- Prep
- 10 min
- Cook
- 10 min
- Total
- 20 min
- Serves
- 4
- Cuisine
- Indian, TAMIL
- Course
- Kulambu
முட்டை குழம்பு ஒரு சுவையான மற்றும் சுலபமாக வைக்கப்படும் குழம்பு வகை. இது இட்லி, தோசை, சப்பாத்தி, சாதம், ஆகியவற்றுடன் சேர்த்து சாப்பிட்டால் மிகவும் சுவையாக இருக்கும். முட்டை குழம்பு சுவையுடன் கூடிய ஆரோக்கியமான உணவு வகை.
இதையும் படியுங்கள் : நாவில் எச்சி ஊறும் முட்டை மஞ்சூரியன் செய்வது எப்படி ?
அந்த வகையில் காரைக்குடி ஸ்டைலில் முட்டை குழம்பு எப்படி செய்யலாம் என்பதை கீழே கொடுக்கப்பட்டுள்ள தேவையான பொருட்கள், செய்முறை விளக்கங்களை என்ன என்பதை படித்து பார்த்து நீங்களும் ட்ரை பண்ணி பாருங்கள் அட்டகாசமான சுவையில் இருக்கும்.
Ingredients
Method
முதலில் முட்டையை நீரில் போட்டு நன்கு வேக வைத்து இறக்கி, முட்டை ஓட்டை நீக்கிவிட்டு தனியாக வைத்துக் கொள்ளவும்.
பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கடுகு, உளுத்தம் பருப்பு, சேர்த்து தாளிக்க வேண்டும்.
பின்பு அதில் கறிவேப்பிலை, வெங்காயம், சேர்த்து வதக்கவும், வதங்கிய பிறகு இஞ்சி பூண்டு பேஸ்ட், சேர்த்து நன்கு மணம் வரும் வரை வதக்க வேண்டும்.
பிறகு அதில் தக்காளியை சேர்த்து மென்மையாகும் வரை வதக்கி, மிளகாய் தூள், மல்லி தூள், சிக்கன் தூள், மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து நன்கு பச்சை வாசனை போக கிளறி விட வேண்டும்.
பின் அதில் ஒரு கப் தண்ணீர் ஊற்றி, தேவையான அளவு உப்பு சேர்த்து, பச்சை வாசனை போக நன்கு கொதிக்க விட வேண்டும்.
கொதித்த பின் இறுதியில் வேக வைத்த முட்டைகளை சேர்த்து சிறிது நேரம் கொதிக்க விட்டு இறக்கினால் சுவையான காரைக்குடி முட்டை குழம்பு தயார்.






