- Prep
- 10 min
- Cook
- 10 min
- Total
- 21 min
- Serves
- 4
- Cuisine
- Indian, TAMIL
- Course
- Breakfast, LUNCH
சுட சுட சாதத்துடன் சேர்த்து சாப்பிட கத்திரிக்காய் மாங்காய் தொக்கு இது போன்று ஒரு முறை செய்து சாப்பிட்டு பாருங்க அட்டகாசமான சுவையில் இருக்கும்.
எப்படி இந்த தொக்கு செய்வதென்று கீழே கொடுக்கப்பட்டுள்ள செய்முறை விளக்கங்களை நன்கு படித்து பார்த்து நீங்களும் ட்ரை பண்ணி பாருங்க.
Ingredients
Method
முதலில் கத்திரிக்காய், வெங்காயம் இரண்டையும் நீளமாக நறுக்கவும். மிளகாயை கீறி வைக்கவும். மாங்காயை தோல் நீக்கி துருவி வைக்கவும்.
பிறகு அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, உளுந்து, கறிவேப்பிலை போட்டு தாளித்து அதனுடன் நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய் போட்டு வதக்கவும்.(வெங்காயம் சிவக்க கூடாது)
அதனுடன் கத்திரிக்காய் மற்றும் உப்பு போட்டு சிறு தீயில் நன்கு வதக்கவும்.
சிறிது தண்ணீர் தெளித்து மூடி வேக விடவும். கத்திரிக்காய் வெந்ததும் துருவிய மாங்காவை சேர்த்து கிளறி விட்டு மாங்காய் வெந்ததும் இறக்கி விடவும்.
மல்லி தழை தூவி பரிமாறவும்.






