- Prep
- 10 min
- Cook
- 15 min
- Total
- 25 min
- Serves
- 4
- Cuisine
- Indian, TAMIL
- Course
- chutney
நம் வீட்டில் காலை உணவு அல்லது இரவு உணவாக இட்லி, தோசை, சப்பாத்தி போன்ற உணவுகள் செய்யும் பொழுது. ஒரு சுழற்சி முறையில் தேங்காய் சட்னி, தக்காளி சட்னி என மாற்றி மாற்றி வைத்து இந்த இரு சட்னிகளை மட்டுமே சாப்பிட்டுக் கொண்டிருக்கிறோம். உங்களுக்கு புதியதாக ஏதேனும் சட்னி வைக்க வேண்டும் என விரும்புகிறீர்கள் என்றால் கண்டிப்பாக இந்த மதுரை ஸ்டைல் கார சட்னியை செய்து பாருங்கள்.
இதையும் படியுங்கள் : அதீத சுவையில் இருக்கும் கொத்த மல்லி நிலக்கடலை சட்னி செய்வது எப்படி ?
கண்டிப்பாக இந்த மதுரை கார சட்னி உங்களுக்கு மிகவும் பிடிக்கும் உங்கள் வீட்டில் உள்ள சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைத்தையும் மிகவும் பிடித்த சட்னியாக மாறி போகும். ஆகையால் இன்று இந்த மதுரை கார சட்னி எப்படி செய்வது, தேவையான பொருட்கள், செய்முறைகள் என அனைத்தையும் இந்த சமையல் தொகுப்பில் நாம் பார்க்கலாம்.
English Overview: kara chutney is one of the most important dishes in india. puli kara chutney recipe or kara chutney seivathu eppadi or kara chutney in Tamil are a few important terms to describe this recipe in the tamil language.
Ingredients
Method
முதலில் கடாயை அடுப்பில் வைத்து சிறிதளவு எண்ணெய் ஊற்றிக் கொள்ளுங்கள் பின் எண்ணெய் நன்றாக காய்ந்ததும் கடுகு, கடலைப்பருப்பு மற்றும் உளுந்தம் பருப்பு சேர்த்து நன்றாக வதக்கி கொள்ளுங்கள்.
அதன் பின்பு ஒரு சிறிய அளவிலான பெருங்காய கட்டியை சேர்த்து வர மிளகாய் மற்றும காஷ்மீர் மிளகாய் சேர்த்து நநன்றாக சிவந்து வரும் வரை வதக்கி கொள்ளுங்கள்.
பின்பு தோலுரித்து வைத்திருக்கும் சின்ன வெங்காயத்தையும் கடாயில் சேர்த்து. அதன்பின் சிறிது கருவேப்பிலை சேர்த்து நன்றாக வதக்கிக் கொள்ளவும். வெங்காயம் நன்றாக வதங்கி கண்ணாடி பதத்திற்கு வரும்வரை வதக்கவும்.
வெங்காயம் நன்றாக வதக்கியதும் அதன் பின்பு கடைசியில் கடாயில் ஒரு கைப்பிடி கொத்தமல்லி இலையை சேர்த்து வதக்கி கொள்ளவும். கொத்தமல்லி இலையை கடைசியாக சேர்த்துக் கொள்ளுங்கள்.
நாம் சேர்த்த அனைத்து பொருட்களும் நன்றாக வதங்கியதும் காடயை இறக்கி வைத்து விடுங்கள். பின் வதக்கிய பொருட்களை மிக்ஸி ஜாரில் சிறிது தண்ணீர் ஊற்றி மைப்போல அரைத்துக் கொள்ளுங்கள்.
பின்பு அரைத்த பொருட்களை காடாயில் ஊற்றி தேவையான அளவு உப்பு சேர்த்து வதக்கி கொள்ளவும். மற்றொரு கடாயை அடுப்பில் வைத்து சிறிது எண்ணெய் ஊற்றி கொள்ளவும்.
பின் எண்ணெய் காய்ந்தவுடன் கடுகு, உளுந்தம் பருப்பு, சிறிது கருவேப்பிலை, வர மிளகாய் சேர்த்து நன்கு தாளித்து அந்த தாளிப்பையும் சட்னியுடன் சேர்த்து ஒரு நிமிடம் நன்கு வதக்கிக் கொள்ளுங்கள் அவ்வளவு தான் மதுரை ஸ்டைலில் காரச் சட்னி இனிதே தயாராகிவிட்டது.






