுவையான சோள தோசை எப்படி செய்வதென்று பார்ப்போம்.
இதனையும் படியுங்கள் : பிரெட் பொடி மாஸ் காலை உணவிற்கு இந்த மாதிரி ஒரு தடவை சிம்பிளா செய்து பாருங்கள் அசத்தலாக இருக்கும்!!
Ingredients
Method
முதலில் சோளம், அரிசி, உளுந்து மற்றும் வெந்தயத்தை நன்கு அலசி விட்டு 6 மணி நேரம் வரை ஊற வைத்து கொள்ளவும்.
பின் இதனை மிக்ஸியில் சேர்த்து நன்கு அரைத்து எடுத்துக் கொள்ளவும்.
பின் இதனை ஒரு பவுளுக்கு மாற்றி அதனுடன் உப்பு, துருவிய கேரட், நறுக்கிய வெங்காயம், கறிவேப்பிலை, பச்சை மிளகாய் சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.
பின் ஒரு தோசைக்கல்லை அடுப்பில் வைத்து சூடானதும் ஒரு கரண்டி மாவை எடுத்து தோசையாக ஊற்றி சுற்றி நெய் விட்டு ஒரு பக்கம் வெந்ததும் மற்றொரு பக்கம் வேகவைத்து எடுக்கவும். அவ்வளவுதான் சுவையான சோள தோசை தயார்.






