கடன் வாங்காத மனிதர்களே இருக்க முடியாது என்பதுதான் யதார்த்தம். கடன் பிரச்சனை என்பது தற்போது மிகவும் சர்வ சாதாரணம் ஆகி விட்டது. கடன் வாங்குவது தவறு என்றாலும் சூழ்நிலை காரணமாக கடன் வாங்கி விட்டு, பிறகு அதை திருப்பி அடைக்க முடியாமல், எவ்வளவு சம்பாதித்தாலும் போதவில்லை என புலம்புகிறவர்கள் தான் அதிகம். கடன் சீக்கிரம் அடைபடுவதற்கு உழைப்பு, முயற்சியுடன் சில எளிய வழிகளை பின்பற்றினாலே போதும்.
சிலர் கடனை அடைப்பதற்காக கடுமையாக முயற்சி செய்வார்கள். ஆனால் எவ்வளவு முயன்றாலும், எவ்வளவு சம்பாதித்தாலும் கடனை அடைக்க முடியாமல், கழுத்தை நெரிக்கும் கடன் பிரச்சனையுடன் போராடிக் கொண்டிருப்பார்கள். இப்படிப்பட்டவர்கள் சில எளிய பரிகாரங்களை செய்து வந்தாலே கடன் பிரச்சனையில் இருந்து விடுதலை பெற முடியும். கடன் பிரச்சினை தீர நாம் செய்ய வேண்டியது எல்லாமே எளிமையான பரிகாரம்தான். அது என்ன பரிகாரம் என்று இந்த ஆன்மிகப் பதிவில் பார்க்கலாம்.

எப்போது பரிகாரம் செய்யலாம் ?
பிரம்மனுடைய பத்தினி சரஸ்வதி தேவி விழித்துச் செயற்படும் நேரம் பிரம்மமுகூர்த்தம் என்பதும் நம்பிக்கை. இதனால் இந்நேரம் சரஸ்வதி யாமம் எனவும் அழைக்கப்படுகின்றது. அதிகாலையில் அந்த பிரம்ம முகூர்த்த நேரம் தான் தேவர்களும் பித்ருக்களும் நம் வீடு தேடி வரும் உன்னத நேரம். அதிகாலையில் பிரம்ம முகூர்த்த நேரத்தில் குடும்பதலைவனும், தலைவியும் எழுந்து பூஜை செய்தால் குடும்பம் தளைக்கும். அதனால் இந்த பூஜையை அதிகாலை 4.30 மணி முதல் 6.00 மணிக்குள்ளாக அதாவது பிரம்ம முகூர்த்த நேரத்திலே செய்து முடிக்க வேண்டும்.

பரிகாரம் செய்யும் முறை
இந்த பரிகாரம் செய்வதற்கு முதலில் ஒரு கைப்பிடி அளவு மொச்சை மற்றும் நாட்டு சர்க்கரையை எடுத்துக் கொள்ளுங்கள். பூஜை அறையில் விளக்கு ஏற்றி விட்டு, கடவுளின் முன் நின்று உங்களுக்கு இருக்கும் பிரச்சனைகள் அனைத்தும் தீர்ந்து விட வேண்டும் என உங்கள் குலதெய்வத்தை நினைத்து மனதார வேண்டிக் கொள்ளுங்கள். “ஓம் ஸ்ரீம் மகாலட்சுமி தாயே போற்றி!!” என்று கூறிவிட்டு, உங்கள் உள்ள கையில் இருக்கும் மொச்சையையும் நாட்டுசர்க்கரையும் ஒரு பாத்திரத்தில் கரைத்து கோமாதாவிற்கு வைத்து விடுங்கள்.
இந்த எளிய பரிகாரத்தை தொடர்ந்து 11 வெள்ளிக்கிழமைகள் செய்ய வேண்டும். கண்டிப்பாக உங்கள் வாழ்க்கையில் நன்மைகள் நிகழ ஆரம்பிக்கும். திருமண தடை, கடன் சுமை, விருப்பமான வேலை, கல்வி மேம்பட உள்ளிட்ட எந்த கோரிக்கையாக இருந்தாலும் பிரம்ம முகூர்த்த நேரத்தில் எழுந்து பரிகாரம் செய்யும் பொழுது உடனடி பலன் கிடைக்கும்.
இதனையும் படியுங்கள் : கையில் 10 ரூபாய் இல்லாதவனிடம் கூட பணம் சேரும் வீட்டில் இதையெல்லாம் செய்து வந்தால்!


