- Prep
- 20 min
- Cook
- 15 min
- Total
- 35 min
- Serves
- 4
- Cuisine
- Indian, TAMIL
- Course
- Breakfast, dinner, LUNCH
சுவையான சைவ உணவுகள் இருக்கும் மத்தியில் சைவத்தில் ஒரு அசைவமான கத்திரிக்காய் இதனை வைத்து செய்யக்கூடிய அனைத்து உணவுகளும் மிகவும் சுவையாக இருக்கும் இதனை சாப்பிடுவதற்கே ஒரு தனி கூட்டம் இருக்கிறது கத்திரிக்காய் என்றாலே மக்களுக்கு அலாதி பிரியம் உடையவர்கள் பலர் உள்ளனர். அதிலும் சிதம்பரத்தில் செய்யக்கூடிய கத்திரிக்காய் கொத்து இருக்கே அமோகம் ஈசியாக செய்யக்கூடிய குழந்தைகள் முதல் வீட்டில் இருக்கும் பெரிவர்கள்
இதையும் படியுங்கள் : கல்யாண வீட்டு கத்திரிக்காய் மொச்சை கூட்டு இப்படி செஞ்சி பாருங்க!
வரை அனைவருக்கும் விருப்பி சாப்பிடும் படியாக இந்த சுவையான கத்திரிக்காய் கொத்து செய்து சாப்பிட்டு பாருங்கள் அட்டகாசமான சுவையில் இருக்கும் இதை செய்வதற்கும் சுலபம் சாப்பிடுவதற்கு சலிக்கவே சலிக்காது எத்தனை தடவை செய்து கொடுத்தாலும் அசராமல் சாப்பிடுவார்கள். அதனால் இன்று இந்த கத்திரிக்காய் கொத்து எப்படி செய்வது, தேவையான பொருட்கள், செய்முறைகள் என அனைத்தையும் இந்த சமையல் குறித்த தொகுப்பில் நாம் காணலாம் வாருங்கள்.
Ingredients
Method
சிதம்பரம் கத்திரிக்காய் கொத்து செய்ய முதலில் கடாயில் எண்ணெய் உற்றாமல் கொத்தமல்லி, கடலைப்பருப்பு, உளுத்தம் பருப்பு, சீரகம், மிளகு, வெந்தயம், மிளகாய் வற்றல் ஆகியவற்றை வறுத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.
கலவை ஆரியவுடன் மிக்ஸி ஜாரில் நன்றாக அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.
கடாயில் எண்ணெய் ஊற்றி கருவேப்பிலை வறுத்து பின் சிறிதாக நறுக்கிய சின்ன வெங்காயம், ஆகியவற்றை நன்றாக வதக்கி நறுக்கிய கத்தரிக்காயை சேர்க்க வேண்டும்.
பாதி வதங்கியதும் நறுக்கிய தக்காளியை சேர்க்க வேண்டும். கலவை நன்றாக வதங்கியதும் மஞ்சள் தூள், மிளகாய் தூள் ஆகியவற்றை சேர்க்க வேண்டும்.
ஊற வைத்த புளித்தண்ணீரை அதில் சேர்க்க வேண்டும். கலவிக்கு தேவையான உப்பை அதில் சேர்க்க வேண்டும்.
பின் கலவையை நன்றாக தயிர் கட்டையை வைத்து கடைய வேண்டும். இப்பொழுது சுவையான கத்தரிக்காய் கொத்து தயார்.






