அருள் இல்லார்க்கு அவ்வுலகம் இல்லை என்ற திருவள்ளுவ சித்தனும் கூட பொருளில்லார்க்கு இவ்வுலகம் இல்லை என்று இரண்டாயிரம் வருடங்களுக்கு முன்பே சொல்லி வைத்து விட்டு போய் விட்டார். பொருளோடு இருந்தால்தான் இந்த உலகம் நம்மை மதிக்கிறது. லட்சங்களில் சம்பாதித்தாலும் காசு என்னவோ கையில் தங்க மாட்டேன் என்கிறது என்பவர்களும் கடன் வாங்கும் சந்தர்ப்பத்திற்கு ஆளாகி அதில் இருந்து வெளிவர முடியாமல் தவிப்பவர்களுக்கு இந்த ஆன்மீகப் பதிவு கண்டிப்பாக உதவும்.

எந்த ஒரு இடத்திலும் பணவரவை அதிகரிக்க வேண்டும் என்றால் அங்கு முதலில் நமக்கு லட்சுமி கடாட்சம் நிறைந்து இருக்க வேண்டும். அதற்கு மகாலட்சுமி தாயாரின் பரிபூரண அருளும், ஆசீர்வாதமும் நமக்கு கிடைக்க வேண்டும். இந்த அருளையும், ஆசீர்வாதத்தையும் பெறுவதற்கான ஒரு எளிய பரிகாரத்தை தான் இப்பொழுது நாம் பார்க்க போகிறோம். இந்த பரிகாரத்தை வெள்ளிக்கிழமைகளில் செய்து கொள்ளுங்கள் அல்லது செவ்வாய்க் கிழமை அல்லது உங்களுக்கு எந்த நாளில் செய்தால் விசேஷமாக இருக்கும் என்று தோன்றுகிறதோ அந்த நாளை தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள்.
கடுகு பரிகாரம் செய்யும் முறை
முதலில் நாம் எடுத்து வைத்துள்ள கண்ணாடி பாட்டில் அல்லது கண்ணாடி டப்பாவில் அந்த பாட்டில் அல்லது டப்பா முழுவதும் நிரம்புமாறு கடுகினை நிரப்பி கொள்ளுங்கள். பின்னர் அதன் உள்ளே நாம் எடுத்து வைத்துள்ள 5 ரூபாய் நாணயத்தை கடுகின் உள்ளே புதைத்து வைத்து விடுங்கள். பிறகு அதனை பூஜை அறையில் வைத்து நன்கு பூஜை செய்யுங்கள்.

ஒரு வாரத்திற்கு இரண்டு நாட்கள் என நான்கு வாரத்திற்கு அதன் உள்ளே, எட்டு 5 ரூபாய் நாணயங்கள் சேர்ந்திருக்கும். அதாவது ஒரு மாதம் இந்த கடுகு டப்பாவுக்குள் நாணயங்களை போட்டு வருவீர்கள். ஒரு மாதம் முடிந்ததும் அந்த கடுகு டப்பாவுக்கு உள்ளே இருக்கும் ஐந்து ரூபாய் நாணயங்களை எடுத்து நீங்கள் தான தர்ம காரியத்திற்கு செலவு செய்ய வேண்டும். இந்த நாணயங்களை எடுத்து ஏழை குழந்தைகளுக்கு நோட்டு, புத்தகம் வாங்கிக் கொடுங்கள். இவ்வாறு செய்து வர நம் கர்ம வினைகள் குறைந்து பணம் சம்பாதிப்பதில் இருக்கும் தடைகளும் விலகும்.
நாணயம் யார் கண்ணுக்கு தெரியக்கூடாது
இதே போல 5 ரூபாய் நாணயத்தை கடுகு டப்பாவில் போட்டு வைத்தால் கட்டுக்கட்டாக பணம் சேருமாம். கடுகு டப்பாவை திறந்து பார்த்தால் இந்த நாணயம் யார் கண்ணுக்கும் தெரியக்கூடாது. கடுகு தான் தெரிய வேண்டும். அதேபோல இந்த பரிகாரத்தை நீங்கள் செய்கிறீர்கள் என்பதை அடுத்தவர்களிடம் ஒருபோதும் பகிர்ந்து கொள்ளவே கூடாது. இந்த ரெண்டு ரகசியம் மட்டும் தான் இந்த பரிகாரத்தில் மிக மிக முக்கியம்.


