2 தலைமுறைக்கு தேவையான பணம் வீட்டில் சேர்ந்து கொண்டே இருக்கும் இந்த ஒரு பொருள் வீட்டில் இருந்தால்!

- Advertisement -

பொதுவாக நாம் பணம் சம்பாதிப்பது நமக்காக மட்டுமா என்று கேட்டால் பெரும்பாலான அதற்கு இல்லை என்று தான் கூறுவார்கள். ஒருவன் பணம் சம்பாதிப்பது அவனுக்காக மட்டும் இருக்காது அவன் பட்ட கஷ்டங்களை அவனைத் தொடர்ந்து பின்வரும் அவனது தலைமுறைகளும் படக்கூடாது என்றுதான் சிந்திப்பான். அப்படிப்பட்டவர்கள் உங்களுக்கு பின்னாடி வரும் தலைமுறையினருக்கும் சேர்த்து பணம் சம்பாதிக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் இந்த ஒரு பொருளை மட்டும் வாங்கிக் உங்கள் வீட்டுக்கு கொண்டு வந்து வையுங்கள். அது என்ன பொருள் என்ன செய்ய வேண்டும் என்பதனை பற்றி இந்த ஆன்மீகம் குறித்த தொகுப்பில் நாம் தெளிவாக காணலாம் வாருங்கள்.

-விளம்பரம்-

அபூர்வமான பொருள்

நீங்கள் யாராவது சொல்லி கேள்விப்பட்டிருப்பீர்கள் கனலட்சுமி தேங்காய் அல்லது கொம்பு தேங்காய் என்று சொல்லி இருப்பார்கள். இது ஒரு வகையான தேங்காய் தான் ஆனால் இது கிடைப்பது அபூர்வமான ஒரு விஷயம் இந்த தேங்காய் உங்களிடம் இருந்தால் உங்களைப் போல் அதிர்ஷ்டசாலி யாரும் இருக்க மாட்டார்கள். அதனால் நாட்டு மருந்து கடைகளில் நீங்கள் இந்த தேங்காய் வேண்டும் என்று சொல்லி வைத்தால் அவர்கள் கிடைக்கும் போது வாங்கி தருவார்கள். இந்த தேங்காய் நம் வீட்டில் இருப்பது மிக மிக நல்லது இந்த தேங்காயை நம் வீட்டில் வைப்பதற்கு முன்பு முறைப்படி சில பூஜைகளை செய்ய வேண்டும் அது என்னவென்று பார்க்கலாம் வாருங்கள்.

- Advertisement -

காலை பூஜை

இந்த தேங்காயை உங்கள் வீட்டிற்கு கொண்டு வரும் நாள் பௌர்ணமி நாளாக பார்த்து காலையில் வாங்கி வந்து காலையில் இந்த பூஜை செய்ய வேண்டும். அப்படி வீட்டுக்கு கொண்டு வந்த தேங்காயை மஞ்சள் கலந்த தண்ணீரில் வைத்து சுத்தமாக கழுவி எடுத்துக் கொள்ளுங்கள். அதன் பிறகு ஒரு பெரிய தாம்பூல தட்டில் சிறிதளவு பச்சரிசியை நிரப்பி அதன் மேல் இந்த தேங்காயை நிற்க வைத்துக் கொள்ளுங்கள். அதன் பின் இந்த தேங்காயிற்கு மஞ்சள் குங்கும பொட்டு வைத்து ஒரு பூவும் சூடி கொள்ளுங்கள். பின் உங்கள் வீட்டு பூஜை அறையில் வைத்துக் கொள்ளுங்கள். பின் நீங்கள் வழக்கம் போல் பூஜை செய்வது போல் தீபம் ஏற்றி தீபாராதனைகளை காட்டி தேங்காய்க்கும் சேர்த்து தீபாராதனை காட்டி பூஜையை நிறைவு செய்து கொள்ளுங்கள்.

மாலை பூஜை

இப்படி காலை நேர பூஜை முடிந்தவுடன் தேங்காயை பூஜை அறையில் வைத்துவிட்டு மாலை நேரம் 6 மணிக்கு மேல் சந்திரன் உதயமாகும் சமயத்தில் பூஜை அறையில் உள்ள தீபங்களை ஏற்றி நீங்கள் தேங்காய் வைத்திருக்கும் தாம்பூல தட்டுடன் தூக்கி சென்று சந்திரனிடம் காண்பிக்க வேண்டும். அப்படி நீங்கள் சந்திரனிடம் தேங்காய் காண்பிக்கும் போது உங்கள் குலதெய்வத்தை மனதார நினைத்து என் குடும்ப தலைமுறை தலைமுறையாக செல்வ செழிப்புடன் வாழ வேண்டும் என மனம் உருகி வேண்டிக் கொள்ளுங்கள்.

சிவப்பு துணி

அதன் பின்பு இந்த பூஜைகள் எல்லாம் முடிந்தவுடன் நாம் வைத்திருக்கும் தேங்காயை ஒரு சிவப்பு நிற துணியில் சுற்றி அல்லது சிவப்பு நிறத்தில் பை போன்ற ஒரு அமைப்பு செய்து அதன் உள் தேங்காய் வைத்து முடிந்து கொள்ளுங்கள். பின் இந்த தேங்காயை வீட்டு வாசலில் நிலைப்படி என் உள் பக்கமாக கட்டி தொங்க விடுங்கள். இப்படி நீங்கள் இந்த தேங்காயை தொங்கவிடும் பொழுது உங்களுக்கு அடுத்து வரும் சந்ததியினருக்கும் கஷ்ட நஷ்டங்கள் எதுவும் இல்லாமல் செல்வ செழிப்போடு வாழ்வார்கள். உங்கள் வருமானத்திற்கும் குறைவில்லாமல் இருக்கும்.

-விளம்பரம்-

தீபாராதனை

இப்படி இது தேங்காய் கட்டி முடித்துவிட்டு பின் நீங்கள் வழக்கம் போல் செவ்வாய் வெள்ளிக்கிழமைகளில் வீட்டில் பூஜை அறையில் பூஜை செய்யும் போது இந்த தேங்காய்க்கும் சேர்த்து தீபாராதனை காட்டி கொள்ளுங்கள். பின்பு ஆறு மாதத்திற்கு ஒரு முறை நாம் பட்டிருக்கும் சிவப்பு துணியை மற்றும் மாற்றிக் கொண்டே வாருங்கள். இதனால் உங்கள் தெடார்ந்து வரும் தலைமுறையினருக்கும் சேர்த்து நீங்கள் சொத்து சேர்த்து விடுவீர்கள். நம்பிக்கையோடு இதை செய்து வாருங்கள். நல்ல பலனே உங்களுக்கு கிடைக்கும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here