- Prep
- 10 min
- Cook
- 10 min
- Total
- 22 min
- Serves
- 4
- Cuisine
- Indian, TAMIL
- Course
- Breakfast, LUNCH
கணவாய் மீன் கிரேவி இது போன்று ஒரு முறை செய்து சுட சுட சாதத்துடன் சேர்த்து சாப்பிட்டு பாருங்க அட்டகாசமான சுவையில் இருக்கும். அதுமட்டும் அல்லாமல் எல்லோரும் விரும்பி சாப்பிடுவாங்க.
எப்படி இந்த கிரேவி செய்வதென்று கீழே கொடுக்கப்பட்டுள்ள செய்முறை விளக்கங்களை நன்கு படித்து பார்த்து நீங்களும் ட்ரை பண்ணி பாருங்க.
Ingredients
Method
முதலில் கடாயில் எண்ணெய் ஊற்றி சோம்பு, மற்றும் கருவேப்பிலை சேர்த்து பொரிந்ததும், அத்துடன் பொடியாக நறுக்கிய பூண்டு சேர்த்து வதக்கவும்.
பிறகு அதில் பொடியாக நறுக்கிய வெங்காயம், மற்றும் தக்காளி சேர்த்து வதக்கவும்.
தக்காளி நன்கு வதங்கியதும் தூள் வகைகளை சேர்த்து ¼ கப் தண்ணீர் சேர்த்து நன்கு கொதிக்க விடவும்.
தண்ணீர் கொதித்தவுடன் சுத்தம் செய்த கணவாய் துண்டுகளை சேர்த்து 2 நிமிடம் வேக விட்டு இறக்கவும்.






