இந்த சமுதாயத்தில் யார் தான் கடன் வாங்காமல் வாழ்க்கை நடத்துகிறார்கள் அனைவரும் ஏதாவது ஒரு சூழ்நிலையில் யாரிடமாவது கடன் வாங்கி கொள்கிறோம். நம்மிடம் பணம் வரும்போது அந்த கடனை திரும்ப அடைத்து விடுகிறோம். இப்படிதான் நமது வாழ்க்கை முறைய உள்ளது. ஆனால் ஒரு சிலர் கடன் வாங்கும் போது தவறான நேர, காலங்களில் வாங்கும் போது கடன் மீது கடன் வாங்கி மாட்டீர் கொள்கிறார்கள். பணம் இல்லாமல் கூட நம்மால் வாழ்ந்து விட முடியும் ஆனால் இந்த கடன் வைத்துக்கொண்டு ஒரு மனிதன் நிம்மதியாய் வாழவே முடியாது. அதனால் கடன் பிரச்சினைகளில் இருந்து மீண்டு எப்படி வெளியே வருவது என்பதை இந்த ஆன்மீகம் குறித்த தொகுப்பில் நாம் காணலாம் வாருங்கள்.
கடன் தீர்க்கும் செவ்வாய்
பொதுவாக கடன் பிரச்சனை இரண்டு விதமாக இருக்கும் ஒன்று நாம் யாருக்காவது கடனாக பணம் கொடுத்திருப்போம் இல்லை நாம் யாரிடமாவது கடனாக பணம் பெற்று இருப்போம். இப்படி நாம் பணம் கொடுத்து இருந்தாலும் அல்லது கடனாக பணம் வாங்கி இருந்தாலும் சரி கடன் பிரச்சனை தீர்வதற்காக செவ்வாய்க்கிழமை உகந்த தினமாக இருக்கும் இந்த செவ்வாய் கிழமையில் கடனாக வாங்கிய பணத்தில் ஒரு சிறு தொகையை திரும்ப செலுத்தினால் போதும் உங்களுடைய கடன் பிரச்சனை தீர்ந்து விடும் என சாஸ்திரங்கள் கூறுகின்றனர். அதேபோல் செவ்வாய் கிழமை நம்மால் பணத்தை கொடுக்க முடியாமல் மற்ற நாட்களில் பணம் கொடுக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டால் செவ்வாய் ஓரையில் பணத்தை கொடுக்கும் போதும் உங்களது கடன் பிரச்சனை தீர்ந்துவிடும்.

கிரக ஒரை அட்டவனை
எந்த நேரத்தில் எந்த ஒரை வரும் என்பது உங்களுக்கு தெரியாது என்று நினைக்கின்றேன் ? உங்கள் வீட்டில் இருக்கும் காலண்டரை திருப்பி பார்த்தால் அதில் கிரக ஓரை எந்த நேரத்தில் உள்ளது என்ற அட்டவணை இருக்கும். அதை பார்த்து தெரிந்து கொண்டு செவ்வாய் கிரக ஒரையில் நீங்கள் கடனாக பெற்ற பணத்தின் அசல் அல்லது வட்டி எது வேண்டுமானாலும் செலுத்தலாம் உங்கள் கடன் விரைவில் அடைந்து விடும். அதேபோல் நீங்கள் கடன் புதியதாக வாங்கும் போது கூட செவ்வாய்க்கிழமை ஆன்று வாங்கினால் அந்தக் கடனை திருப்பி வேகமாக அடைத்து விடலாம். ஆனால் நீங்கள் கடன் வாங்கும் நேரம் குளிகை நேரமாக மட்டும் இருக்கக் கூடாது என்பதில் கவனமாக இருங்கள்.
குளிகை நேரம்
ஏன் தெரியுமா குளிகை நேரத்தில் கடன் வாங்க கூடாது நீங்கள் தப்பி தவறி குளிகை நேரத்தில் மட்டும் கடன் வாங்கி விட்டால். நீங்கள் மீண்டும் மீண்டும் கடன் வாங்கும் சூழ்நிலை ஏற்படும் ஏனென்றால் குளிகை நேரத்தில் நாம் எதை செய்கிறோமோ அதுவே பலர் மடங்காக பெருகும் இதனால் நீங்கள் அதிகமான கடன் சுமைக்க உள்ளாகி திரும்ப அடைக்க முடியாத அளவிற்கு கடனாளியாக மாறிவிடுவீர்கள். ஆனால் இந்த குளிகை நேரத்தை நீங்கள் கடன் அடைப்பதற்கு பயன்படுத்திக் கொள்ளலாம் குளிகை நேரத்தில் கடன் தொகையை திருப்பிக் கொடுத்தால் உங்கள் கடன் வேகமாக அடைந்து விடும். அதேபோல் இந்த குளிகை நேரத்தை சரியாக பயன்படுத்தி நீங்கள் வாங்க வேண்டிய நகைகள், துணிமணிகள், வீடு, நிலம் போன்றவை வாங்கும் போது அது பல மடங்காக பெருகும்.

முறுகன்
மேலும் செவ்வாய்க்கிழமை உகந்த தெய்வமாக பலர் இருந்தாலும் முருகனுக்கு விளக்கேற்றி வழிபடுவது இன்னும் சிறப்பாக இருக்கும். இதன் மூலம் நம்முடைய கடன் தொல்லைகள் தீர கூட வாய்ப்பு அதிகம் உள்ளது அதனால் செவ்வாய்க்கிழமை அன்று உங்களது வீட்டின் அருகில் இருக்கும் முருகன் கோவிலுக்கு சென்று முருகனுக்கு செவ்வரளி பூவே மாலையாக தொடுத்து சாற்றி விட்டு ஆறு நெய் விளக்கு போட்டு தீபம் ஏற்றி வழிபட்டு வந்தால் உங்களுக்கு இருக்கும் கடலளவு கடன் கூட சிறிது நாட்களிலே காணாமல் போய்விடும் அதுவும் செவ்வாய் ஒரையில் முருகனை நீங்கள் வழிபடுவது இன்னும் சிறப்பானதாக இருக்கும். இப்படி தொடர்ந்து செவ்வாய்க்கிழமை அன்று செவ்வாய் ஒரையில் 6 வாரங்கள் முருகனுக்கு நெய் விளக்கு ஏற்றி வழிபட்டு வந்தால் உங்கள் கடன் சுமையை தீர்த்து விடுவார்.
கால பைரவர்
அதேபோல சிவனின் அவதாரமான கால பைரவருக்கு தேய்பிறையில் வரும் அஷ்டமி நாட்களில் விளக்கேற்றி வழிபட்டு வந்தாலும் நிலா தேய்ந்து கொண்டே போவது போல உங்களது கஷ்டங்களும் சிறிது சிறிதாக தேய்ந்து கொண்டே போகும். அதே கால பைரவருக்கு தேய்பிறை அஷ்டமி நாளில் ராகு காலத்தில் விளக்கேற்றி வழிபட்டு வந்தார் உங்கள் கடன் தொல்லை தீரும். இப்படி மேலே சொன்ன விஷயங்களை எல்லாம் மனதில் வைத்துக் கொண்டு சரியாக செய்து வந்தான் உங்கள் கடன் தொல்லையிலிருந்து விடுபட்டு மாறாக உங்களிடம் பணம் சேர்ந்து கொண்டிருக்கும். நம்பிக்கையுடன் செய்து பாருங்கள் நல்ல பலனை உங்களுக்கு கிடைக்கும்.