Home ஜோதிடம் ராசி பலன் ஜூன் மாத ராசிபலன் 2024

ஜூன் மாத ராசிபலன் 2024

மேஷம்

மேஷ ராசிக்காரர்களுக்கு இந்த மாதம் வெற்றியைத் தரும் மாதமாக அமையும். மேலதிகாரிகளின் ஆதரவைப் பெறுவீர்கள். வியாபாரிகளுக்கும் இந்த மாதம் சாதகமாக இருக்கும். மாணவர்கள் பள்ளியில் நடைபெறும் போட்டிகளில் பங்கு பெற்று சிறந்த மாணவராக முத்திரை பதித்து வெற்றி பெறுவார்கள். வாழ்க்கைத்துணையின் ஆலோசனையால், வீட்டில் வருமானம் பெருகும். திருமணமானவராக இருந்தால் சற்று கவனமாக இருக்க வேண்டியது அவசியம். வியாபாரத்தில் செல்வம் பெருகும், வேலையில் பதவி கிடைப்பதால் சம்பளம் கூடும். பங்குச் சந்தையில் முதலீடு செய்திருந்தால், இந்த நேரத்தில் நீங்கள் நல்ல நிதி நன்மைகளைப் பெறலாம்.

-விளம்பரம்-

ரிஷபம்

ரிஷப ராசிக்காரர்கள் இந்த மாதம் விடாமுயற்சியுடன் செயல் படுவார்கள். வியாபாரம் செய்பவர்கள் வெளிநாட்டுத் தொடர்புகளால் ஆதாயம் பெறலாம். இந்த மாதம் உங்கள் கோபத்தை கொஞ்சம் கட்டுப்படுத்த வேண்டும். தேவையற்ற சண்டை சச்சரவுகளில் இருந்து விலகி இருங்கள்.‌ திருமணமாகாதவர்களுக்கு நல்ல வரன் அமையலாம். வீட்டின் சூழ்நிலை மகிழ்ச்சியும் அமைதியும் நிறைந்ததாக இருக்கும். உங்கள் உடல்நிலையை அலட்சியப்படுத்தாமல் இருந்தால் நல்லது. பெண்கள் முன்னேற்றத்தை அடையலாம். அதே சமயம் பிரச்சனைகளை நண்பர்களின் உதவியுடன் தீர்ப்பீர்கள். வேலை தேடுபவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும்.

மிதுனம்

மிதுன ராசிக்காரர்களுக்கு இந்த மாதம் சற்று சவால்கள் நிறைந்த மாதமாக அமையும். வீட்டில் அமைதியின்மை ஏற்படலாம். ஊடகங்கள் மூலம் வணிகம் எதிர்பாராத வெற்றியைப் பெறுவதற்கான வாய்ப்புகள் உள்ளன. போட்டித் தேர்வுக்குத் தயாராகிக்கொண்டிருந்தால், இந்த மாதம் உங்களுக்கு சவால்கள் நிறைந்ததாக இருக்கும். உங்கள் தினசரி வருமானம் அதிகரிக்கும். அவ்வப்போது உடல்நலப் பிரச்சனைகள் உங்களைத் தொந்தரவு செய்யலாம். இந்த மாதம் அவசரமாக செயல்படுவது பணிகளைக் கெடுத்துவிடும், எனவே அவசரப்படுவதைத் தவிர்த்து, நிதானமாக செயல்படுங்கள்.

கடகம்

கடக ராசிக்காரர்களுக்கு இந்த மாதம் சிறந்த மாதமாக அமையும். பதவி உயர்வதற்கான வாய்ப்புகள் அதிகரிக்கும். ஆனால் பணியிடத்தில் எந்தவொரு சர்ச்சையிலும் சிக்காமல் இருக்க முயற்சி செய்யுங்கள். இந்த மாதம் மாணவர்களுக்கு சிறப்பான பலன்கள் கிடைக்கும். போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகும் மாணவர்களின் கடின உழைப்புக்கு வெற்றி கிடைக்கும். மூதாதையர் சொத்துக்களால் ஆதாயம் கிடைக்கும். உங்கள் மூத்த சகோதரர்களின் முழு ஆதரவையும் பெறுவீர்கள் மற்றும் உங்கள் குடும்ப உறுப்பினர்கள் ஒரு புதிய தொழிலைத் தொடங்க நிதி ரீதியாக உங்களுக்கு உதவுவார்கள்.

சிம்மம்

சிம்ம ராசிக்காரர்களுக்கு தொழில் ரீதியாக இந்த மாதம் சாதகமாக இருக்கும். இந்த மாதம் நீங்கள் விரும்பிய இடமாற்றத்தைப் பெறலாம். குடும்ப வாழ்க்கையில் நல்லிணக்கம் அதிகரிக்கும்.‌ காதல் வாழ்க்கை சற்று சோதனை நிறைந்ததாக இருக்கும். எதிர் பார்க்காத செலவுகள் ஏற்படும். உங்கள் கவனக்குறைவால் உடல்நலப் பிரச்சினைகள் ஏற்படலாம். வாழ்க்கை துணையின் கோபம் காரணமாக ஒரு சில பிரச்சனைகளை சந்திப்பீர்கள். அதிர்ஷ்டம் காரணமாக வேலையில் வெற்றி பெறுவீர்கள். பணியிடத்தில் மூத்த உறுப்பினர்கள் மற்றும் சக நண்பர்களின் ஆதரவை தெரிவித்தீர்கள்.

-விளம்பரம்-

கன்னி

கன்னி ராசிக்காரர்கள் இந்த மாதம் கவனமாக இருக்க வேண்டும். அரசாங்க வேலையில் உள்ளவர்களுக்கு பணியில் இடமாற்றம் கிடைக்கலாம். வாழ்க்கையில் பல சவால்களை எதிர்கொள்ள மன வலிமை உண்டாகும். திருமணமானவர்கள் வாழ்க்கையில் சில பிரச்சனைகள் வரலாம். தொழில் செய்து வருபவர்களுக்கு இந்த மாதம் அற்புதமாக அமையும். சரியான நேரத்தில் வேலைகளை செய்து முடித்து அதற்கான முடிவுகளை பெறுவீர்கள். தொழில் முன்னேற்றத்தில் இருந்து வந்து தடைகள் நீங்கும். காதல் விஷயத்தில் அனுசரித்துச் செல்லவும். பயணத்தின் போது உங்களின் உடல்நிலை மற்றும் உடல் நலனில் அக்கறை தேவை.

துலாம்

துலாம் ராசிக்காரர்களுக்கு இந்த மாதம் ஏற்ற தாழ்வுகள் நிறைந்த மாதமாக அமையும். வேலைக்கு செல்பவர்களுக்கு இந்த மாதம் சிறந்த மாதமாக இருக்கப்போகிறது. கடுமையான உழைப்பு மூலமாக நல்ல பணம் சம்பாதிப்பீர்கள். வியாபாரம் தொடர்பான விஷயத்தில் ஏற்ற தாழ்வுகள் இருக்கும். குடும்பம் தொடர்பாக பெரிய முடிவுகளை எடுக்கும் விஷயத்தில் கவனம் தேவை. உணவு பழக்க வழக்கத்தில் கவனம் தேவை. வேலை சார்ந்த விஷயத்தில் அலட்சியத்தை தவிர்க்கவும். திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சி நிறைந்ததாக இருக்கும். உங்கள் குடும்பத்தின் பொறுப்புகளை நிறைவேற்றுவதில் கூடுதல் கவனம் தேவை.

விருச்சிகம்

இந்த மாதம் முதல் மற்றும் இரண்டாவது வாரங்களில் பயணம் மேற்கொள்வது நல்லது. காதல் வாழ்க்கையில் ஈடுபட்டு உள்ளவர்களுக்கு மகிழ்ச்சி நிறைந்து காணப்படும். தொழிலில் நல்ல லாபம் கிடைக்கும். சிலர் ஆடம்பர பொருட்கள் வாங்குவீர்கள். தொழில், வியாபாரம் தொடர்பான விஷயத்தில் முன்னேற்றத்திற்கான வாய்ப்பு உண்டு.திருமணம் முயற்சியில் உள்ளவர்களுக்கு நல்ல வரன் அமையும். எந்த ஒரு திட்டத்திலும் பணம் முதலீடு செய்வதில் கூடுதல் கவனம் தேவை. முடிந்த வரை முதலீடுகளை தவிர்ப்பது நல்லது. இந்த மாதம் அதிக செலவுகள் ஏற்பட வாய்ப்புள்ளது.

-விளம்பரம்-

தனுசு

இந்த மாதம் தனசு ராசிக்காரர்களுக்கு கவனமாக இருக்க வேண்டிய மாதமாக அமையும். காதல் வாழ்க்கையில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு இது வழக்கமான மாதமாக இருக்கும். வீட்டில் நல்ல செய்தி கிடைப்பதற்கு வாய்ப்பு உள்ளது. இந்த சமயத்தில் குடும்பத்தில் ஒருவரின் உடல் ஆரோக்கியத்தில் பிரச்சனை ஏற்பட வாய்ப்புள்ளது. கடினமான நேரத்தில் உங்கள் நண்பர்களின் உதவி கிடைக்கும். உணர்ச்சி வசப்பட்டு எந்த ஒரு முடிவையும் எடுக்க வேண்டாம். பண பரிவர்த்தனைகளில் முழு கவனத்துடன் செயல்படவும். காதல் விஷயத்தில் அனுசரித்து செல்லவும். வேலை இல்லாதவர்களுக்கு நல்ல வேலை அமைய வாய்ப்புள்ளது.

மகரம்

மகர ராசிக்காரர்களுக்கு இந்த மாதம் மந்தமான மாதமாக அமையும். குடும்ப வாழ்க்கையில் ஒரு சில பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்புள்ளது. பிரச்சனைகளில் இருந்து விலகி இருப்பது நல்லது. பணிக்கு செய்பவர்கள் வேலை மாற்றம் நடைபெறலாம். தொழில் செய்து வருபவர்களுக்கு இது அற்புதமான மாதமாக இருக்கும். குடும்பத்துடன் நேரத்தை ஒதுக்க முடியாமல் போகலாம். வேலை மற்றும் வியாபாரம் தொடர்பான விஷயத்தில் சில பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். இந்த மாதத்தில் சோம்பேறித்தனம் மற்றும் வேலையை தள்ளிப்போடும் பழக்கத்தை கைவிடுவது அவசியம்.

கும்பம்

கும்ப ராசிக்காரர்களுக்கு இந்த மாதம் சில தடைகள் நிறைந்த மாதமாக அமையும். காதல் வாழ்க்கையில் ஈடுபட்டுள்ளவர்கள் மகிழ்ச்சியுடன் காணப்படுவார்கள். பணிக்கு செல்பவர்கள் ஒரு சில ஏற்ற இறக்கங்களை சந்திக்க நேரிடும். கடுமையான உழைப்பு மூலமாக நல்ல பலன்களை பெறுவீர்கள். முதலீடு சார்ந்த விஷயத்தில் நல்ல லாபம் உண்டாகும். குடும்பம் தொடர்பான எந்த ஒரு பெரிய முடிவையும் எடுக்கும் போது குடும்ப உறுப்பினர்களின் கருத்துக்களைக் கேட்பது அவசியம். மாதத் தொடக்கத்தில் பணியிடத்தில் சில சருக்கல்கள், எதிரிகளின் தொல்லை இருந்தாலும் முன்னேறுவீர்கள்.

மீனம்

மீன‌ ராசிக்காரர்களுக்கு இந்த மாதம் இனிமையான மாதமாக அமையும். தாயாரின் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது நல்லது. திருமண வாழ்க்கை ஏற்ற இறக்கங்கள் நிறைந்ததாக இருக்கும். வேலைக்கு செல்பவர்கள் கடுமையான உழைப்பு மூலமாக வெற்றி பெறுவார்கள். நெருங்கிய நண்பர்கள், உறவினர்களிடமிருந்து நல்ல ஆதரவை பெறுவீர்கள். நீதிமன்ற வழக்குகளில் வெற்றி அடைவீர்கள். உங்களின் கடின உழைப்பிற்கு, முயற்சிகளுக்கு முழு பலன் கிடைக்கும். திருமண வாழ்க்கையை இனிமையாக இருக்கும்.

இதனையும் படியுங்கள் : குருவால் அடுத்த ஜூன் மாத 30 நாட்களில் அதிர்ஷ்டத்தை அள்ளப்போகும் 4 ராசிகள்