நம்முடைய வீட்டில் என்ன தான் பல வகையான பரிகாரம் மற்றும் மந்திரங்களை செய்தாலும் கூட சம்பாதிக்கும் பணம் முழுவதும் வீட்டில் தங்காமல் செலவாகிக்கொண்டே போகிறது என்பது ஒரு பெரிய பிரச்சனையாக உள்ளது. அந்த வகையில் பார்த்தால் சம்பாதிக்கும் பணம் அனைத்தும் செலவாகி கொண்டே போனால் கஷ்டமாக தான் இருக்கும். இவ்வாறு இருந்தால் வீட்டில் அதிர்ஷ்டம் என்பது நிலைக்காமல் போய்விடும் நிலைமை தான் ஏற்படும். இப்படிப்பட்ட சூழ்நிலையில் இருக்கும் அனைவருக்கும் கார்த்திகை திருநாள் ஒரு சிறப்பான நாளாக வரப்போகிறது. பொதுவாகவே அனைத்து மாதங்களும் ஒவ்வொரு சிறப்புகளை கொண்டுள்ளது. அதிலும் ரொம்பவே சிறப்பு என்றால் அது கார்த்திகை மாதம் தான். ஏனெனில் இம்மாதத்தில் தான் பல்வேறு விரோதங்கள் அனுசரிக்கப்படுகிறது. கையில் காசு இருந்தாலும் பையில் தங்கலையே என்று இன்றைக்கு பலரும் கவலைப்படுகின்றனர். வருமானத்தை விட செலவுகள்தான் அதிகம் இருக்கிறது. அந்த வகையில் வீட்டில் செல்வம் நிலைத்திருக்க வருமானம் பெருக கார்த்திகை திருநாளில் எற்ற வேண்டிய முக்கிய தீப முறைகளைப் பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.
கார்த்திகை மாதம்
கார்த்திகை மாதம் மிகவும் மங்களகரமான மாதமாகும். இந்த மாதம் சிவன், முருகன் மற்றும் விஷ்ணுவுக்கு மிகவும் பிடித்தமான மாதம். கார்த்திகை சோமவாரம் மற்றும் கார்த்திகை தீபம் ஆகியவை கார்த்திகை மாதத்தில் முக்கியமான நாட்கள். கார்த்திகை தீபம் என்பது தெற்கு பகுதிகளில் கொண்டாடப்படும் தீபங்கள் திருவிழாவின் அடையாளமாகும். இது கார்த்திகை மாதம் பௌர்ணமி தினத்தில் கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு நவம்பர் 26, 2023 அன்று கார்த்திகை திருநாள் கொண்டாடப்படுகிறது.

பிரம்ம முகூர்த்த பூஜை
தினமும் அதிகாலை 3 மணி துவங்கி 5.30 மணி வரையிலான காலத்தை பிரம்ம முகூர்த்த வேளை என்கிறோம். இந்த நேரம் அனைத்து விதமான சுபகாரியங்களும் செய்வதற்கு உகந்த காலமாக சொல்லப்படுகிறது. இந்த நேரத்தில் பூஜை அறையை சுத்தம் செய்து, வாசனை மலர்களால் அலங்காரம் செய்து, விளக்கு ஏற்றி வழிபட வேண்டும். அதுமட்டுமல்லாமல் நிலைவாசலில் இரண்டு தீபங்கள் ஏற்ற வேண்டும். இதனை கார்த்திகை மாதம் முழுவதும் பின்பற்றி வரலாம்.
கல் உப்பு தீபம்
முதலில் கல் உப்பு தீபம். பெரிய அகல் விளக்கில் உப்பு நிரப்பி அதன்மேல் ஒரு சிறிய அகல் விளக்கை வைத்து நெய் ஊற்றி பஞ்சு திரி போட்டு விளக்கு ஏற்ற வேண்டும். கார்த்திகை மாதம் இந்த கல் உப்பு தீபம் ஏற்றி வந்தால் பாவங்கள் தீரும். மகாலட்சுமியின் அருள் கிடைக்கும். சகல ஐஸ்வரியங்களும் பெருக கார்த்திகை தீப திருநாளன்று உப்பு தீபம் ஏற்றி வழிபடுவது வழக்கம்.

நெல்லிக்காய் தீபம்
வீட்டில் நெல்லிக்காய் தீபம் ஏற்றுவது மகாலட்சுமியை அழைப்பதன் வெளிப்பாடு. அளவில் பெரியதாக இருக்கும் நெல்லிக்காயை வாங்கி விதையை நீக்கி விட்டு பள்ளமாக தோண்டிக் கொள்ளுங்கள். அதில் நெய் ஊற்றி பஞ்சு திரி போட்டு விளக்கு ஏற்றிக் கொள்ளுங்கள். இந்த தீபத்தால் வீட்டில் இருக்கு எதிர்மறை ஆற்றலை மறைந்து நல்லவை நடக்கும். கல் உப்பு தீபம் போலவே நெல்லிக்காய் விளக்கு ஏற்றுவதும் நன்மை என சொல்லப்படுகிறது. நெல்லிக்காயில் விளக்கு ஏற்றுவதால் நம் துன்பங்கள் மறைந்து இழந்ததை மீண்டும் பெறலாம்.
பஞ்சகவ்விய விளக்கு
பஞ்சகவ்ய விளக்கானது பால், தயிர், நெய், கோமியம், சாணம், இவைகளால் மட்டும் செய்யப்பட்டது. உங்களால் முடிந்தால் இந்தப் பொருட்களையெல்லாம் வீட்டில் வாங்கி வைத்து, பிசைந்து விளக்கு வடிவில் தயாரித்து, காயவைத்தும் ஏற்றி வைத்துக் கொள்ளலாம். அல்லது கடையில் வாங்கியும் விளக்கு ஏற்றலாம். இந்த விளக்கையும் நெய் ஊற்றி திரி போட்டு தான் ஏற்ற வேண்டும். தீபம் மட்டும் எரிந்த பின்பு அனைத்து விடக்கூடாது, தீபத்தோடு விளக்கும் எரிய வேண்டும். எரிந்த சாம்பலை தினம்தோறும் நெற்றியில் இட்டுக் கொள்வது நல்ல பலனைத் தரும்.
இதனையும் படியுங்கள் : வீட்டு வாசலில் இதை மட்டும் வைத்தால் பணம் அதிக அளவு பணம் சேருமாம் ட்ரை பண்ணி பாருங்க!


