Home ஆன்மிகம் ஆன்மிக கதைகள் கஷ்டங்கள் தீர்ந்து செல்வம் பெருக குலதெய்வ வழிபாடு!

கஷ்டங்கள் தீர்ந்து செல்வம் பெருக குலதெய்வ வழிபாடு!

ஒருவருடைய வாழ்க்கையில் அவர்கள் அடைகின்ற நன்மைக்கும் தீமைக்கும் அவர்களுடைய கர்ம வினைகள் தான் காரணம் அந்த கர்ம வினைகளை தீர்க்கக் கூடிய ஒரு சக்தி குல தெய்வத்திற்கு தான் உள்ளது என்னதான் நாம் அனைத்து தெய்வங்களையும் வழிபட்டாலும் கூட நம் வீட்டில் உள்ள கஷ்டங்களை தீர்த்து நம்மை நல்ல நிலையில் வைப்பது குலதெய்வ வழிபாடுதான். குலதெய்வத்தை வழிபட்டாலும் வாழ்க்கையில் நன்றாக இருக்க முடியும் என்று அனைவரும் கூற கேட்டிருப்போம்.

-விளம்பரம்-

குலதெய்வம்

எத்தனை தெய்வங்கள் இருந்தாலும் குலதெய்வத்திற்கு இந்த தெய்வத்தாலும் ஈடாக முடியாது அதற்கு காரணம் நாம் மற்ற தெய்வங்களை வழிபடுவதற்கான பலன்களும் குலதெய்வத்துடைய அருளால் மட்டுமே கிடைக்கும் குலதெய்வத்தினுடைய அருள் நமக்கு பரிபூரணமாக இருந்தால் மட்டுமே நமக்கான நன்மைகளும் நடக்கும் குலதெய்வத்தின் அருளை பெற்றால் மற்ற தெய்வங்களுடைய அறிவும் நமக்கு முழுமையாக கிடைத்த விடும் அப்படிப்பட்ட குல தெய்வத்தை மனதார வழிபாடு செய்ய வேண்டும்.

குலதெய்வ வழிபாடு

வருடத்திற்கு ஒரு முறையாவது குலதெய்வ கோவிலுக்கு சென்ற வழிப்படுவது மிகவும் சிறப்பானது பெண் தெய்வமாக இருந்தால் பௌர்ணமியில் வழிபட வேண்டும் ஆன் தீபமாக இருந்தால் அமாவாசை தினங்களில் கோவிலுக்கு சென்று வழிபட முடியவில்லை என்றாலும் வீட்டிலேயே கூட குலதெய்வத்தை வழிபட வேண்டும். குலதெய்வ வழிபாட்டை மிகவும் முறையாக செய்ய வேண்டும். அந்த குலதெய்வத்திற்கு உரிய வழிபாட்டு முறையை தெரிந்து கொண்டு அதற்கு ஏற்றவாறு வழிபாடு செய்தால் குலதெய்வத்துடைய அருளை பெற முடியும்

குலதெய்வ கோவில் மண்

குலதெய்வ கோவிலுக்கு செல்லும்போது அங்குள்ள மண்ணை ஒரு கைப்பிடி அளவு வீட்டிற்கு எடுத்து வர வேண்டும். வீட்டிலிருந்தே ஒரு மஞ்சள் துணி எடுத்துக்கொண்டு போய் அதில் அந்த மண்ணை எடுத்து மூட்டையாக கட்டி வீட்டிற்கு கொண்டு வந்தால் குலதெய்வத்தை நம் வீட்டிற்குள் கொண்டு வந்ததாக அர்த்தம்.

குலதெய்வ கோவில் மண்ணின் சிறப்புகள்

இந்த மண்ணை நாம் நம் வீட்டினுடைய நிலை வாசலில் கட்டி வைத்தால் வீட்டிற்குள் நேர்மறை ஆற்றல்கள் மட்டுமே நுழையும் கெட்ட சக்திகள் ஒருபோதும் நுழையாது. இந்த மண்ணை மஞ்சள் துணியில் முட்டையாக கட்டி பணம் வைக்கும் இடத்தில் வைத்தால் வீட்டில் செல்வ வளம் அதிகரித்துக் கொண்டே இருக்கும். குலதெய்வ கோவிலில் இருந்து மண் எடுத்து வர முடியாத சூழ்நிலையில் அங்குள்ள குங்குமம் விபூதியை எடுத்து வந்து மூட்டையாக கட்டி பணம் நகை வைத்திருக்கும் இடத்தில் வைக்கலாம் ஒரு சிலருக்கு குலதெய்வம் யார் என்றே தெரியாமல் இருக்கும் அப்படிப்பட்டவர்கள் இஷ்ட தெய்வத்தை குலதெய்வமாக நினைத்து வழிபட்டு வரலாம். இந்த எளிமையான குலதெய்வ வழிபாட்டை பின்பற்றினால் குலதெய்வத்தினுடைய முழுமையான பரிபூரணமான அருளும் கிடைத்து கஷ்டங்கள் நீங்கி செல்வ செழிப்போடு வாழலாம்.

-விளம்பரம்-

இதனையும் படியுங்கள் : சொந்த வீடு கனவை நினைவாக்கும் சிறுவாபுரி முருகர் திருப்புகழ்