Advertisement
ஸ்நாக்ஸ்

காலை டிபனுடன் சாப்பிட சூப்பரான கம்பு மெது வடை இப்படி செய்து பாருங்க எவ்வளவு செய்தாலும் காலியாகும்!

Advertisement

மாலை நேரத்தில் ஒரு கப் தேநீருக்கு ஏற்ற ஸ்நாக்ஸ் ஏதாவது சாப்பிட்டால் நல்லா இருக்கும். அதுவும் வீட்டிலேயே செய்து சாப்பிட்டால் இன்னும் நன்றாக இருக்கும். பொதுவாக ஸ்நாக்ஸ் என்றாலே முதலில் ஞாபகத்திற்கு வருவது வடை தா‌ன். மாலையில் டீ – க்கு பொருத்தமான உணவாக வடைக்கு நிகர் எதுவும் இருக்க முடியாது. அப்படி வாழைப்பூ வடை, பருப்பு வடை என சாப்பிட்ட நீங்கள் கம்பு மெது வடை சாப்பிட்டிருக்கீங்களா..? ஒரு முறை முயற்சி செய்து பாருங்கள். கம்பில்‌ பலவித சத்துக்கள் நிறையந்துள்ளன. நம் உடலுக்கு ஆரோக்கியம் தரக்கூடிய தானிய வகைகளில் சிறு தானிய வகைகள் முக்கிய பங்கு வகிக்கின்றன. நம் உடலுக்குத் தேவையான அனைத்து வகையான உயிர் சத்துக்களும் நிறைந்ததாக தான் சிறுதானியங்கள் இருக்கின்றன. அவற்றில் மிகவும் முக்கியமான ஒரு தானியம் தான் கம்பு.

மற்ற எந்த தானியங்களிலும் இல்லாத அளவிற்கு புரதச்சத்து அதிகம் இருக்கக்கூடிய தானியமாகவும் இந்த கம்பு திகழ்கிறது. இப்படி எண்ணற்ற ஆரோக்கிய நன்மைகளை கொண்டுள்ள இந்த அற்புத கம்பில் எப்படி சுவையான மற்றும் ஆரோக்கியமான வடை தயார் செய்யலாம் என்று பார்க்கலாம். அப்படிப்பட்ட இந்த கம்பை பயன்படுத்தி கம்பு வடை செய்து கொடுத்தால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அதை விரும்பி உண்பார்கள்.‌ இந்த வடை மிகவும் ருசியாக, அனைவரும் விரும்பி சாப்பிடும் வகையில் இருக்கும். இது சுவையாக இருப்பதோடு மட்டுமல்லாமல் உடல் ஆரோக்கியத்திற்கு நல்லதும் கூட. இந்த வடையை எண்ணெயில் போட்டு பொரித்தெடுத்ததும் சுடச்சுட சட்னியுடன் தொட்டு சாப்பிடும் போது அதன் சுவையே அலாதி தான்.

Advertisement

கம்பு மெது வடை | Kambu Medu Vadai Recipe In Tamil‌

Print Recipe
மாலை நேரத்தில் ஒரு கப் தேநீருக்கு ஏற்ற ஸ்நாக்ஸ் ஏதாவது சாப்பிட்டால் நல்லா இருக்கும். அதுவும் வீட்டிலேயே செய்து சாப்பிட்டால் இன்னும் நன்றாக இருக்கும். பொதுவாக ஸ்நாக்ஸ் என்றாலே முதலில் ஞாபகத்திற்கு வருவது வடை தா‌ன். மாலையில் டீ – க்கு பொருத்தமான உணவாக வடைக்கு நிகர் எதுவும் இருக்க முடியாது. அப்படி வாழைப்பூ வடை, பருப்பு வடை என சாப்பிட்ட நீங்கள் கம்பு மெது வடை சாப்பிட்டிருக்கீங்களா..?
Advertisement
ஒரு முறை முயற்சி செய்து பாருங்கள். கம்பில்‌ பலவித சத்துக்கள் நிறையந்துள்ளன. நம் உடலுக்கு ஆரோக்கியம் தரக்கூடிய தானிய வகைகளில் சிறு தானிய வகைகள் முக்கிய பங்கு வகிக்கின்றன. இந்த கம்பை பயன்படுத்தி கம்பு வடை செய்து கொடுத்தால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அதை விரும்பி உண்பார்கள்.‌ இந்த வடை மிகவும் ருசியாக, அனைவரும் விரும்பி சாப்பிடும் வகையில் இருக்கும். இது சுவையாக இருப்பதோடு மட்டுமல்லாமல் உடல் ஆரோக்கியத்திற்கு நல்லதும் கூட.
Course evening, snacks
Cuisine Indian
Keyword Kambu Medu Vadai
Advertisement
Prep Time 10 minutes
Cook Time 10 minutes
Total Time 20 minutes
Servings 4 People
Calories 361

Equipment

  • 1 பவுள்
  • 1 வாணலி
  • 1 மிக்ஸி

Ingredients

  • 1/2 கப் கம்பு
  • 1/4 கப் உளுந்து
  • 4 பச்சை மிளகாய்
  • 1 துண்டு இஞ்சி
  • 2 பெரிய வெங்காயம்
  • 1/4 கப் கறிவேப்பில்லை, கொத்தமல்லி
  • 1 டீஸ்பூன் சீரகம்
  • 1 டீஸ்பூன் மிளகு
  • உப்பு தேவையான அளவு
  • எண்ணெய் தேவையான அளவு

Instructions

  • முதலில் கம்பு மற்றும் உளுந்தை தண்ணீர் விட்டு சிறிது நேரம் ஊற வைத்து கொள்ளவும். பின்‌ வெங்காயம், கறிவேப்பில்லை, கொத்தமல்லி ஆகியவற்றை பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்.
  • பின் கம்பு‌ மற்றும் உளுந்தை மிக்ஸியில் சேர்த்து சிறிதளவு தண்ணீர் விட்டு நன்கு அரைத்துக் கொள்ளவும்.
  • பின் நறுக்கி வைத்துள்ள வெங்காயம், பச்சை மிளகாய், கொத்தமல்லி, கருவேப்பிலை, இஞ்சி, சீரகம், மிளகு, கம்பு மாவு மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து அதை நன்கு கலந்து கொள்ளவும்.
  • ஒரு வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் அதில் ஒரு கை அளவு மாவை எடுத்து நடுவில் துளை இட்டு எண்ணெயில் போட்டு பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்.
  • அவ்வளவுதான் சுவையான மற்றும் ஆரோக்கியமான கம்பு வடை தயார். இந்த வடை தேங்காய் சட்னி அல்லது சாம்பாருடன் சேர்த்து சாப்பிட மிகவும் சுவையாக இருக்கும்.

Nutrition

Serving: 400g | Calories: 361kcal | Carbohydrates: 6.8g | Protein: 11.9g | Fat: 5.1g | Sodium: 54mg | Potassium: 238mg | Fiber: 8.7g | Vitamin A: 7IU | Vitamin C: 42mg | Calcium: 32.3mg | Iron: 9.3mg

இதனையும் படியுங்கள் : தித்திக்கும் சுவையில் கம்பு அல்வா ஒரு தடவை இப்படி செய்து பாருங்க! வாயில் வைத்தவுடன் கரையும்!

Advertisement
Prem Kumar

Recent Posts

உடம்பில் ரத்தம் ஊறுவதை அதிகரிக்க இந்த ஒரு ஜூஸ் குடித்தாலே போதும்!

இனிப்புச் சுவை கொண்ட இயற்கையான உணவு வகையில் பழவகைகள்  இருக்கிறது. மனிதர்களின் உடல் நலத்திற்கு பல்வேறு நன்மைகளை தரக்கூடிய சத்துக்கள்…

11 நிமிடங்கள் ago

மதிய சமையலுக்கு ஒரு முறை இந்த ஆந்திரா ஸ்டைல் தக்காளி பப்பு செய்து பாருங்கள், பின் இதன் சுவைக்கு அடிமையாகிவிடுவீர்கள்!!

இன்று மதியம் என்ன சமைப்பது என்று யோசித்துக் கொண்டிருக்கிறீர்களா? எப்போதும் ஒரே மாதிரியான சமையல் செய்து போரடித்து விட்டதா? உங்கள்…

4 மணி நேரங்கள் ago

நாவூறும் ஆந்திரா ஸ்டைல் சிக்கன் ஊறுகாய் இனி வீட்டிலேயே சிம்பிளா சூப்பரா செய்யலாம்!

ஊறுகாய் என்பது ஒரு பழங்கால உணவுப் பொருளாகும். இது தலைமுறைகளாக நடைமுறையில் இருக்கும் இந்திய உணவு கலாசாரத்தின் ஒரு பகுதியாகும்.…

4 மணி நேரங்கள் ago

நல்லது நடக்க அக்னி நட்சத்திர காலத்தில் வழிபட வேண்டிய தெய்வம்

அக்னி நட்சத்திரம் என்றாலே நமக்கு ஞாபகத்திற்கு வருவது கூடை காலமும் சுட்டெரிக்கும் வெயிலும் தான். மார்ச் மாதம் தொடங்கி விட்டாலே…

4 மணி நேரங்கள் ago

சுவையான பன்னீர் நாண் இனி ஹோட்டல் சென்று சாப்பிடாமல் வீட்டிலேயே எளிய‌ முறையில் உங்கள் குழந்தைகளுக்கு செய்து கொடுங்கள்!!

நாண் என்பது வேறு ஒன்றும் இல்லை. இதுவும் ஒரு வகையான சப்பாத்தி அல்லது ரொட்டி எனலாம். ஆனால் நாணின் சிறப்பு…

5 மணி நேரங்கள் ago

இன்றைய ராசிபலன் – 09 மே 2024!

மேஷம் உங்கள் ஆரோக்கியத்தில் அக்கறை எடுத்துக் கொள்ளுங்கள். செலவுகளை கட்டுப்படுத்துங்கள். இன்று கடந்த சில நாட்களை விட என்று மிகவும்…

8 மணி நேரங்கள் ago