- Prep
- 10 min
- Cook
- 15 min
- Total
- 25 min
- Serves
- 4
- Cuisine
- Indian, TAMIL
- Course
- Side Dish
பொதுவாக நாம் அனைவருக்குமே அசைவ உணவு என்றால் மிகவும் பிடிக்கும். அப்படி அசைவ உணவு மிகவும் பிடித்த நபர்களுக்கு மிக மிக பிடித்து விரும்பி சாப்பிடுவது சிக்கன் தான். சிக்கன் பிரியர்கள் அனைவரின் உணவு பட்டியலிலும் இந்த சிக்கன் இடம் பெற்றிருக்கும். அப்படி உங்கள் வீட்டில் அடிக்கடி சிக்கன் சமைப்பீர்களா? அப்படி சிக்கன் பிரியர்கள் அனைவருக்கும் பிடித்த சிக்கனை ஒரே முறையிலேயே செய்து சுவைத்து சலித்து போய்விட்டதா. அப்படியானால் இந்த பதிவு உங்களுக்கு தான்.
இன்றைய பதிவில் மிகவும் சுவையான கறிவேப்பிலை சிக்கன் செய்வது எப்படி என்பதை பற்றி அறிந்து கொள்வோம். இந்த கறிவேப்பிலை சிக்கன் செய்வதற்கு மிகவும் சுலபமாக இருக்கும். மேலும் இது ரசம் சாதம் சாதத்துடன் சேர்த்து சாப்பிட அட்டகாசமாக இருக்கும். சிக்கன் 65, சிக்கன் மசாலா, சிக்கன் கிரேவி என செய்ததையே திரும்பத் திரும்ப செய்து போர் அடிக்காமல் இப்படி வித்தியாசமாக கறிவேப்பிலை சிக்கன் செய்து கொடுங்கள். நாவுக்கும் புது சுவையாக இருக்கும்.
குறிப்பாக இந்த சிக்கன் ரெசிபி பேச்சுலர்கள் செய்யும் வகையில் மிகவும் ஈஸியான செய்முறையைக் கொண்டிருக்கும். இதை வீட்டில் நீங்கள் முயற்சித்தால், நல்ல பாராட்டைப் பெறலாம். சுவையான இந்த கறிவேப்பிலை சிக்கனை நீங்கள் செய்து கொடுக்கும் போது உங்கள் வீட்டில் இருக்கிற எல்லாரும் உங்களை பாராட்டுவார்கள். இப்போது இந்த சிக்கன் வகைகளில் ஒன்றான கறிவேப்பிலை சிக்கன் எப்படி செய்வதென்று பார்ப்போம்.
இதனையும் படியுங்கள் : சிக்கன் டிக்கா ரோல் இந்த மாதிரி ஒரு தடவை செஞ்சு பாருங்க!!
Ingredients
Method
முதலில் ஒரு கடாயை அடுப்பில் வைத்து அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் அரைக்க கொடுத்துள்ள பொருட்களை சேர்த்து நன்கு வதக்கி மிக்ஸியில் சேர்த்து சிறிதளவு தண்ணீர் விட்டு நன்கு அரைத்து எடுத்துக் கொள்ளவும்.
பின் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் சிக்கன் துண்டுகளை சேர்த்து ஐந்து நிமிடங்கள் மூடி வைத்து வேக விடவும்.
பின் அதில் அரைத்து வைத்துள்ள கறிவேப்பிலை விழுதை சேர்த்து அதனுடன் உப்பு மற்றும் தேவையான அளவு தண்ணீர் விட்டு மூடி வைத்து வேக விடவும்.
சிக்கன் நன்கு வெந்து எண்ணெய் பிரிந்து வந்ததும் கரம் மசாலா, பெரிதாக வெட்டிய வெங்காய துண்டுகள் சேர்த்து இரண்டு நிமிடங்கள் கழித்து இறக்கவும். அவ்வளவுதான் சுவையான கறிவேப்பிலை சிக்கன் தயார்.






