இரவு டிபனுக்கு ருசியான கசூரி மேத்தி சப்பாத்தி ஒரு முனை இப்படி செஞ்சி பாருங்கள்! 2 சப்பாத்தி அதிகமாவே சாப்பிடுவாங்க!

- Advertisement -

தினமும் செய்யும் இட்லி, தோசை, பொங்கல், பூரி போன்ற உணவுகளை சாப்பிட்டு அலுத்து விட்டதா?அப்போ இந்த பதிவு உங்களுக்காக தான். நாம் தினமும் சாப்பிடும் உணவுகளை சற்று வித்தியாசமாக செய்து கொடுத்தாலே போதும். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள். அந்த வகையில் இன்று நாம் வழக்கமாக செய்யும் சப்பாத்தியை கொஞ்சம் வித்தியாசமாக சிறிது கசூரி மேத்தி சேர்த்து செய்ய உள்ளோம். இந்த சப்பாத்தி சிறு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் வகையில் இதன் சுவை அருமையாகவும், அசத்தலாகவும் இருக்கும். சப்பாத்தி, இன்று பலராலும் விரும்பப்படும் உணவுகளில் ஒன்றாக உள்ளது. சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பும் இந்த அற்புத உணவில் பல ஆரோக்கிய நன்மைகள் உள்ளடங்கியுள்ளன.

-விளம்பரம்-

சப்பாத்தி என்று எடுத்துக் கொண்டால் நமக்கு முதலில் சிந்தனைக்கு வருவது உடல் இடையே குறைப்பதற்கு சப்பாத்தி சிறந்த உணவாக இருக்கும் என்ற அனைவரும் கூறுவார்கள். மேலும் சப்பாத்தியை சர்க்கரை நோய் உள்ளவர்கள் சாப்பிட்டு வந்தால் ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு கட்டுப்பாட்டில் வைக்க முடியும் என மருத்துவர்கள் பரிந்துரைத்து வருகின்றனர். வட இந்தியாவில் உள்ள மக்கள் சாப்பிடும் முக்கிய உணவுப் பொருளாக இருப்பது இந்த சப்பாத்தி தான். மேலும், உடல் நலன் சார்ந்த பல பிரச்னைகளின் போதும் பரிந்துரைக்கப்படும் ஒரு உணவாகவும் இவை உள்ளன. நீங்கள் வெளியூர்களுக்கு செல்வதாக இருந்தால், தக்காளி தொக்கையும் இந்த சப்பாத்தியும் செய்து கூட எடுத்துக்கொண்டு போகலாம். இன்று மென்மையான கசூரி மேத்தி சப்பாத்தி எப்படி செய்வது என்ற சமையல் குறிப்பை இந்த தொகுப்பில் நாம் காணலாம்.

- Advertisement -
Print
No ratings yet

கசூரி மேத்தி சப்பாத்தி | Kasuri Methi Chapathi Recipe In Tamil

தினமும் செய்யும் இட்லி,தோசை, பொங்கல், பூரி போன்ற உணவுகளை சாப்பிட்டு அலுத்து விட்டதா?அப்போ இந்த பதிவு உங்களுக்காக தான். நாம் தினமும் சாப்பிடும் உணவுகளை சற்று வித்தியாசமாக செய்து கொடுத்தாலே போதும். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள். அந்த வகையில் இன்று நாம் வழக்கமாக செய்யும் சப்பாத்தியை கொஞ்சம் வித்தியாசமாக சிறிது கசூரி மேத்தி சேர்த்து செய்ய உள்ளோம். இந்த சப்பாத்தி சிறு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் வகையில் இதன் சுவை அருமையாகவும், அசத்தலாகவும் இருக்கும். சப்பாத்தி, இன்று பலராலும் விரும்பப்படும் உணவுகளில் ஒன்றாக உள்ளது. சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பும் இந்த அற்புத உணவில் பல ஆரோக்கிய நன்மைகள் உள்ளடங்கியுள்ளன.
Prep Time10 minutes
Active Time10 minutes
Total Time20 minutes
Course: Breakfast, dinner
Cuisine: Indian
Keyword: Kasuri Methi Chapathi
Yield: 3 People
Calories: 52.2kcal

Equipment

  • 1 பவுள்
  • 1 தோசை கல்

தேவையான பொருட்கள்

  • 1 கப் கோதுமை மாவு
  • 1/4 கப் கசூரி மேத்தி
  • 2 டீஸ்பூன் எண்ணெய்
  • உப்பு தேவையான அளவு
  • 4 டீஸ்பூன் நெய்

செய்முறை

  • முதலில் ஒரு பவுளில் கோதுமை மாவு, உப்பு மற்றும் கசூரி மேத்தியை கொஞ்சம் நசுக்கி சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.
  • பின் கொஞ்சம் கொஞ்சமாக தண்ணீர் விட்டு நன்கு பிசைந்து கொள்ளவும். பிறகு சிறிது எண்ணெய் விட்டு நன்கு பிசைந்து கொள்ளவும்.
  • பின் பிசைந்த மாவின் மேல் கொஞ்சமாக எண்ணெய் தடவி, பத்து நிமிடங்கள் வரை மூடி வைக்கவும்.
  • அதன்பிறகு சிறு‌ சிறு உருண்டைகளாக உருட்டி வைத்துக் கொள்ளவும். சப்பாத்தி பலகையில் உருட்டிய மாவை வைத்து மெல்லிசாக தேய்த்து எடுத்துக் கொள்ளவும்.
  • ஒரு தோசைக் கல்லை அடுப்பில் வைத்து காய்ந்ததும் தேய்ந்து வைத்த‌ சப்பாத்தியை ஒவ்வொன்றாக போட்டு சிறிதளவு நெய் விட்டு வேகவைத்து எடுக்கவும்.
  • அவ்வளவுதான் மிகவும் சுவையான, சத்தான, மிருதுவான கசூரி மேத்தி சப்பாத்தி தயார். நம் வீட்டில் வெந்தய கீரை இல்லாத போது இதே போல் செய்யலாம். இதற்கு உருளைக்கிழங்கு பட்டாணி மசாலா செய்து சாப்பிடலாம்.

Nutrition

Serving: 400g | Calories: 52.2kcal | Carbohydrates: 1.8g | Protein: 3.1g | Fat: 2.8g | Saturated Fat: 1.3g | Sodium: 19mg | Potassium: 78mg | Fiber: 7.2g | Vitamin A: 5.9IU | Calcium: 16mg | Iron: 36mg

இதனையும் படியுங்கள் : இரவு டிபனுக்கு ருசியான சப்பாத்தி நூடுல்ஸ் ஒரு முறை இப்படி செய்து பாருங்க! கொஞ்சம் கூட மிச்சம் வைக்காம சாப்பிடுவார்கள்!