- Prep
- 5 min
- Cook
- 10 min
- Total
- 15 min
- Serves
- 2
- Cuisine
- Indian, TAMIL
- Course
- Breakfast
பிரெட் பொடிமாஸ் ரெசிபி ரொம்ப ரொம்ப ஈஸியான ஒரு ரெசிபி இதை பிரேக் பாஸ்ட்க்கு சாப்பிடலாம் இல்லனா ஈவினிங் ஸ்னாக்ஸ் ஆகவும் சாப்பிடலாம். குழந்தைகள் ஸ்கூலுக்கு போயிட்டு வந்து பசிக்குது அப்படின்னு சொன்னாங்கனா நாலு பிரட் மற்றும் முட்டையும் இருந்தால் இந்த சூப்பரான ரெசிபியை செஞ்சிடலாம். இந்த ரெசிபி சாப்பிடுவதற்கு ரொம்பவே சூப்பரா இருக்கும். இந்த டேஸ்டான ரெசிபியை கண்டிப்பா வீட்ல ஒரு தடவ செஞ்சு பாருங்க. பிரட் வச்சு பிரட் அல்வா, பிரட் டோஸ்ட்,பிரட் சாண்ட்விச், பிரட் ஆம்லெட் இந்த மாதிரி நிறைய ரெசிபிஸ் செஞ்சிருப்பீங்க. அந்த வகையில இந்த ஒரு ரெசிபியையும் கண்டிப்பாக உங்க வீட்ல ட்ரை பண்ணி பாருங்க டேஸ்ட் அவ்வளவு சூப்பரா இருக்கும்.
இந்த டேஸ்டான ரெசிபிக்கு கண்டிப்பா எல்லாருமே விரும்பி சாப்பிடுவாங்க. தக்காளி வெங்காயம் பச்சை மிளகாய் கொத்தமல்லி இலைகள் எல்லாமே சேர்த்து செய்றதால டேஸ்ட் ரொம்பவே சூப்பரா இருக்கும். சளி இருமல் இருக்கும் போது கூட குழந்தைகளுக்கு கஷாயம் வைத்து சாப்பிட பிடிக்கலைன்னா முட்டை மிளகு தூள் எல்லாமே சேர்த்து இந்த மாதிரி ஒரு சூப்பரான பிரட் பொடிமாஸ் செஞ்சு கொடுங்க. கண்டிப்பாக குழந்தைகள் விரும்பி சாப்பிட வாங்க அதே சமயத்துல மிளகுத்தூள் நிறைய சேர்த்து இருக்கிறதால சளி இருமலும் சரியாகிவிடும்.
இந்த டேஸ்டான ரெசிபியை கண்டிப்பாக மிஸ் பண்ணாம சாப்பிட்டு பாருங்க. இந்த ரெசிபி கண்டிப்பா ரொம்ப ரொம்ப சிம்பிளான ஒரு ரெசிபியாக இருக்கும். காலைல பிரேக்ஃபாஸ்ட்க்கு எப்பவுமே ஒரே மாதிரியா இட்லி தோசை சப்பாத்தி பூரி பொங்கல் அப்படின்னு சாப்பிடாம கொஞ்சம் வித்தியாசமா இந்த மாதிரி ஒரு சிம்பிளான பிரட் பொடிமாஸ் செஞ்சு சாப்பிடலாம் கண்டிப்பாக டேஸ்ட் ரொம்பவே சூப்பரா இருக்கும். இந்த சிம்பிளான அதே நேரத்தில் சுவையான குழந்தைகளுக்கு ரொம்ப புடிச்ச பிரட் பொடி மாஸ் ரெசிபி எப்படி செய்றதுன்னு வாங்க பார்க்கலாம்.
இதனையும் படியுங்கள் : காரசாரமான ருசியில் பிரெட் சில்லி இப்படி ட்ரை பண்ணி பாருங்க! பார்த்தாலே நாவில் எச்சி ஊறும்!
Ingredients
Method
ஒரு கடாயில் எண்ணெய் சேர்த்து பெரிய வெங்காயம் பச்சை மிளகாய் கருவேப்பிலை சேர்த்து வதக்கிக் கொள்ளவும். அதன்பிறகு தக்காளி சேர்த்து நன்றாக வதக்கவும்.
மிளகு தூள் தேவையான அளவுக்கு உப்பு சேர்த்து நன்றாக கலந்து விடவும். முட்டை சேர்த்து நன்றாக கிளறிக்கொண்டே இருக்கவும்.
பிரட் துண்டுகளை சிறியதாக நறுக்கி சேர்த்து கலந்து விட்டு கொத்தமல்லி இலைகள் தூவி இறக்கினால் சுவையான பிரட் பொடிமாஸ் தயார்.






